சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டிற்கு வந்த நபர்.. மருமகள்கள் கொடுத்த அதிர்ச்சி.. அண்ணாமலை எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 18ஆம் தேதிக்கான எபிசோடில் அண்ணாமலையின் அம்மா மீண்டும் விஜயா வீட்டிற்கு வருகிறார். இதனால் விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். அதே நேரத்தில் மகன்களும் மருமகள்களும் சண்டை போட்டு இருப்பதால் அண்ணாமலை முக்கிய முடிவு எடுத்து இருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேருமே தங்களுடைய மனைவிகளோடு சண்டை போட்டுவிட்டு மொட்டை மடியில் படுத்து தூங்குகிறார்கள். அப்போது முத்து சொன்ன பஞ்ச் டயலாக் ஒன்றை ரோகிணிக்கு மனோஜ் போன் பண்ணி சொல்ல, இது முத்து சொன்ன டயலாக் தானே என்று ரோகிணி மனோஜை திட்டிவிட்டு போனை வைக்கிறார்.

அதை பார்த்து ரவி மற்றும் முத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் எல்லோரும் சாப்பிட உட்காருகின்றனர். அப்போது ரோகிணி, ஸ்ருதி சாப்பிடாமலேயே சென்று விடுகிறார்கள். மீனாவும் முத்து, மனோஜ்க்கு பரிமாறாமல் அண்ணாமலை விஜயாவுக்கு மட்டும் சாப்பாடை பரிமாறி விட்டு போகிறார்.
அதனால் அண்ணாமலை உங்க பொண்டாட்டிகள் கூட பிரச்சனையா? என்று கேட்க, மூன்று பேரும் ஆமாம் என்று சொல்கிறார்கள். ஆனால் என்ன பிரச்சனை என்று மூன்று பேரும் சொல்ல வரும்போது உங்க குடும்ப பிரச்சனையை நீங்க தான் பார்க்க வேண்டும். நான் அதில் தலையிட மாட்டேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அதோடு கோபமாக சாப்பாட்டில் இருந்து எழுந்து போகிறார்.

அப்போது விஜயாவிடம் இவர்களுடைய பிரச்சனை பற்றி கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இதனால் விஜயா மகன்கள், மருமகள் மீது கோபப்படுகிறார். அதை தொடர்ந்து அண்ணாமலையின் அம்மாவை முத்து வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். பிறகு பாட்டியை பார்த்த மகிழ்ச்சியில் எல்லோரும் சந்தோஷமாக பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது பாட்டி ரோகிணியிடம் விசேஷம் ஒன்றும் இல்லையா? என்று கேட்க, அதனால் ரோகிணியின் முகம் சோகமாகிறது. பிறகு மூன்று பேருக்கும் கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகிவிட்டது யாரும் இன்னும் நல்ல விசேஷம் சொல்லலையே என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரவியின் ரெஸ்டாரண்ட் ஓனர் நீத்து வீட்டிற்கு வருகிறார்.

அவரை பார்த்ததும் ஸ்ருதி கோபப்படுகிறார். அப்போது நீத்து ஒரு காம்பெடிஷன் நடக்கிறது அதில் இந்த வீட்டில் இருக்கிற எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூப்பிடுவதற்காக வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதன்படி அடுத்த நாள் எல்லோரும் அந்த ஃபங்ஷனில் கலந்து கொள்கிறார்கள்.

அங்கு போட்டி நடைபெறுகிறது. அதில் முதல் போட்டியாக பெண்கள் தண்ணீர் குடத்தை தலையில் வைத்து சிந்தாமல் நடந்து வரவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் பங்கு கொண்டவர்களில் ஸ்ருதி முதலில் அவுட் ஆகி விடுகிறார். இறுதியில் மீனாவும் ரோகிணியும் அந்த போட்டியில் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது பாட்டி மீனா.. மீனா என்று கத்துகிறார். விஜயா ரோகிணி.. ரோகிணி என்று கத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications