சிறகடிக்க ஆசை: செல்வத்துக்காக பிரச்சனையில் சிக்கிய முத்து.. மீனா கொடுத்த ஐடியா! மனோஜின் பரிதாப நிலை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் செல்வத்திற்கு முத்து புது பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ்க்கு வந்த பிரச்சனையை முத்துவும் மீனாவும் சரி செய்து வைத்திருக்கின்றனர் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial Feb 20th Episode) இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் ரோகிணியும் டான்ஸ் ஆடும் வீடியோவை பார்த்து விஜயா கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் நிஜம் இல்ல ஏஐ வீடியோ என்று சொல்ல அதை விஜயா நம்பாமல் கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து முதலில் அந்த வீடியோவை பார்த்தது இது நீதானா என்று கேட்கிறார். பிறகு இது ஏ ஐ வீடியோ என்று விஜயாவுக்கு புரிய வைக்கிறார்.
மீனா கொடுத்த பதிலடி
அப்போதும் விஜயா நம்பாமல் இருக்க, இதே போல நீங்களும் அப்பாவும் சின்ன வயசில் வெளிநாட்டில் டான்ஸ் ஆடுற மாதிரி கூட ஒரு வீடியோ எடிட் பண்ண முடியும் நான் பண்ணி காட்டவா என்று கேட்டேன் அப்படியெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று விஜய் சொல்லிவிட்டு, இந்த விஷயம் எல்லாம் கார் ஓட்ற இவனுக்கு எப்படி தெரியும் என்று அதிர்ச்சியோடு கேட்க, அதற்கு மீனா இவருக்கு நிறைய அறிவு இருக்கு படிப்பு இல்லனாலும் பொது அறிவு தெரிஞ்சாலே போதும் என்று பதிலடி கொடுக்கிறார்.
கடன் கேட்ட செல்வம்
அதை தொடர்ந்து செல்வம் வருகிறார். செல்வத்திடம் அருணுக்கு கொடுக்க வேண்டிய அஞ்சு லட்சம் பணம் ரெடி பண்ணியாச்சா என்று முத்து கேட்க, அதற்கு செல்வம் என்னால ரெண்டு லட்சம் தான் ரெடி பண்ண முடியும் ஆனால் இன்னும் மூன்று லட்சம் எப்படி ரெடி பண்ண போறேன்னு தெரியல உன்னால முடிஞ்சா எதாவது ஹெல்ப் பண்ணு என்று சொல்ல, என்னால முடிஞ்சா பண்ணுறேன் ஆனா என்ன முழுசா நம்பி இருக்காத என்று முத்து சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு இந்த விஷயத்தை பற்றி மீனாவிடம் முத்து பேச, மீனா நான் சீட்டு போட்டு வைத்திருக்கிறேன் அதில் ஒரு ஐம்பதாயிரம் இருக்கும் அதை கொடுக்கலாம் என்று சொல்கிறார் .உடனே முத்து, நம்முடைய இரண்டாவது காரை பைனான்ஸ் வைத்து அதை செல்வத்தை கட்ட சொல்லலாம் என்று சொல்ல, மீனாவும் சரி என்று சொல்லிவிடுகிறார்.
சிந்தாமணி மகள் பிளான்
இதைத்தொடர்ந்து முத்து சத்யா வேலை பார்க்கும் பைனான்ஸுக்கு போகிறார். அங்கு சத்யாவிடம் சிந்தாமணியின் மகள் பேசிக் கொண்டிருக்கிறார். இருவரும் மீண்டும் காதலை பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், சிந்தாமணியின் பொண்ணு என்னுடைய அம்மாவை உங்களுக்கு ஒரு நாள் அறிமுகம் பண்ணுறேன் ஆனா நேரடியா உங்கள பேச வைக்க முடியாது, தூரமா நிற்க வைத்து காட்டுறேன். ஏன்னா நம்முடைய காதல் விஷயம் அவர்களுக்கு தெரிஞ்சா கண்டிப்பா அவங்க சம்மதிக்க மாட்டாங்க என்று சொல்ல, சத்யா மீண்டும் இந்த காதல் சரிப்பட்டு வருமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சத்யா கேட்ட கேள்வி
அந்த நேரத்தில் முத்து அங்கு வந்து சத்யாவிடம் காரை பைனான்ஸ் வைக்க வேண்டும், செல்வத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும் சத்யா சரி என்று காரை செக் பண்ணி பார்த்துவிட்டு மூன்று அரை லட்சம் கொடுக்கலாம் என்று சொல்கிறார். அப்போ எனக்கு அவ்ளோ பணம் தேவையில்லை 3 லட்சம் போதும் என்று சொன்னதும் சத்யா நீங்க உங்க நண்பருக்காக இவ்வளவு பெரிய உதவி செய்வது பெருசு மாமா என்று சொல்கிறார்.
அடுத்த பிரச்சனை
அதற்கு முத்து நான் காரை பைனான்ஸ் வைத்து மட்டும்தான் கொடுக்கிறேன் ஆனால் கார் ட்யூவை எப்படியாவது கட்டிட்டுனு செல்வத்திடம் சொல்லிடுவேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். இதை பார்க்கும் போது இதை வைத்துதான் செல்வம் மற்றும் முத்துவிற்கு பிரச்சனை வரப்போகிறது என்று தெரிகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது
.
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: கோமதி நறுக்குன்னு கேட்ட கேள்வி! ஆடி போன பாண்டியன்.. உடையும் குடும்பம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications