சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு நடந்த ஆக்சிடெண்ட்.. ஸ்ருதி அம்மாவுக்கு கிடைத்த ஆதாரம்.. சிக்கிய ரோகிணி.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 12ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் கார் ஆக்சிடென்ட் ஆகிறது. அதே நேரத்தில் ஸ்ருதியின் அம்மா முத்து பற்றிய ஆதாரத்தை எடுக்கிறார். அதுபோல ரோகிணிக்கு மனோஜால் பிரச்சனை வருகிறது என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவின் கார் மீது முட்டை உடைந்ததால் முத்துவும் மீனாவும் அதை சுத்தம் செய்கிறார்கள். பிறகு முட்டை நாற்றம் வருவதால் முத்து என்ன செய்வது என்று புரியாமல் யோசித்து கொண்டு இருக்கும்போது ரவி என்னதான் கழுவினாலும் முட்டை ஸ்மெல் போகாது என ஸ்பிரே என கார் சாவியை வாங்கி காருக்குள்ளேயும் மற்றும் வெளியேயும் ஸ்பிரே அடித்து விடுகிறார்.

ஆக்சிடென்ட்
மறுபக்கத்தில் முத்துவை சிட்டியின் ஆட்கள் வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிட்டி போன் செய்து அங்கு என்ன நடக்கிறது என்று விசாரிக்கிறார். அந்த நேரத்தில் ரவி சாவியை எடுத்துக் கொண்டு சென்று விட உள்ளே வந்து முத்து மீனாவிடம் சாவியை கேட்கிறார். மீனா நான் ஏற்கனவே உங்ககிட்ட தந்துட்டேன் என்று சொல்ல, இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். பிறகு ரவியும் அங்கு வந்து சாவியை கொடுத்துவிட்டு போகிறார்.
முத்துவுக்கு பிரச்சனை
அதை தொடர்ந்து முத்து கார் ஸ்டார்ட் பண்ணுகிறார். முதலில் கொஞ்ச நேரத்துக்கு ஸ்டார்ட் ஆகாமல் இருக்கிறது பிறகு முத்து காரில் சென்று கொண்டிருக்கும்போது சிட்டியின் ஆட்கள் முத்துவிடம் வாக்குவாதம் செய்வது போல காரில் உரசி விட்டுப்போக முத்து அதனால் காரை வேகமாக கொண்டு போகிறார் அப்போது கார் ப்ரேக் பிடிக்காமல் இருக்கிறது. அப்போது ஸ்கூல் ஆட்டோ எதிரே வரும்போது அந்த ஆட்டோவில் மோதாமல் இருக்க முத்து காரை இன்னொரு பக்கமாக திருப்பும் போது போலீஸ் வண்டியை போய் இடித்து விடுகிறார்.டிராபிக் போலீஸ் அருண் முத்து வேண்டும் என்று என் பைக் மீது மோதிட்ட என்று அவரிடம் வாக்குவாதம் செய்கிறார்.
ஸ்ருதி அம்மா செய்த செயல்
அப்போது அங்கு வந்த ஸ்ருதியின் அம்மா இதையெல்லாம் வீடியோ எடுக்கிறார். பிறகு போலீஸ் முத்துவை ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். இன்னொரு போலீசை காரை எடுத்துக் கொண்டு வர சொல்ல காரை எடுக்காதீங்க சார் பிரேக் பிடிக்கல என்று முத்து கத்திக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கேட்காமல் டிராபிக் போலீஸ் அருண் முத்துவை கூட்டிக்கொண்டு போகிறார்.
ரோகிணி வாக்குவாதம்
மறுபக்கத்தில் ரோகிணி ஷோரூமில் ஒரு டிவியை விற்றுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த மனோஜ் நீ எதுக்காக இங்க வந்த எங்க அம்மா உன்னை வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று வாக்குவாதம் செய்கிறார். அதற்கு ரோகிணி நாம இப்படியே பேசாம இருந்தா நிரந்தரமா பிரிஞ்சிடுவோம் என்று சொல்ல, எங்க அம்மா சொன்னா எதுவும் நல்லது தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications