சிறகடிக்க ஆசை: சந்தேகப்படும் ஸ்ருதி.. ரகசியத்தை உளறிய விஜயா! மீனாவுக்கு தெரிய வந்த உண்மை
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 12ம் தேதிக்கான எபிசோடில் மீனா ஏமாந்த விஷயத்தை கேட்டு விஜயா சந்தோஷப்படுகிறார். அதே நேரத்தில் விஜயாவின் நடவடிக்கையை பார்த்து ஸ்ருதிக்கு சந்தேகம் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிந்தாமணி விஜயாவுக்கு போன் போட்டு இனிமே மீனா இந்த பக்கம் வரவே மாட்டா என்று சொல்ல, விஜயாவுக்கு புரியாமல் இருக்கிறார். அதற்கு சிந்தாமணி மீனாவுக்கு ரெண்டு லட்சம் நஷ்டத்தை நான் தான் உருவாக்கினேன் என்று நடந்த விஷயத்தை சொல்ல, அதை கேட்டதும் விஜயா சந்தோஷமாகிறார்.

சிந்தாமணி பிளான் சக்சஸ்
எது எப்படியோ அவ இரண்டு லட்சம் நஷ்டம் ஆயிட்டா எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா? அவ பணம் சம்பாதிச்சா மதிக்கவே மாட்டேங்குறா என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு ரவிக்கு போன் போட்டு இன்னைக்கு வீட்ல எதுவும் சமைக்க வேண்டாம் நீ ரெஸ்டாரண்டில் இருந்து விதவிதமா சாப்பாடு எடுத்துட்டு வா என்று சொல்ல ரவி என்னமா சொல்லுறீங்க எதுவும் சந்தோஷமான விஷயமா? நீங்க இப்படி சொல்ல மாட்டீங்களே, வீட்ல மீனா அண்ணி சமைச்சாங்கன்னா அது வேஸ்ட்டா போயிடுமே என்று சொல்கிறார்.
விஜயா சொன்ன விஷயம்
அவ இன்னைக்கு சமைக்க மாட்டா. நான் சொல்லிடுறேன் நீ வெளியிலிருந்து சாப்பாடு எடுத்துட்டு வா என்று சொல்கிறார். பிறகு இது பற்றி ஸ்ருதியிடம் சொல்ல, உங்க அம்மா இவ்வளவு சந்தோசமா இருக்காங்கன்னா முத்து மீனாவுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் தான் இவங்க இவ்வளவு சந்தோஷப்படுவாங்க என்று சொல்ல, இதை கேட்டு ரவியும் எனக்கும் சந்தேகமா தான் இருக்கு என்று சொல்கிறார்.
ஏமாற்றும் மேனேஜர்
மறுபக்கத்தில் மீனா மண்டபம் ஓனர் வீட்டுக்கு சென்று மேனேஜர் ஏமாற்றிய விஷயத்தை சொல்ல, அவர் மேனேஜரை கூப்பிட்டு விசாரிக்கிறார். ஆனால் மேனேஜர் வழக்கம் போல நான் பத்திரத்தில் எழுதி வாங்கிட்டு பணத்தை கொடுத்துட்டேன். இந்த பொண்ணு ஏமாத்துது. அவ புருஷன் ஒரு குடிகாரன் அவன் பணத்தை எடுத்துட்டு போய் செலவு பண்ணி இருப்பான் அதுக்காக இந்த பொண்ணு நம்மகிட்ட வந்து காசு கேக்குது என்று சொல்ல மண்டபம் ஓனர் எதுவும் பேசாமல் காரில் ஏறி சென்று விடுகிறார்.
சந்தோஷத்தில் விஜயா
மீனா அங்கு கெஞ்சி கொண்டிருந்தாலும் பணம் கிடைக்காமல் இருக்கிறார். மறுபக்கத்தில் விஜயா வீட்டில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருக்கிறார். அப்போது ரவி சாப்பாட்டோடு வீட்டுக்கு வர என்னம்மா விஷயம் என்று கேட்கிறார். அதற்கு விஜயா ஒன்னும் இல்லை என்று சமாளித்து விடுகிறார்.
சந்தேகப்படும் ஸ்ருதி
பிறகு எல்லாரையும் சாப்பிட கூப்பிட அந்த நேரத்தில் மீனா வருகிறார். அப்போது மீனா சோகமாக வர ஸ்ருதி என்ன டயர்டா இருக்கீங்க என்று கேட்க, வேலை அதிகமா செஞ்சது டயர்டா இருக்கு வேற ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாளித்து விடுகிறார். எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மீனா வருத்தத்தில் சோகமாக இருக்கிறார். அப்போது ரோகிணி மீனாவை பார்த்து சந்தேகப்பட்டு விஜயாவிடம் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.
ரோகிணியின் பயம்
அதற்கு சிந்தாமணி மீனாவை ஏமாற்றிய விஷயத்தை விஜயா சொல்கிறார். அதைக் கேட்டதும் ரோகிணி இவங்க ரொம்ப பொல்லாதவங்களா இருப்பாங்க போல, ஒன்னும் செய்யாத மீனாவையே இவ்வளவு பாடா படுத்துறாங்க நம்ம விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
மீனா கண்ட கனவு
அதைத்தொடர்ந்து ஸ்ருதி மீனாவிடம் வந்து என்ன பிரச்சனை என்று விசாரிக்க, மீனா அவரிடமும் எதுவும் இல்லை என்று சொல்லாமல் மறுத்துவிடுகிறார். பிறகு மீனா தூங்கிக் கொண்டிருக்கும் பொது முத்து வந்தது போலவும், தான் மண்டபம் மேனேஜரிடம் ஏமாந்த விஷயத்தை சொல்வது போலவும் கனவு காண்கிறார். அந்த கனவில் முத்து மண்டப மேனேஜரை போட்டு அடிப்பது போன்று காண்பதால் முத்துவிடமும் இதை சொல்லாமல் மறைக்க வேண்டும் என்று மீனா முடிவு செய்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications