சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டில் வெடித்த பிரச்சனை.. மீனா செய்த அதிரடி.. மனோஜை மிரட்டிய போலீஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி 20-ம் தேதிக்கான எபிசோடில் விஜயா வீட்டிற்கு முத்துவின் பாட்டி வந்திருக்கும் நிலையில் குழந்தை குறித்து வீட்டிற்குள் விவாதம் நடைபெறுகிறது. அப்போது ஸ்ருதி சொன்ன வார்த்தையால் விஜயா கோபத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் மனோஜை போலீஸ் மிரட்டுகிறார்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவி வேலை செய்யும் நித்துவின் ரெஸ்டாரண்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது மீனாவும் முத்துவும் தனித்தனியாக வைக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் கணவன் மனைவியாக வைத்த போட்டியில் விஜயாவின் மகன் மற்றும் மருமகள் 3 ஜோடியும் தோற்று விடுகிறார்கள்.

அவர்களுடைய 3 குடும்பத்திற்குள் இருக்கும் சண்டையால் இவர்கள் தோற்று விட்டதால் பாட்டி கோபப்படுகிறார். பிறகு இறுதியில் நடந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மூன்று ஜோடிகளும் சமாதானமாகி வெற்றி பெறுகின்றனர். பிறகு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அப்போது அங்கிருந்து பாட்டி வாழ்க்கையில் இப்படித்தான் ஒன்றாக இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று அட்வைஸ் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு எல்லோரும் வருகிறார்கள். அப்போது பாட்டி தொட்டில் ஒன்றை புதிதாக கொண்டு வந்து வைத்திருக்கிறார். அதில் தான் விஜயா பெற்ற மூன்று மகன்களும் வளர்ந்தார்கள். அதுபோல இந்த வீட்டின் வாரிசுகளும் அதில் வளர வேண்டும் என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதாக சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதைக் கேட்டு விஜயா கோபத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார். அதற்கு ஸ்ருதி குழந்தை பெற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது. அதனால் தான் நான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வேன். இல்லை என்றால் குழந்தையே வேண்டாம் என்று ஸ்ருதி சொல்கிறார். அதற்கு இப்போதைக்கு எதுவும் அவசரப்பட வேண்டாம் என்று பாட்டி ரவிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

மறுபக்கத்தில் மீனா திருமண டெக்கரேஷனுக்கான காரை டெக்ரேஷன் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா செய்வதை தடுப்பதற்கு சிந்தாமணி பிளான் போடுகிறார். அங்கு சில ரவுடிகளை வர வைத்து இருக்கிறார். அதை தெரிந்து கொண்ட மீனா அந்த ரவுடிகளை துடப்பக்கட்டையால் அடித்து விரட்டுகிறார்.
அடுத்ததாக ஓனர் அங்கு வந்து மீனாவின் டெக்கரேஷனை பார்த்து பாராட்டுகிறார். அதுபோல சிந்தாமணியின் டெக்கரேஷனை பார்த்ததும் இது பல பழைய மாடலில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு இனி எல்லா ஆர்டரையும் மீனாவுக்கே கொடுக்கும்படி சொல்கிறார். இதனால் மீனா சிந்தாமணியிடம் யாருடைய உழைப்பையும் கெடுக்காமல் இருந்தாலே நாம நல்லா இருக்கலாம். வாழு வாழ விடு என்று சொல்லி அனுப்புகிறார்.
இறுதியாக மனோஜும் ரோகிணியும் கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு மீனாவின் அம்மா அர்ச்சனை தட்டு வேண்டுமா என்று கேட்க நாங்க வேற வேலைக்கு வந்து இருக்கிறோம் என்று முகத்தில் அடித்தது போல பேசிவிட்டு போகிறார்கள். பிறகு போலீசாருடன் மனோஜை ஏமாற்றிய கதிரின் வீடியோவை கோவிலில் வாங்குகின்றனர்.

அதற்குப் பிறகு மனோஜ் அந்த வீடியோவை தனக்கு தருமாறு போலீசாரிடம் கேட்க அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள். அந்த வீடியோவை தந்தால்தான் நான் சோசியல் மீடியாவில் போட்டு அந்த நபரை கண்டுபிடிக்க முடியும் என்று மனோஜ் சொல்ல அதற்கு நீ காசு கொடுத்து டிகிரி வாங்கினியா என்று போலீசார் மனோஜை திட்டி அனுப்புகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications