முத்துவிடம் பார்க்கில் மாட்டிய மனோஜ்.. ஆனால் விஜயா செய்த கேவலமான வேலை.. ஸ்ருதி கூட இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜனவரி 6ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தபடியே மனோஜ் வேலைக்கு போகாமல் நடித்துக் கொண்டிருக்கும் விஷயம் முத்துவிற்கு தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் மீனா பூக்கடை வைத்திருப்பதால் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார். கடைக்கு வந்த ஆர்டரை கூட கெடுத்து விடுகிறார். அதற்கு ஸ்ருதியும் துணை போகிறார்.

முத்து மீது இருக்கும் கோபத்தில் ஸ்ருதி மற்றும் ரோகிணி இருவரும் சேர்ந்து விஜயாவை மேலும் ஏத்தி விட அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

siragadikka aasai serial December January 6th Episode Manoj stuck in Muthus park

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ஹாலில் இருந்தபடியே இன்னும் காபி வரல, மீனா என்னதான் பண்ணுறான்னு தெரியல என்று கத்தி கொண்டு இருக்க அதற்கு அண்ணாமலை நீ என்னதான் கத்துனாலும் மீனா வர மாட்டா... அவ முன்ன மாதிரி இப்போ இல்ல இப்போ. மீனா பிஸி ஆகிட்டா. முத்து மாதிரி நானும் சொல்லணும்னா அவ தொழில் அதிபர் ஆயிட்டா.

காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு பூக்கடைக்கு போய் பூ வாங்கிட்டு வந்து கடையை திறக்கிற வேலையை பார்க்க ஆரம்பிச்சிருப்பா என்று சொல்கிறார். அதோடு நீயே போய் காப்பி போட்டு குடி என்று சொல்ல விஜயா முகம் மாறுகிறது அதற்கு அண்ணாமலை நக்கல் அடிக்கிறார். பிறகு விஜயா காப்பி போட கிச்சனுக்கு சென்று விட எல்லா வேலையும் என்னையே செய்ய வைத்து விடுவார்கள் போலவே என்று புலம்பி கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் காபி பொடி தேடி க்கொண்டிருக்கும்போது ஒவ்வொருத்தரா வந்து காபி கேட்க விஜயா எரிச்சல் அடைகிறார். பிறகு எல்லாரும் நாங்க வெளியில் சாப்பிட்டுகிறோம் என்று கிளம்பி விடுகிறார்கள். அதை தொடர்ந்து அண்ணாமலையும் நானும் வெளியே போறேன் என்று கிளம்பி விடுகிறார். எல்லோரும் வெளியே சாப்பிட வேண்டும் என்று கிளம்பிட்டாங்க ஆனால் நான் என்ன செய்யறது என்று விஜயா யோசித்துக் கொண்டிருக்கும் போது முத்து டிபன் எடுத்துட்டு வந்து வச்சி எல்லாரையும் கூப்பிட்டு சாப்பிட சொல்லுங்க என்று சொல்கிறார்.

siragadikka aasai serial December January 6th Episode Manoj stuck in Muthus park

அதற்கு எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க என்று விஜயா சொல்ல அதற்கு முத்து உங்களுக்கு தேவையானதை எடுத்து சாப்பிடுங்க மீதம் இருக்கிறதா வெளியில யாருக்காவது கொடுத்தரலாம் என்று சொல்கிறார்.. அதைத்தொடர்ந்து இரவு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று ஒருவர் வந்து கதவை தட்ட விஜயா தூக்கம் கலைந்து கதவை திறக்கிறார். அவர் அவசரமா ரெண்டு மாலை வேண்டுமென்று கேட்க விஜயா கடுப்பாகி மாலை எல்லாம் கிடையாது.

அவங்க ஊருக்கு போயிருக்காங்க என்று கோபமாக கதவை சாத்தி விடுகிறார். மறுநாள் இது தெரிய வர இதை வைத்து முத்து பிரச்சனை செய்கிறார். கஸ்டமர் வந்தா எங்களுக்கு சொல்ல வேண்டியதுதானே? இப்ப உங்களால எங்களுக்கு லாஸ் ஆயிட்டு என்று சொல்ல அதற்கு விஜயா நீ சொல்றதை பார்த்தா என்னையே ஆர்டர் எடுக்க சொல்லுவ போல என்று கேட்க அதற்கு முத்து எடுத்தா என்ன தப்பு என்று பதிலடி கொடுக்கிறார்.

அப்போது ஸ்ருதி அங்கே வந்து நைட் டைம்ல எல்லாம் கஸ்டமர் வந்தீ ஆன்ட்டிக்கு தூக்கம் கெடாதா? அதுக்கப்புறம் அவங்களுக்கு சுகர் பிபி எல்லாம் வந்துடும் என்று சொல்ல விஜயா இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது மனோஜ் தன்னுடைய பங்குக்கு நான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருக்கிறேன். என்னை பார்க்க நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க.

இப்படி வாசல்ல கடையை போட்டுட்டு உட்கார்ந்து இருந்தா அவங்க என்னை என்ன நினைப்பாங்க என் கௌரவம் என்ன ஆகிறது என்ற சீன் போட அதற்கு முத்து மனோஜை திட்டி அனுப்பி விடுகிறார். அதைத் தொடர்ந்து மீனா பூக்கடை வியாபாரத்தை பார்க்க தொடங்க முத்து சவாரிக்காக வந்திருப்பவர்களிடம் பூக்கடை பற்றிய நோட்டீசை கொடுத்து உங்களுக்கு ஏதாவது பூ வேணும்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க என்று சொல்கிறார்.

siragadikka aasai serial December January 6th Episode Manoj stuck in Muthus park

அப்படியே பக்கத்தில் பார்க் இருக்க பார்க்கில் நிறைய பேர் இருப்பாங்க அங்க போய் கொடுக்கலாம் என்று நோட்டீஸ் ஓடு வந்து அங்கு இருக்கும் செக்யூரிட்டியிடம் 50 ரூபாயை கொடுத்து இந்த நோட்டீஸை உள்ளே இருக்கிற எல்லாருக்கும் கொடுத்துருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் அவருடைய பார்க் பிரண்டோட வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருக்க, அதை பார்த்த முத்து மனோஜை வீடியோ எடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+