சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி முத்து சொன்ன விஷயம்.. கொந்தளித்த மனோஜ்.. விஜயா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை 2025 ஏப்ரல் 11ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் ஏடிஎம் கார்டை விஜயா வாங்கி வைத்துக் கொள்கிறார். இது பற்றி ரவி மற்றும் முத்து மனோஜிடம் போட்டுக் கொடுக்கின்றனர். இதனால் புது பிரச்சனை வெடிக்கிறது.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதா அம்மாவிற்கு உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா வர அம்மா வழக்கம்போல சாப்பிடாமல் வேலைக்கு கிளம்பிட்டீங்களா? என்று கேட்க அதனாலதான் நான் அம்மாவுக்கு ஊட்டி விடுறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அம்மா வேலைக்கு கிளம்பியதும் மீனா சீதாவிடம் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி உட்கார வைக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மீனா கேட்ட கேள்வி

அப்போது நீ பஸ்ல தானே போயிட்டு வர, எந்த ரூட்ல போற என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க சீதாவிற்கு விஷயம் புரிந்து விடுகிறது. நான் இன்னைக்கு ஒருத்தர் கூட வண்டியில் போனதை பார்த்துட்டு தானே இப்படி எல்லாம் கேக்குற அக்கா என்று கேட்க, அதற்கு ஆமாம் என்று சொல்கிறார். அதற்கு சீதா அவர் என்கிட்ட புடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு என்று சொன்னதும் மீனா நீ லவ் பண்றியா என்று கேட்க, சிறிது நேரம் யோசித்து விட்டு ஆமாம் என்று சீதா சொல்கிறார்.

காதலை சொன்ன சீதா

இதனால் முதலில் கோபமான மீனா பிறகு உடனே முகத்தை மாற்றி சிரிக்கிறார். கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன இப்போ லவ் பண்றியா என்று கேட்டதும், அதற்கு சீதா நான் என்னுடைய முடிவை இன்னும் ஸ்ட்ராங்க சொல்லல நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருந்தா மட்டும் தான் முடிவு சொல்லுவேன். இது மட்டும் இல்லாம உனக்கும் மாமா, அம்மா எல்லாருக்குமே புடிச்சிருந்தா மட்டும் தான் என்னோட முடிவை சொல்லுவேன் என்று சீதா சொல்கிறார்.

உண்மையை மறைக்கும் மீனா

அதுவும் சரிதான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. நீ எடுத்திருக்கும் முடிவு சரிதான் என்று சொல்லிவிட்டு சீதா கிளம்புகிறார். மறுபக்கம் அடுத்ததாக மீனா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது முத்து வந்து ரொமான்ஸ் செய்கிறார். பிறகு இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சீதா பற்றி பேசுகிறார்கள். அப்போது பிரண்ட் சீதாவை டிராப் பண்ணுனா என்று சொன்னா அவளுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்கலாம் என்று முத்து, சொல்ல அதற்கு மீனாவும் சரி என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்.

மிரட்டிய விஜயா

அந்த நேரத்தில் விஜயா சத்தமாக பேசியதும் கிச்சனிலிருந்து முத்துவும் மீனாவும் வெளியே வருகிறார்கள். அப்போது ரோகிணி இடம் எங்க போயிட்டு வர என்று விஜயா கேட்க, வேலைக்கு போயிட்டு வரேன் என்று சொன்னதும் எவ்வளவு சம்பளம் கிடைச்சது என்று கேட்கிறார். அதற்கு ரோகினி 25000 கிடைத்தது அது அக்கவுண்ட்ல இருக்கு என்று சொன்னது உன் ஏடிஎம் கார்டு என்கிட்ட கொடு என்று கேட்க சிறிது நேரம் யோசித்து விட்டு ரோகிணி வேறு வழியில்லாமல் கொடுக்கிறார்.

விஜயா கேட்ட கேள்வி

பிறகு பின் நம்பர் சொல்லு என்று கேட்டதும் உங்க பையனுடைய பிறந்தநாள் தான் என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் போய் இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது என்று ரோகிணி புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் வருகிறார். மனோஜ் டயர்டாக வரும்போது விஜயா இன்னைக்கு ரோகிணியை பார்த்தியா? கடைக்கு வந்தாளா? என்று விசாரணை நடத்துகிறார்.

மனோஜ் பதிலடி

நான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு மனோஜ் ரூமுக்கு வரும்போது இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? உங்க அம்மா என்னுடைய ஏடிஎம் கார்டு வாங்கி வச்சுக்கிட்டாங்க. இதெல்லாம் தப்பு இல்லையா என்று ரோகிணி கேட்க, இந்த வீட்ல இருக்கிறவங்க எவ்வளவோ பெரிய தப்பு பண்ணுறாங்க அதெல்லாம் ஒரு தப்பு இல்ல என்று அசால்டாக சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபப்பட்ட மனோஜ்

அந்த நேரத்தில் ரவி, ஸ்ருதி, மீனா, முத்து எல்லோரும் மாடியில் விஜயா நடந்து கொண்ட விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ரவி மனோஜ்க்கு போன் போட்டு மேலே கூப்பிடுகிறார். அப்போது அம்மா அண்ணியோட ஏடிஎம் கார்டை வாங்கி வச்சிருக்கிறது சரியில்ல. நீதான் அம்மா கிட்ட பேசணும் என்று சொல்ல, அம்மா எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும் என்று மனோஜ் சொல்லி விடுகிறார். அப்போது முத்து மற்றும் மனோஜ்க்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் மனோஜ் கோபப்பட்டு மாடியில் இருந்து கீழே இறங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+