Siragadikka Aasai serial: அடுத்தடுத்த படங்களில் ஹீரோவான சிறக்கடிக்க ஆசை சீரியல் நடிகர்.. வெளியான டீசர்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மனோஜ் கேரக்டரில் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நடிகர் ஸ்ரீ தேவா தற்போது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் நடித்த வசூல் மன்னன் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இருக்கிறது.
வில்லத்தனத்துடன் நகைச்சுவையை கலந்த ஸ்ரீ தேவாவின் நடிப்பு சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப் பிரபலத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் 'வசூல் மன்னன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

ஹீரோவா சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
எம்.எல். புரொடக்சன்ஸ் சார்பில் ஆறுமுகம் மாதப்பன் தயாரிக்கும் இந்தப் படத்தை, 'கன்னக்கோல்' திரைப்படத்தின் மூலம் சமூகப் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்லி கவனம் பெற்ற வேல் குமரேசன் இயக்குகிறார். இது அவருடைய இரண்டாவது படமாகும். முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகும் இந்தப் படத்தின் பின்னணியில் தன்னம்பிக்கை குறித்து ஒரு முக்கியமான கருத்தை சொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படத்தின் கதை
வாழ்க்கையில் எதையும் இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதே படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் ஸ்ரீ தேவாவுக்கு ஜோடியாக நிவேதா நடித்துள்ளார். மேலும் வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி, சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையை பரணி அமைத்துள்ளார். ஒரு பாடலை அவரே எழுதியதுடன், இன்னொரு பாடலை நா.ப. சுப்ரமணியம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை சிவகுமார் கவனித்துள்ளதுடன், படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் மேற்கொண்டுள்ளார்.
சிறடிக்க ஆசை சீரியல் மனோஜ்
இப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்துவரும் பலரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் டீசரை பகிர்ந்து ஸ்ரீ தேவாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சீரியல் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சின்னத்திரையில் வில்லன் வேடம் மூலம் அறிமுகமான ஸ்ரீ தேவா, அதே நேரத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பால் குடும்ப ரசிகர்களிடையே தனி இடம் பிடித்தார். இதற்கு முன்பு சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், 'வசூல் மன்னன்' படத்தின் மூலம் முழுநீள கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
காமெடி ஹீரோ
இதைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு காமெடி கதைக்களம் கொண்ட படமும், குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட இன்னொரு படமும் அவரது அடுத்தடுத்த திட்டங்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியலில் கிடைத்த வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு சினிமாவில் முன்னேறும் நடிகர்களின் பட்டியலில் ஸ்ரீ தேவாவும் இணைந்துள்ள நிலையில், 'வசூல் மன்னன்' திரைப்படத்தின் வெளியீடு அவரது திரையுலகப் பயணத்தில் முக்கியமான கட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications