சிறகடிக்க ஆசை: ஸ்ருதிக்கு கிடைத்த ஆதாரம்.. முத்து பற்றி அருணுக்கு தெரிந்த உண்மை.. அண்ணாமலை சொன்ன ஃபிளாஷ்பேக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 13ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து பற்றிய உண்மைகள் அருணுக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் முத்துவை அரெஸ்ட் செய்த வீடியோவை ஸ்ருதியின் அம்மா குடும்பத்தினரிடம் காட்டி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜும் ரோகிணியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகிணி எனக்கு உங்க வீட்ல மரியாதையே இல்ல சாப்பிட விடமாட்டாங்க உன்கிட்ட பேச விட மாட்டுக்காங்க. இதை பத்தி உனக்கு எந்த கவலையும் இல்லையா? என்று ரோகிணி திட்டிக் கொண்டிருக்கும் போது நீ எதுக்கு பொய் சொன்ன என்று மனோஜ் ரோகிணியை மடக்கி கேட்கிறார். அதற்கு உங்க அம்மா கிட்ட பேராசை இருக்கு அதனால தான் நான் பொய் சொன்னேன் என்று சமாளிக்கிறார்.

மனோஜ் கேட்ட கேள்வி
ஆனால் மனோஜ் விடாமல் சரி நீ அவங்க கிட்ட பொய் சொன்ன சரி, அப்போ எதுக்கு என்கிட்ட பொய் சொன்னா? நான் உனக்காக அவங்க கிட்ட தலை குனிஞ்சு நின்னேன். உனக்காக நான் எல்லாம் எனக்கு தெரியும்னு பழியை ஏத்துக்கிட்டேன். ஆனால் நீ என்கிட்ட இப்ப வரைக்கும் உன்ன பத்தி எந்த உண்மையையும் சொல்லலையே என்று கேட்டதும் ரோகிணி அமைதியாக இருக்கிறார். பிறகு மனோஜ் எங்க அம்மாவை சமாதானப்படுத்து என்று சொல்ல, ஏன் நீ பண்ண மாட்டியா என்று ரோகிணி கேட்கிறார். அதற்கு நான் பொய் சொல்லல என்று மனோஜ் சொல்கிறார்.
கோபப்பட்ட ரோகிணி
அப்போது மனோஜ் இதற்கு முன்பு செய்த தப்புகளை எல்லாம் ரோகிணி சொல்லிக் கட்டிக் கொண்டிருக்கிறார். நீ ஜீவாவிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த, அப்புறம் மீனாவின் நகைகளை மாற்றி வைத்த, இப்படி நீ மட்டும் எவ்வளவோ தப்பு பண்ணி இருக்க ஆனா உங்க அம்மா உன்னை மட்டும் ஏத்துக்குறாங்க என்னை ஏத்துக்க மாட்டாங்குகாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இதுதான் உன் பிரச்சனை. உன் தப்பா சொன்ன, நீ அடுத்தவங்க மேல பழியை போட்டுக்கிட்டு இருக்கிற, பழைய விஷயத்தை எல்லாம் தோண்டி கிட்டு இருக்கிறா என்று மனோஜ் கோபப்படுகிறார்.
ரோகிணிக்கு கிடைத்த ஆதாரம்
அந்த நேரத்தில் ரோகிணிக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில் முத்துவை கைது செய்த வீடியோ இருக்கிறது. அதை பார்த்ததும் நான் மட்டும் தப்பு செய்கிறேன் என்று ஆதாரம் காட்டுறாங்க, இப்போ முத்து தப்பு பண்ணி இருக்காரு அவரை போலீஸ் கைது செஞ்சு இருக்குது அந்த வீடியோவை ஸ்ருதியின் அம்மா தான் எனக்கு அனுப்பி வச்சிருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மனோஜ் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மீனாவுக்கு தெரிந்த உண்மை
மறுபக்கத்தில் ஸ்ருதிக்கும் அவருடைய அம்மா வீடியோவை அனுப்ப அதை ரவியிடம் காட்டுகிறார். அடுத்ததாக போலீஸ் ஸ்டேஷனில் வைத்து முத்துவின் லைசன்ஸ் அருண் கேன்சல் செய்ய வைக்கிறார். அப்போதும் முத்து எனக்கு நிஜமாகவே பிரேக் பிடிக்கல என்று சொல்ல அதை நம்பாமல் தன்னை வேணும்னு இடிக்க வந்ததாக பழி போட அதை மேலதிகாரிகளும் நம்பி அருணுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். பிறகு முத்தோட காரை கொடுக்காமல் கோர்ட்டில் பார்த்துக்கொள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அந்த நேரத்தில் முத்துக்கு மீனா போன் செய்கிறார்.
பழிவாங்கிய அருண்
அப்போது போலீஸ் ஸ்டேஷனில் முத்து இருக்கிற விஷயம் மீனாவிற்கு தெரிய வருகிறது. உடனே மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து என்ன நடந்தது என்று விசாரிக்க, முத்து நடந்த பிரச்சனைகளை சொல்கிறார். அப்போது கூட மீனா முத்துக்காக சப்போர்ட் செய்து போலீசிடம் வாக்குவாதம் செய்கிறார். ஆனால் அவர்கள் நீங்கள் எதுவாயிருந்தாலும் கோர்ட்டில் பாத்துக்கோங்க என்று சொல்லிவிடுகிறார்கள். அடுத்ததாக முத்துவின் காரை ஒரு கான்ஸ்டபிள் எடுத்துக் கொண்டு வருகிறார். அவருடைய கைகளில் கட்டு போட்டு இருக்கிறது.
அருணுக்கு தெரிந்த உண்மை
அதை பார்த்ததும் அருண் என்ன ஆச்சு என்று விசாரிக்க, அந்த பையன் சொன்னது உண்மைதான். அவனுடைய கார் பிரேக் பிடிக்கல என்று சொல்ல சப்போஸ் என் வண்டியில இடிச்ச பிறகு கூட பிரேக் பிடிக்காமல் இருக்கலாமே என்று சொல்ல, இல்ல அவங்களோட வண்டியில் ஒயர் கட் பண்ணி ஆயுளை எல்லாம் கீழே போக வச்சிருக்காங்க, இது யாரோ பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்று சொல்ல, அருண் சரி இந்த விஷயத்தை அவனுக்கு தெரியாம பார்த்துக்கணும் அவன் என்கிட்ட அடிக்கடி பிரச்சினை பண்ணிக்கிட்டே வரான் அதனால ஆறு மாசத்துக்கு அவனுக்கு லைசென்ஸ் இல்லாமல் இருக்கட்டும் அப்பதான் அவனுக்கு என் மேல பயம் வரும் என்று சொல்கிறார்.
அண்ணாமலை ஃப்ளாஷ்பேக்
மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வந்து இப்படி ஒரு பிரச்சனை செய்தவர்கள் இருக்கிற வீட்ல என் பொண்ணு இருப்பது எனக்கு பயமாயிருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் விஜயா இவனுக்கு ஜெயிலுக்கு போற விஷயம் ஒன்னும் புதுசு கிடையாது, சின்ன வயசிலேயே போனவன் தானே என்று பேசும்போது அண்ணாமலை அவன் செய்யாத தப்புக்காக தான் அப்போ போனான் என்று சொல்கிறார்.
மீனாவின் கோபம்
பிறகு பழைய விஷயங்களை விட்டு விட வேண்டும் என்று நான் அமைதியாக இருக்கிறேன். அதை சொல்ல வச்சிறாத என்று விஜயாவை மிரட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வருகிறார். முத்துவிடம் ஸ்ருதியின் அம்மா வாக்குவாதம் செய்ய அதற்கு மீனா நாங்களே பல பிரச்சனைகளில் இருக்கிறோம், தேவை இல்லாம பேசாதீங்க என்று கண்டிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications