சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி வசந்துக்கும், விமலுக்கும் இப்படி ஒரு தொடர்பா! ரகசியத்தை உடைச்சுட்டாங்க!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி வசந்த் சின்னத்திரை ரசிகர்களுக்கு பேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பற்றி நடிகர் விமல் சொன்ன விஷயங்கள் தான் பலருடைய கவனத்தை பெற்று வருகிறது.
சின்னத்திரையில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலில் நடிக்கும் நடிகர்களை சின்னத்திரை ரசிகர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகள் போல பார்க்க தொடங்கி விடுவார்கள். அதுபோல இப்பொழுது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் வெற்றி வசந்துக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இந்த சீரியலில் முத்து என்ற கேரக்டரில் நடித்து எல்லா தாய்மார்களின் பிள்ளையாக இடம் பிடித்து விட்டார்.

ஒரு அம்மாவின் பாசத்திற்காக இவர் படும்பாடு சொல்லி மாளாது. ஐயோ பாவம் என்று அனுதாபத்தை உருவாக்கி விடுகிறார். அதோடு தன்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல புருஷனாகவும் மனைவியின் குடும்பத்திற்கு சிறந்த மருமகனாகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அப்பாவிற்கு நான் தான் பெஸ்ட் மகன் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் முத்துவை யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.
அதிலும் பல ஆண்களின் பிரதிபலிப்பாகவே இந்த கேரக்டர் இருந்து வருகிறார். அதனால் ஆண்களும் கூட இந்த கேரக்டரோடு தங்களை கனெக்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாக இந்த சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகளை மீனா எப்போதான் வீட்டில் சொல்லப் போகிறார்? இதனால் இந்த மீனா பொண்ணுக்கும் முத்துவுக்குள் சண்டை வருதே என்று பலர் பீல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெற்றி வசந்துக்கு நடிகர் விமல் அவார்ட் கொடுத்து இருக்கிறார்.
நடிகர் விமல் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க தொடங்கி இப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வெற்றி வசந்தத்துக்கு அவார்ட் கொடுத்தது அவரைப் பற்றி பெருமையாக பேசியிருந்தார்.
அதில் நீங்க சிறகடிக்க ஆசை சீரியலில் நடிச்சு பலருடைய நன்மதிப்பை பெற்று இருக்கீங்க. இந்த சீரியலில் உங்க கேரக்டர் பல ஆண்களின் பிரதிபலிப்பாக தான் இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த சீரியலை பார்ப்பதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய மனைவிக்கும் இந்த சீரியல் ரொம்ப பிடிக்கும். அவங்க காலேஜுக்கு போறதுக்கு முன்னாடி இந்த சீரியலை பார்த்துட்டு தான் போவாங்க. அந்த அளவிற்கு நீங்க பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சின்னத்திரை விஜய் சேதுபதியாக வளர்ந்துட்டு வரீங்க என்று பாராட்டினார்.
அதற்கு வெற்றி வசந்த், சார் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்குமானு தெரியல. உங்ககிட்ட ஆரம்பத்தில் இயக்குனர் தாரணி என்பவர் கதை சொல்ல வந்தாரு. அவருக்கு ஸ்கிரிப்ட் எல்லாம் டைப் பண்ணி கொடுத்தது நான் தான். அவர் கூட நானும் உங்களை பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்ல, அங்கிருந்து தொகுப்பாளர் அப்போ விமலுக்கும் வெற்றி வசந்தக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கிறதா? என்று வியந்திருக்கிறார். அது தொகுப்பாளருக்கு மட்டுமல்ல விமலுக்கும் வியப்புதானாம்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications