சிறகடிக்க ஆசை: முத்துவை காப்பாற்றிய மீனா.. ஆனால், சிட்டியால் சிக்கும் ரோகிணி.. இனி பிரச்சனை விஜயாவிற்கு தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 17ஆம் தேதிக்கான எபிசோடில் முத்து மீது தவறில்லை என்ற உண்மையை மீனா இன்ஸ்பெக்டரிடம் நிரூபிக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி விஜயாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சிட்டியிடம் வசமாக சிக்குகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சிட்டி ஒரு நகையை கொடுத்து ரோகிணியிடம் வாங்கிக்க சொல்கிறார். அந்த நகைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கொடுங்க போதும் என்று சிட்டி சொன்னதும் முதலில் வேண்டாம் என்று ரோகிணி சொல்கிறார். பிறகு இப்போதைக்கு என்னிடம் பணம் இல்லை என்று ரோகிணி சொல்ல நீங்க பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்லுங்க என்று சிட்டி சொல்லி அனுப்புகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியின் பிளான்

பிறகு வெளியே வந்ததும் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு சிட்டி ஒரு நகையை வாங்கிக்க சொல்லுறான் அந்த நகையின் மதிப்பு மூன்று லட்சம், ஆனால் ஒரு லட்சம் இருந்தா போதும்னு சொல்லுறான் என்று சொன்னதும்,சிட்டி கிட்ட இருந்து வாங்குறியா? அது வில்லங்கமாக இருக்க போகுது என்று வித்யா சொல்ல, இப்போ இருக்கிற நிலைமைக்கு இது எனக்கு தேவை. என் மேல என் மாமியார் கோபமாக இருக்கிறாங்க அவங்களுக்கு இதை வாங்கி கொடுத்தா கோபம் கொஞ்சம் குறையுமா என்று பார்க்கலாம் என்று சொன்னதும், உன்கிட்ட காசு இருக்கா என்று வித்யா கேட்க, என்னை பத்தி தான் உனக்கு தெரியுமே இப்போ ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கு. பணம் எல்லாம் செலவாயிடுச்சு. நீ தான் கொஞ்சம் உதவனும் என்று சொல்ல வித்யா என்கிட்ட அவ்வளவு பணம் கிடையாது என்று சொல்கிறார்.

ரோகிணி கேட்ட உதவி

அதுதான் உன் லவ்வர் முருகன் இருக்காருல்ல அவர் வீடு வாங்குவதற்கு வைத்திருக்கிற பணத்திலிருந்து வாங்கி கொடு உனக்கு கண்டிப்பா கொடுத்துவிடுவேன் என்று சொல்ல, வித்யா நான் பேசி பார்க்கிறேன் என்று சொல்லி போனை வைக்கிறார். மறுபக்கம் இன்ஸ்பெக்டரை சந்திக்க மீனா வந்திருக்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர் அவரிடம் வீடியோவை காட்டி இதுக்கு மேல நான் ஒன்னும் பண்ண முடியாது உன் புருஷன் மேல தான் இப்போ தப்பு இருக்குது.

திட்டிய இன்ஸ்பெக்டர்

உன் புருஷன் அமைதியா இருக்க மாட்டானா? இப்போ அருண் கொலை முயற்சி கேஸ் போட போறேனு சொல்லிக்கிட்டு இருக்கான். இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ண முடியாது, வேணும்னா அந்த அருணிடன் ஏதாவது பேசிப் பாரு என்ற சொல்கிறார். அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு மீனா செல்கிறார். அங்கு அருண் இல்லாததால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்கிறார்கள். அப்போது முத்துவின் காரை ஓட்டி வந்த கான்ஸ்டபிலுக்கு கையில் அடிபட்டிருக்கும் போது ஒருவர் வந்து கம்ப்ளைன்ட் எழுத சொல்கிறார்.

அதற்கு அந்த கான்ஸ்டபிள் எனக்கு ரிட்டையர்டு ஆக போற நேரத்துல வந்த சோதனையை பாரு, ஒரு டிரைவர் வண்டி ஓட்டிட்டு வந்து நம்ம டிராபிக் போலீஸ் வண்டியில் இடிச்சிட்டான்னு என்னை அந்த வண்டியை எடுத்துட்டு வர சொன்னாங்க. ஆனா அந்த வண்டி ஏற்கனவே பிரேக் பிடிக்காமல்தான் இருந்திருக்கு. அந்த டிரைவர் எவ்வளவோ சொல்லியும் நம்ம டிராபிக் போலீஸ் கேட்க மாட்டேன் என்று சொல்லிட்டாரு. அவனோட லைசென்ஸ்யும் கேன்சல் பண்ண வச்சிட்டாரு. இப்போ எனக்கு கையில் அடிபட்டு இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனாவுக்கு தெரிந்த உண்மை

இதையெல்லாம் கேட்டு மீனா அதிர்ச்சியடைகிறார். பிறகு மீனா அந்த போலீஸ் கான்ஸ்டபிளிடம் வந்து சார் அந்த டிரைவர் உடைய மனைவி தான் நான் நீங்க இப்ப நடந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் சாரிடம் சொல்லுங்கள் என்று கேட்க அதற்கு கான்ஸ்டபிள் என்னால எதையும் சொல்ல முடியாது என்று சொல்லி விடுகிறார்‌. பிறகு அந்த ட்ராபிக் போலீஸ் பாருங்க என்று சொன்னதும் மீனா அங்கிருந்து கிளம்பி வெளியே வருகிறார்.

மீனா செய்த உதவி

அப்போது தெருவில் ஒரு கர்ப்பிணி பெண் நடக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணை அந்தப் பக்கமாக வந்து ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் ஏற்றி வைத்துவிட்டு மீனா பீல் பண்ணிக்கொண்டு நிற்கிறார். இதை எல்லாம் கான்ஸ்டபிள் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக அருணும் அங்கு வருகிறார். மீனாவை பார்த்து முறைத்தபடி அருண் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகப் போகிறார்.

இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயம்

அந்த நேரத்தில் போலீஸ்காரர் ஒருவர் முத்துவை பைக்கில் கூட்டிக்கொண்டு வருகிறார். முத்துவைப் பார்த்ததும் மீனா நீங்க என்ன போலீஸ்காரங்க கூட வரீங்க என்று கேட்கிறார். அதற்கு நீ எப்படி இங்கு வந்த? எதற்காக இங்கு வந்தா என்று முத்து திட்டுகிறார். பிறகு முத்துவை இன்ஸ்பெக்டர் முன்பு விசாரிக்கிறார்கள். அப்போது மீனா முத்துகாக சப்போர்ட் பண்ணி பேச அதற்கு இன்ஸ்பெக்டர் அதெல்லாம் முடியாது உன் புருஷன் மேல கொலை முயற்சி கேஸ் போட்டு இருக்கு இவனை உள்ள தள்ளுங்க என்று சொல்ல இன்னொரு கான்ஸ்டபிள் வந்து முத்துவின் சட்டையை பிடித்து இழுத்துப் போகிறார்.

உண்மை உடைந்தது

அந்த நேரத்தில் மீனா மீண்டும் முத்துவின் காரை எடுத்துக்கொண்டு வந்த கான்ஸ்டபிளிடம் போய் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர் என்னம்மா நீ எதுக்கு அவர்கிட்ட போய் கெஞ்சிகிட்டு இருக்கா என்று திட்டுகிறார். அப்போது கான்ஸ்டபிள் முத்துவின் கார் பிரேக் பிடிக்காமல் இருந்த விஷயத்தை அவருடைய காரில் ஒயர் கட் பண்ணி இருந்ததையும் சொல்கிறார். இதை கேட்டு முத்துவும் அதிர்ச்சியாகிறார். அதேபோல டிராபிக் போலீஸும் அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+