சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு வந்த சிக்கல்.. மனோஜ் எடுத்த முடிவு.. முத்து கேட்ட சரியான கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 18 ஆம் தேதிக்கான எபிசோடில் எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தினர் முன்பு மனோஜ் மற்றும் ரோகிணி மீண்டும் அவமானப்படுகின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் சிந்தாமணி கார் ஓட்டும் டிரைவிங் ஸ்கூல் பற்றி விசாரித்து வரும்போது அது முத்துவின் டிரைவிங் ஸ்கூல் என்று தெரிய வருகிறது. மீனா நீங்க இவங்களுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுங்க நாம ஒன்னும் அடுத்தவங்க வளர்ச்சியை கெடுக்கணும்னு நினைக்கிற ஆள் கிடையாது என்று சொன்னதும், முத்துவும் சிந்தாமணியிடம் உங்களுக்கும் மீனாவுக்கும் தானே தொழில் போட்டி நான் உங்களுக்கு சொல்லி தரேன்.

கோபத்தில் சிந்தாமணி
எப்படியும் மீனா இந்த தொழிலில் நல்ல வளர்ந்து வருவா. அதனால நீங்க இந்த தொழிலை விட்டு ஓடிப் போகும் நிலைமை கூட வரலாம். அப்போ டிரைவிங் ஸ்கூல் வச்சு நீங்க பொழச்சிக்கலாம் என்று கிண்டல் அடிக்க, சிந்தாமணி கோபமாகி போய்விடுகிறார். மறுபக்கத்தில் ரோகிணியும் வித்யாவும் ஹோட்டலுக்கு சாப்பிட வருகின்றனர். அப்போது மனோஜை குத்துவதற்காக முத்து கத்தியை எடுத்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சிக்கிய கதிர்
அங்கு கொஞ்ச நேரத்தில் ரோகிணி மற்றும் மனோஜை ஏமாற்றிய கதிரும் வருகிறார். அதே ஹோட்டலில் அவர் சாப்பிடும் போது பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு ரோகிணி கதிரை பார்த்து விடுகிறார். உடனே அவரிடம் சென்று டேய் ப்ராடு எங்கள ஏமாத்துன பணத்தை எடுத்து வைடா என்று கேட்க, உடனே அந்த கதிர் நீங்க யாருன்னு எனக்கு தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ரோகிணி வித்யாவிடம் போலீசுக்கு போன் பண்ணு என்று சொல்ல கதிர் ரோகிணியை பிடித்து கீழே தள்ளிவிட்டு ரோட்டில் ஓடி விடுகிறார்.
ரோகிணியின் பிளான்
பின்னாடியே ரோகிணி ஓடினாலும் கடைசியில் கதிரை பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் வீட்டிற்கு வந்த ரோகிணி நடந்த விஷயத்தை மனோஜிடம் சொல்கிறார். அதோடு இந்த கதிர் இந்த தெருவில் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான் என்று தெரிகிறது. அவனை நாம எப்படியாவது பிடிக்கணும். இல்லன்னா முத்து மீனா கண்ணில் பட்டா நமக்கு தான் அசிங்கம். அவன் கடைசி வரைக்கும் சொல்லி காமிச்சிட்டே இருப்பான் என்று ரோகிணி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
சாமியார் வருகை
அப்போது போலீசுக்கு போகலாமா என்று மனோஜ் கேட்க, இல்ல வேண்டாம் இதற்கு வேற பிளான் பண்ணலாம் என்று பார்வதிக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை ரோகிணி சொல்கிறார். அப்போது பார்வதி வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் சாமியாரிடம் போய் கேட்கலாம் என்று சொல்கிறார். பிறகு அவரை வீட்டிற்கு அடுத்த நாள் காலையில் கூட்டிக்கொண்டு வருகிறார்.
மீண்டும் ஏமாறும் மனோஜ்
அப்போது அந்த நபரை பார்த்ததும் வீட்டில் எல்லோரும் யாரென்று விசாரிக்க தொலைந்து போன பொருளை கண்டுபிடித்து தரும் சாமியார் இவர் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ரூமிற்குள் இருந்து மனோஜ் மற்றும் ரோகிணி வருகிறார்கள் பிறகு முந்தைய நாள் நடந்த விஷயத்தை ரோகிணியும் மனோஜும் சொல்ல முத்து எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம் என்று சொல்ல, அதற்கு மனோஜ் எங்களுக்கு யாருடைய உதவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெற்றிலையில் மை போட்டு பார்க்கின்றனர்.
கிண்டல் செய்யும் முத்து- ஸ்ருதி
அப்போது அந்த நபர் நீங்க உங்களை ஏமாற்றிய நபர் இல்ல எங்கேயோ ஓடிப்போயிட்டான் என்று சொல்ல, அதை கேட்டு ஸ்ருதி மற்றும் ரவி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு அந்த நபர் சொல்லுவதற்கெல்லாம் முத்துவும் ஸ்ருதியும் கவுண்டர் கொடுத்துக்கொண்டே இருக்க அதனால் அந்த நபர் கடுப்பாகி கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications