சிறகடிக்க ஆசை: சத்யாவை தேடி போன இடத்தில் கண்ட விஷயம்.. அருண் செய்த உதவி! கடைசியில் செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 15ஆம் தேதிக்கான எபிசோடில் சத்யாவை சிட்டி தான் கடத்திக் கொண்டு போயிருக்கிறார் என்ற உண்மை முத்துவிற்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் சத்யாவை கடைசியில் முத்து கண்டுபிடிக்கிறார் இந்த நிலையில் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிசிடிவி கேமராவில் சிட்டி தான் சத்யாவை கடத்தி இருப்பது என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார். பிறகு அதை வீடியோவாக எடுத்துவிட்டு சத்யாவின் செல்போன் எண் எங்கே கடைசியாக ஆஃப் ஆகி இருக்கிறது என்று தெரிந்தால் கண்டிப்பாக அவனை கண்டுபிடித்துவிடலாம் என்று சைபர் கிரைம் ஆபீசுக்கு போக போவதாக முத்து சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

முத்து கொடுத்த நம்பிக்கை

அப்போது மீனா நானும் வரேன் என்று சொல்ல, நீ வேண்டாம் நான் கண்டிப்பா சத்யாவை கூட்டிட்டு வந்து எக்ஸாம் எழுத வைப்பேன் என்று முத்து வாக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து போகிறார். மறுபக்கத்தில் சீதா அருணுக்கு ஃபோன் போட்டு வீட்டில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல, அருண் பயப்படாத நான் சைபர் கிரைமில் உன்னுடைய தம்பி நம்பர் அனுப்பி அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்று லொகேஷன் அனுப்புறேன் என்று போனை வைக்கிறார்.

தவிக்கும் முத்து

முத்து சைபர் கிராம் ஆபீசில் சொல்லி விசாரிக்க அவர்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் வேணும் நீங்க போய் கம்ப்ளைன்ட் கொடுங்க, அவங்க போன் பண்ணுவாங்க அப்புறம் தருகிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள். அந்த நேரத்தில் அருண் சத்யா இருக்கும் லொகேஷன் வாங்கி விடுகிறார்.

உதவி செய்த போலீஸ்

உடனே சீதாவுக்கு போன் பண்ணி நான் சத்யா உடைய போன் ஆஃப் ஆகி இருக்கிற இடத்தோட லொகேஷன் அனுப்பி இருக்கிறேன், இனி நான் அங்கே போய் பார்க்கிறேன் என்று சொல்ல அதற்கு வேண்டாம் எங்க மாமா பாத்துக்குவாரு. ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டால் நான் உங்களுக்கு போன் பண்ணுறேன் என்று சொல்லிவிட்டு முத்துக்கு லொகேஷன் அனுப்பி போன் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

முத்து கேட்ட கேள்வி

அப்போது முத்து உனக்கு யார் சொன்னது என்று கேட்க என் பிரண்டு மூலமாக தெரிஞ்சுகிட்டேன் என்று சமாளித்து விடுகிறார். சரி என்று முத்துவும் அந்த லொகேஷனுக்கு போகிறார். அப்போது அந்த நேரத்தில் மீனா வந்து சீதாவிடம் விசாரிக்கிறார். அதைக் கேட்டதும் சந்திரா கோபப்படுகிறார். என்கிட்ட சத்யா காலேஜுக்கு போயிருக்கான் என்று தானே சொன்னே? இவ்வளவு நடந்து இருக்கு நீ ஏன் என்கிட்ட சொல்லல என்று அழுது கொண்டு இருக்க, நீ பயந்துடுவேனு தான் மா உன்கிட்ட சொல்லல என்று சீதா சொல்ல நீ என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் என்று மீனா கோபப்படுகிறார்.

கதறி அழும் அம்மா

அதற்கு மாமா தான் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாரு என்று சீதா சொல்கிறார். அப்போது என் பையனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே இன்னைக்கு ஒரு எக்ஸாம் தான் இருக்கு இதை எழுதி இருந்தானா அவன் தலையெழுத்து மாறிடும்னு நினைத்தேனே ஆனா இப்போ அவனை காணலையே என்று சீதாவின் அம்மா புலம்பிக் கொண்டிருக்கிறார். மீனாவும் சீதாவும் அம்மாவை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

மிரட்டும் சிட்டி

மறுபக்கத்தில் முத்து லொகேஷன் தேடி அலைகிறார். அந்த நேரத்தில் சத்யா சிட்டியிடம் தயவு செய்து என்னை விட்டுடு நான் இந்த எக்ஸாம் எழுதி பாஸ் ஆனதா என் குடும்பத்தோட கனவு நிறைவேறும் என்று சொல்ல அதற்கு சிட்டி நீ வேலைக்கு போனா 30, 40 ஆயிரம் சம்பாதிப்ப. நான் அதைவிட டபுள் மடங்கா தரேன். என்கிட்ட கணக்கு பாரு.

முத்து கண்டுபிடித்த விஷயம்

இப்போ உன்னை ரெண்டு மூணு மணி நேரம் நான் வச்சிருந்து விட்டுவிடுவேன் இந்த எக்ஸாம் நீ எழுதக்கூடாது அவ்வளவுதான் என்று சொல்ல சத்தியா கோபப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது உனக்கு போதை ஊசி போட்டு அனுப்பிட்டு போலீசுக்கு கால் பண்ணி சொல்லிடுவேன் நீ மீண்டும் கிரிமினல் ஆகிடுவ என்று மிரட்டி ஊசி போட வருகிறார். அந்த நேரத்தில் முத்து சத்யாவை அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

வெளுத்த முத்து

கடைசியாக சத்யா சத்தம் போடும் சத்தத்தை கேட்டு முத்து அந்த ரூமிற்குள் போய் விடுகிறார். போய் சிட்டியை போட்டு அடிக்க அப்போது சிட்டி ஏன்டா இப்படி பண்ணிக்கிட்டே இருக்க, எந்த இடத்திற்கும் சரியா கண்டுபிடித்து வந்துடுற என்று திட்டிகொண்டு இவன் கதையை இன்னைக்கு முடிச்சுடுங்க என்று அடி ஆட்களிடம் சொல்ல அப்போது முத்து அடியாள்களையும் சிட்டியையும் போட்டு அடித்து துவைத்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+