Exclusive: சிறகடிக்க ஆசை சீரியல் முடிவு எப்போது? அதிரடியாக அறிவித்த எழுத்தாளர்.. அப்போ சம்பவம் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று அந்த சீரியலில் எழுத்தாளர் குரு சம்பத்குமார் ஒன்இந்தியா தமிழுக்கு பிரத்தியேகமாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் எப்போது குடும்பத்திற்கு தெரிய வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு கடந்த வாரத்தில் சின்ன சர்ப்ரைஸ் கிடைத்தது.

ஒரு உண்மைதான்
அதாவது ரோகிணி பற்றிய உண்மை தெரிய வந்தது ஆனால் அதிலும் சில ட்விஸ்ட்டுகள் வைக்கப்பட்டுவிட்டது. அதாவது ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் பற்றிய உண்மைகள் தான் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் ரோகிணி யார் என்ற உண்மை இன்னும் முழுமையாக தெரியவில்லை.
ரோகிணி சொன்ன பெரிய பொய்
ரோகிணி எதற்காக நடித்தார் என்று குடும்பத்தினர் ரவுண்டு கட்டி கேட்ட போது கூட நான் மனோஜை அதிகமாக காதலித்தேன். மனோஜ்ஜை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் அதுவும் அத்தை (விஜயா) எங்க அப்பா பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப அவசரப்பட்டாங்க. எங்க அப்பாவின் சொத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வதற்காக தான் ரொம்ப ஆசை பட்டாங்க. ஆனா எங்க அம்மா இறந்த பிறகு எங்க அப்பா வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு. அதனால எனக்கு அவரை பிடிக்கல.

எதிர்பார்க்காத சம்பவம்
நான் மலேசியாவில் இருந்து இங்கே வந்துவிட்டேன் மீண்டும் மீண்டும் பண விஷயம் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் தான் வேற வழி இல்லாம நான் என் பிரண்டு மூலமா ஒரு ஆளை கூட்டிட்டு வந்து நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்துடுச்சு என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து நாடகத்தை போட்டு விட்டார். அதுபோல ரோகிணி பார்லரை விற்ற விஷயம் இப்போதுதான் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் விஜயா மட்டும்தான் பெரிய அளவில் கோபத்தில் இருக்கிறார்.
நன்றி இல்லாத ரோகிணி
மீனாவிற்கு ரோகிணி மீது அனுதாபம் கூடி இருக்கிறது. ஆனால் தன்னைப் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் போட்டுக் கொடுத்ததற்காக முத்து மற்றும் மீனா மீது ரோகிணி கோபத்தில் இருக்கிறார். இதனால் இவர்களை பழி வாங்குவதற்காக அடுத்து என்ன பிளான் போட போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுபோல ரோகிணியிடம் தீபாரதனை தட்டில் பாட்டி சத்தியம் கேட்டிருக்கிறார்.

அண்ணாமலை கேட்ட கேள்வி
நீ இதுவரைக்கும் இவ்வளவு உண்மைகள் தான் மறைச்சிருக்கியா? இல்லை இன்னும் உண்மைகள் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறாயா? என்று கேட்க, இதற்கு மேல் என்னிடம் எந்த உண்மையையும் கிடையாது ரோகிணி என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்தது, அவருடைய அம்மா உயிருடன் இருப்பது, குழந்தை இருக்கும் விஷயங்கள் தெரியவரும் போது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் நகர்கிறது.

எழுத்தாளர் பேட்டி
இந்த நிலையில் இந்த சீரியலின் எழுத்தாளர் திரு சம்பத்குமார் ஒன் இந்தியா தமிழில் பேசும்போது, எல்லோரும் ரோகிணி எப்போதும் மாட்டுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இப்போது அவர்கள் எதிர்பார்த்தது போல மாட்டினார். ஆனால் அதில் இன்னொரு பூட்டு போட்டு விட்டோம். இன்னும் டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வரப்போகிறது. அதுபோல இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று எல்லாரும் கேட்கிறார்கள்.
சீரியல் முடிவு
இப்போதைக்கு இந்த சீரியல் 700 எபிசோடுகள் தாண்டி ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. நாங்கள் 1300 எபிசோடுகள் வரை எடுக்க வேண்டும் என்று பிளான் வைத்திருக்கிறோம். அதற்குப் பிறகு சீரியலின் கதை மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு மற்றும் டிஆர்பியை வைத்து தான் அதை தொடர்வதா? அல்லது இத்துடன் முடிப்பதா? என்று முடிவு செய்வோம் என்று கூறி இருக்கிறார்.

முத்துவின் ஃப்ளாஷ் பேக்
ஏற்கனவே இந்த சீரியலில் இன்னும் பல முடிச்சுகள் உடைப்படாமல் இருக்கிறது. விஜயாவுக்கு எதற்காக முத்துவை பிடிக்காமல் போனது? முத்துவை எதற்காக பாட்டி வீட்டில் விட்டு வளர்த்தார்கள்? முத்து எதற்காக ஜெயிலுக்கு போனார்? என்ற அவருடைய சின்ன வயது ஃப்ளாஷ் பேக் கதை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.
இனி தான் கதையே இருக்கு
இப்போதைக்கு ரோகிணி பற்றிய ஒரு சின்ன விஷயம் தான் உடைபட்டு இருக்கிறது. இன்னும் அவர் பற்றிய திருமண வாழ்க்கை அதற்கு பிறகு ரோகிணியை மிரட்டிக் கொண்டிருக்கும் சிட்டி மற்றும் ரோகிணியின் பழைய பிஏ பற்றிய விஷயங்களும் குடும்பத்திற்கு தெரிய வரும். இதனால் எப்படியும் இந்த சீரியல் 1500 எபிசோடுகளை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்க கருத்து
இந்த சீரியல் சுவாரஸ்யமாக இருக்கிறதா? அல்லது எப்போதுமே ரோகிணிக்கு மட்டும் தான் பாசிட்டிவாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுபோல இந்த சீரியலில் அடுத்து என்ன நடந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க பாஸ்.
-
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications