பூக்கடையை அழிக்க நினைக்கும் விஜயா.. குடும்பத்திற்கு முத்து கொடுத்த அதிர்ச்சி.. கண் கலங்கும் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 5ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் முத்து மீனாவிற்கு பூக்கடையை தொடங்கி வைத்து கொடுத்திருக்கிறார். இதனால் விஜயா கோபத்தில் இருக்கிறார்.தன்னுடைய வீட்டில் இரண்டு பணக்கார மருமகள் இருக்கும்போது வாசலில் இந்த பூக்கடை இருப்பது தனக்கு அவமானமாக இருக்கிறது என்று விஜயா புலம்பி கொண்டு இருக்கிறார்.
இந்தநிலையில் ஸ்ருதி தன்னை முத்து பணம் கொடுத்து கேவலப்படுத்தி விட்டார் என்று கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் முத்துவின் மாற்றத்தை பார்த்து மீனா கண்கலங்கி அழுது கொண்டிருக்க அதற்கு முத்து மேலும் இன்ப அதிர்ச்சிகளை கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது வீட்டிற்குள் வரும் விஜயா என்னடா இவ்வளவு கோபமா பேசிட்டு இருக்க என்று ரவியை திட்ட அதற்கு ஸ்ருதி உங்க பையன் எனக்கு பணம் கொடுத்து அவமானப்படுத்தியிருக்கிறார் என்று சொல்ல அதற்கு விஜயா அது எனக்கும் புரிந்தது மா அவன பத்தி நீ பெருசா எடுத்துக்காத என்று சமாதானப்படுத்துகிறார்.

அதோடு வீட்ல ரெண்டு பெரிய வீட்டு மருமகள் இருக்காங்க எப்படி வாசலிலேயே பூக்கடை வச்சிட்டு இருந்தா நாளைக்கு மலேசியாவில் இருந்து ரோகினி உடைய அப்பா வந்தாலோ இல்ல ஸ்ருதியின் அம்மா வந்தாலோ என்ன நினைப்பாங்க? நம்ம குடும்பமானத்தை வாங்குவது என்று இப்படி பண்றாங்க இதுக்கு ஒரு முடிவு கட்டனும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக மீனா கடையை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்க அவருடைய தங்கச்சி என்ன அக்கா அப்படி பார்த்துட்டு இருக்கா என்று கேட்க அதற்கு மீனா இதெல்லாம் நடக்கும் என்று நான் நினைச்சு கூட பாக்கல.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சந்தோஷப்பட, அதற்கு மீனாவின் அம்மா அந்த பொண்ணு ஸ்ருதி உனக்கு வேலை பாக்குறதுக்கு பணம் கொடுத்தாலாமே என்று கேட்க அதற்கு மீனா ஆமாமா அதை கூட நான் அவர்கிட்ட சொல்லும்போது அவர் சண்டை போடுவார் என்று தான் நினைச்சேன்.

ஆனா இப்படி பண்ணுவாரு எதிர்பார்க்கல என்று சொல்கிறார். அதை தொடர்ந்து மீனாவுடன் பூ கட்டுபவர்கள் முத்துவுக்கு சுத்தி போடு உனக்கு நல்ல புருஷன் கிடைச்சிருக்கு யாருக்கும் எப்படி கிடைக்க மாட்டாங்க என்று பெருமையாக சொல்ல அதைக்கேட்டு மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.
அதை தொடர்ந்து இருவரும் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது 150 ரூபாய் குறையுது என்று மீனா சொல்ல அதற்கு முத்து இல்லையே சரியாத்தான் இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கடைசியாக வண்டிக்காரர் 150 ரூபா தரணும் என்று சொல்லி அதை எழுதி வைக்க பிறகு வரவு செலவு எல்லாம் போக ₹600 லாபம் என்று சொன்னதும் முத்து சந்தோஷப்படுகிறார்.

முதல் நாளே இவ்வளவு லாபம் வந்திருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கு விஜயா வர முத்து முதல் நாளே 600 ரூபாய் லாபம் கிடைச்சிருக்கு என்று கத்தி சொல்கிறார். அதோடு அண்ணாமலை இடமும் இந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அப்போது மீனா இந்த பணத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று யோசிக்க அதற்கு விஜயா இந்த பணத்துல அது ஒரு தாஜ்மஹால் கட்டி அதை வாடகைக்கு விடுங்க என்று நக்கல் அடிக்கிறார். அதற்கு அண்ணாமலை சின்ன தொழில் தான் பெரிய தொழிலா மாறும் என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு முத்து இந்த பணத்தை அப்படியே வச்சுக்கோ இதுபோல இன்னும் ரெண்டு மூணு கடை திறந்து நிறைய ஆளுகளை வைத்து வேலை பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து நாளைக்கு காலையில் 3 மணிக்கு எழுந்து அம்மாவ கூட்டிட்டு போய் பூ வாங்கிட்டு வந்துடுங்க என்று மீனா சொல்ல அதுக்கு முத்து நீயும் நானுமே போய் வாங்கிட்டு வரலாம் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து ரூமுக்கு வந்ததும் மீனா கடை வைத்து கொடுத்தது குறித்து சந்தோஷத்தில் கண்ணீர் விட அதற்கு முத்து இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க என்று சமாதானப்படுத்த அதற்கு மீனா இது சந்தோஷத்தில் அழுகிறது என்று சொல்கிறார்.
அதற்கு முத்து இப்படி சந்தோஷப்படாத கொஞ்சம் சேர்த்து வச்சுக்க. அப்போ தான் அடுத்த லெவலுக்கு போகும்போது இன்னும் சந்தோஷப்பட வேண்டியது இருக்கு என்று சொல்கிறார். பிறகு மீனா முத்துவை கட்டிப்பிடித்துக் கொள்ள முத்துவும் சந்தோஷத்தில் மீனாவை கட்டிக் கொள்கிறார். மறுநாள் காலையில் இரண்டு பேரும் மார்க்கெட்டுக்கு கிளம்பி போய் பூ வாங்கி கொண்டு டீ குடித்து விட்டு வரும் வழியில் மீனா வீட்ல எல்லாரும் வேலைக்கு போறாங்க, அவங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு போயிடலாம் என்று சொல்ல,

அதற்கு முத்து நீ என்ன சொன்னாலும் கேட்கவா போறா, சரி என்று சொல்லி வாங்கிக்கொண்டு கிளப்புகிறார். அந்த நேரத்தில் வீட்டில் விஜயா மீனா காப்பி என்று எவ்வளவு நேரம் கத்திக் கொண்டே இருக்க என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலை நீ கழுதையா குதிரையா கத்தினா கூட பதில் வராது... ஏன்னா மீனா முன்ன மாதிரி இல்ல இப்போ பிசி ஆயிட்டா...
மீனா 4 மணிக்கே எழுந்து பூ வாங்க கடைக்கு போயிட்டா. உனக்கு காபி வேணும்னா நீ தான் போய் போட்டு குடி என்று சொல்ல, அதற்கு விஜயா நான் காபி போடணுமா என்று ஷாக்காக அதற்கு அண்ணாமலை இதுக்கு ஏன் உன் முகம் கசாயம் குடிச்ச மாதிரி ஆகுது என்று நக்கல் அடிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications