சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி முத்து கண்டுபிடித்த உண்மை.. ஒரே வார்த்தையில் அடங்கிய விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் மகன் பற்றி முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. அதே நேரத்தில் ரோகிணியை புரிந்து கொண்ட மனோஜ் ரோகிணி பற்றி பெருமையாக பேசுகிறார். அதுபோல முத்துவும் மீனாவும் புதியதாக டிரைவிங் ஸ்கூல் தொடங்குகிறார்கள்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வித்யா முருகனிடம் இருந்து போனை வாங்கி வைத்திருக்கிறார். அதைப்பற்றி மீனாவுக்கு போன் பண்ணி பேசுகிறார். நான் போனை கேட்டதும் அவர் என்னிடம் உடனே தந்து விட்டார். நான்தான் உங்களுடைய போனை அட்டென்ட் பண்ணுவேன் என்று சொன்னேன். அதற்கும் சரி என்று சொல்லிவிட்டார் என்று சொன்னதும், மீனா அப்படி என்றால் அவர் நல்லவராக தான் இருப்பார்.

Siragadikka aasai serial vijay tv

நீங்க நாளைக்கு அவரிடம் ஃபோனை கொடுத்துவிட்டு பேச ஆரம்பிங்க என்று ஐடியா கொடுக்கிறார். அதற்கு வித்யா நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் அப்படியே சொல்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ரோகிணியின் அம்மா வித்யா வீட்டிற்கு வருகிறார். பிறகு அங்கு அவசர அவசரமாக வந்த ரோகிணி நகைகளை வாங்கிக்கொண்டு வித்யாவை கூட்டிக்கொண்டு அடகு வைக்கப் போகிறார்.

Siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூம்க்கு டாக்ஸ் கட்டாததால் மீண்டும் இன்கம் டேக்ஸ் ஆபிஸர்கள் வந்து பணத்தை கட்டவில்லை என்றால் ஷோரும்க்கு சீல் வைக்கப் போறோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி ஓடிவந்து டேக்ஸ் கட்டி விடுகிறார். அடுத்ததாக அவர்கள் இனிமேல் டேக்ஸ் சரியாக கட்டுங்கள் இல்லையென்றால் சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டி விட்டு போகிறார்கள்.

அதற்கு பிறகு தன்னுடைய மானத்தை காப்பாறியதற்காக ரோகிணிக்கு மனோஜ் நன்றி சொல்கிறார். அதோடு காசு உனக்கு எப்படி வந்தது என்று மனோஜ் கேட்க, அதற்கு ரோகிணி நான் கடன் வாங்கினேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சியாகுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

நான் எதற்காக கடன் வாங்குகிறேன் என்று கேட்கிறாயே இது போலத்தான் நீ பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கும்போது நான் கடன் வாங்கி இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்போது மனோஜ் இனி எனக்கு நீ உனக்கு நான் தான். எனக்காக வேறு யாரும் இவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. நீ தான் என்னை எல்லா பிரச்சனையில் இருந்தும் காப்பாற்றி இருக்கிற என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ரோகிணி இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல வேண்டாம் சொன்னா முத்து கிண்டல் பண்ணுவான் என்று சொல்கிறார். அதோடு உங்க அம்மா கிட்ட கூட சொல்லாத என்று சொல்ல மனோஜ் திருதிருவென முழிக்கிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி வீட்டிற்கு வருகிறார். அடுத்ததாக முத்து வீட்டிற்கு வந்து மீனாவிடம் க்ரிஷை பார்த்தது பற்றி சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

இதை ரோகிணி ஒளிந்து இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து கிரிஷ் உடைய அம்மா துபாயில் இருந்து வந்துட்டாங்களாம்‌. அவங்க தான் க்ரிஷை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க. ஆனா அந்த க்ரிஷும் அவனுடைய பாட்டியும் முன்பு போல பேசல ஏதோ பயப்படுறாங்க என்று சொல்லிக்கொண்டு அவங்க இருக்கிற இடம் இப்போ எனக்கு தெரியும். ஒரு நாள் உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி கோபப்படுகிறார்.

அடுத்ததாக ரவியும் ஸ்ருதியும் வருகின்றனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் விஷயத்தை சொன்னதும் முத்துவும் மீனாவும் பாராட்டுகின்றனர். பிறகு அடுத்த நாள் காலையில் தாங்கள் டிரைவிங் ஸ்கூல் தொடங்கப் போவதாக சொல்லி ஃபங்க்ஷனுக்கு வந்து விட வேண்டும் என்று அழைக்கிறார்கள்.

மறுநாள் காலையில் முத்து டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிப்பதற்காக வாசலில் பூஜையை வைத்து தொடங்குகிறார். அப்போது அண்ணாமலையின் பெயரைதான் டிரைவிங் ஸ்கூலுக்கு வைத்திருக்கிறது. அதை பார்த்து அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். ஆனால் விஜயா வேண்டாத வெறுப்பாக நின்று கொண்டிருக்கிறார்.

அப்போது நாங்க ஷோரூமுக்கு உங்க பெயரை வச்சோம் என்பதற்காக இவன் அப்பா பெயரை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை விஜயாவிடம் நம்ம பையன் முன்னுக்கு வரான் நீ தான் ஆரத்தி எடுத்து ஆசீர்வாதம் பண்ணனும் என்று சொல்கிறார். முதலில் விஜயா மறுத்தாலும் அண்ணாமலை சொன்ன வார்த்தையை கேட்டு வேறு வழியில்லாமல் ஆரத்தி எடுக்கிறார்.

பிறகு முத்துவின் டிரைவிங் ஸ்கூலில் மீனா முதலாவதாக ஸ்டூடண்டாக சேருகிறார். அதற்கு பணம் கட்டணும் என்று சொல்ல தன்னுடைய செக் புக்கை அண்ணாமலை இடம் கொடுத்து முத்துவிடம் கொடுக்க சொல்கிறார். அப்போது செல்வம் உங்க குடும்பமே பெரிய குடும்பம் அடுத்தடுத்து இன்னும் சிலர் சேர்த்தால் போதும் என்று சொல்ல, ஸ்ருதியிடம் அண்ணாமலை உனக்கு கார் ஓட்ட தெரியுமா என்று கேட்கிறார்.

அதற்கு ஸ்ருதி எனக்கு கார் ஓட்ட தெரியாது இன்ட்ரஸ்ட் இல்ல என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி நீங்க கார் வாங்குனா என்ன பண்ணுவீங்க என்று கேட்க, ரவி ஓட்டுவான். இல்ல டிரைவர் வைப்போம் என்று சொல்கிறார். அப்போது விஜயா அதான் மீனா பழகுறாளே அவளையே டிரைவரா வச்சுக்கோங்க என்று அசிங்கப்படுத்துகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+