சிறகடிக்க ஆசை: ரோகிணி போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன மனோஜ்.. பாட்டி பிடித்த பாயிண்ட்.. பரபரப்பான தருணம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் பாட்டி வீட்டிற்கு வந்து மனோஜிடம் ரோகிணியை வீட்டிற்கு கூப்பிட்டு வரச் சொல்கிறார் அதே நேரத்தில் ரோகிணி மனோஜிடம் முக்கிய கண்டிஷன் போட்டிருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி ஸ்ருதிக்கு போன் போட்டு தனக்கு சப்போர்ட் செய்வதற்காக பேச பிளான் பண்ணுகிறார். ஆனால் ஸ்ருதி இன்னைக்கு பாட்டி வராங்க என்ன நடக்கணும்னு தெரிஞ்சுக்க ரொம்ப இன்ட்ரஸ்டா இருக்கு நீங்களும் வந்துருங்க என்று போனை வைத்து விடுகிறார். உடனே எதற்காக எனக்கு போன் பண்ணாங்க தெரியுமா? அவங்க பக்கம் ஆள் சேக்குறதுக்காக என்று ஸ்ருதி சொல்ல ரவி ஆச்சரியப்படுகிறார்.

ரோகிணியின் பிளான்
மறுபக்கத்தில் ரோகிணி வித்யாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இவளை என் பக்கம் வைக்கலாமனு பார்த்தா இவ உஷாரா இருக்குறா. இனி என் வாழ்க்கையை காப்பாத்திக்க நான் தான் ஏதாவது செஞ்சாகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு பாட்டியும் அண்ணாமலையும் வீட்டிற்கு வர முத்து அவர்களை வரவேற்கிறார்.
பாட்டி அட்வைஸ்
பிறகு முத்து மனோஜை கூப்பிட்டு உட்கார வைக்க, பாட்டி உனக்கு எப்போதிலிருந்து இந்த பழக்கம் என் பையனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா? ஆம்பள பசங்க பிறந்தா நிம்மதியா இருக்கலாம்னு கேள்விப்பட்டேன். ஆனா என் பையன் அப்பவும் ஓடிக்கிட்டே தான் இருந்தான் இப்ப வரைக்கும் நிம்மதி இல்லை என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
வீட்டுக்கு வந்த பாட்டி
அப்போது ரவியும் ஸ்ருதியும் வீட்டிற்கு வர பாட்டி அவர்களிடம் நலம் விசாரித்துவிட்டு நீங்க எங்கேயோ வெளியே போயிருந்ததை சொன்னார்கள் என்று சொல்ல, அம்மா பாட்டி வீட்ல பிரச்சனை என்று கேள்விப்பட்டதும் நாங்க வந்துட்டோம் என்று சொல்ல, பாட்டி உன்னை விட சின்ன பசங்க வயசுல ஆனா அவங்க தான் கரெக்டா இருக்காங்க நீ மட்டும் ஏன் இப்படி இருக்க என்று மனோஜியை திட்டுகிறார்.
மனோஜின் அலட்சியம்
பிறகு மனோஜிடம் உன் பொண்டாட்டி எங்க என்று கேட்க, மனோஜ் தெரியல அவ பிரண்டு வீட்டுக்கு போய் இருப்பா என்று சொல்ல, உங்க அம்மா தான் அவளை அடிச்சு அனுப்பி இருக்கா. நீ எங்கன்னு தெரியலன்னு சொல்லுற அவ எங்க போயிருந்தாலும் பரவால்ல நீ வீட்டுக்கு கூப்பிட வேண்டாமா? எல்லா நேரத்திலும் எல்லாருடைய மனநிலையும் ஒரே மாதிரி இருக்காது என்று அட்வைஸ் செய்கிறார்.
திட்டும் பாட்டி
பிறகு மனோஜிடம் ரோகிணிக்கு போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல, அதற்கு முதலில் மனோஜ் தயங்குகிறார்கள். பிறகு பாட்டி இப்ப போன் பண்ணுறியா இல்லையா என்று மிரட்டியதும் போன் பண்ணுகிறார். ஆனால் ரோகிணி போனை எடுக்காமல் இருக்கிறார். அப்போது நீ நேர்ல போய் கூட்டிட்டு வா என்று சொல்ல நான் இப்போ நேரில் போனா இறங்கி போன மாதிரி ஆகிடும். அதனால இன்னும் ரெண்டு முறை போன் பண்ணி பாக்குறேன் என்று போன் அடித்துக் கொண்டே இருக்கிறார்.
அண்ணாமலை சொன்ன வார்த்தை
அப்போது அண்ணாமலை இடமும் பாட்டி விஜயாவே கூட்டிக்கொண்டு வர சொல்ல அதற்கு அண்ணாமலை நான் இப்போதைக்கு போன் பண்ணல. மனோஜ் ரோகிணியிடம் பேசட்டும் அங்க என்ன முடிவு என்று தெரிந்த பிறகு பேசுகிறேன். இல்லன்னா ரோகிணி வரலைன்னு தெரிஞ்சா அவ இன்னும் சாமி ஆடுவா அது சரிப்பட்டு வராது என்று அண்ணாமலை சொல்ல அதுவும் சரிதான் என்று பாட்டி விட்டு விடுகிறார்.
ரோகிணி போட்ட கண்டிஷன்
பிறகு மனோஜ் போன் அடித்துக்கொண்டே இருக்க, ரோகிணி போனை எடுக்கிறார். அப்போது நான் வீட்டுக்கு வந்தால் உங்க அம்மா என்னை அடிக்க கூடாது, திட்றதுக்கும் அடிக்கிறதுக்கும் உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு என்று கண்டிஷன் போட இதை மனோஜ் அங்கு இருக்கும் எல்லோரிடமும் சொல்கிறார். இதனால் ரோகிணி கோபப்படுகிறார். ஆனாலும் வர சொல்லு பாத்துக்கலாம் என்று பாட்டி சொல்கிறார். உடனே அதை அப்படியே மனோஜ் சொல்ல, சரி என்று ரோகிணி போனை வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications