சிறகடிக்க ஆசை: ரோகிணி மீது சந்தேகப்படும் மீனா.. கிரிஷ் சொன்ன விஷயம் விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஜூலை 23ஆம் தேதிக்காண எபிசோட்னில் ரோகிணி முத்து மீனாவிடம் கிரிஷ் பற்றி ஏமாற்றுகிறார். ஆனால் மீனா சந்தேகப்பட்டதால் கிரிஷ் உண்மைகளை சொல்லி இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில் ரதி கர்ப்பமாக இருக்கும் செய்தி விஜயாவுக்குத் தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா மயங்கி விழுகிறார். உடனே பார்வதி தண்ணீர் தெளித்து அவரை எழுப்புகிறார். கல்யாணம் ஆகாத பெண் எப்படி கர்ப்பமாக இருக்க முடியும் என்று விஜயா கேட்கிறார். அதற்கு பார்வதி, "எல்லாவற்றுக்கும் அந்த தீபன் தான் காரணம்" என்று கோபப்படுகிறார். முத்துவும் மீனாவும் எவ்வளவோ சொல்லியும் நீங்கள் நம்பவில்லை என்று விஜயாவிடம் கூறுகின்றனர். கொஞ்ச நாள்களுக்கு டான்ஸ் கிளாஸ் எதுவும் வேண்டாம், பயமாக இருக்கிறது என்று விஜயா சொல்கிறார்.

மற்றொரு புறம், முத்துவும் மீனாவும் கிரிஷை அழைத்து வந்து ரோகிணியின் அம்மாவை சந்திக்கின்றனர். நலம் விசாரித்த பிறகு, ரோகிணியின் அம்மா "கிரிஷ் எங்கள் சொந்தக்காரங்க வீட்ல இருக்கட்டும்" என்று கூறுகிறார். அதற்கு அவர்கள், "அதெல்லாம் வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்கிறார்கள். ரோகிணி இதையெல்லாம் மறைந்திருந்து கேட்கிறார்.
"வேண்டுமானால் கிரிஷ்கிட்ட கேளுங்கள். அவன் எங்கே இருக்க விரும்புகிறானோ, அங்கே இருக்கட்டும்" என்று ரோகிணியின் அம்மா கூறுகிறார். அதற்கு கிரிஷ், "நான் மீனா ஆன்ட்டி வீட்லதான் இருப்பேன். எனக்கு அங்க இருக்கத்தான் பிடிச்சிருக்கு" என்கிறான். ரோகிணியின் அம்மா எவ்வளவோ சொல்லியும் முத்துவும் மீனாவும் கேட்கவில்லை. பிறகு முத்து பணம் கட்டிவிட்டு இருவரும் கிளம்பிச் செல்கின்றனர்.
அவர்கள் சென்ற பிறகு ரோகிணி, தன் அம்மா ரூமுக்குள் வருகிறார் அவரிடம், முத்துவும் மீனாவும் வந்ததாக கூறுகிறாள் ரோகிணியின் அம்மா. அதற்கு ரோகிணி "அவங்க பேசுறதெல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் என்று சொல்கிறார். உடனே அம்மா, அவங்க நல்லவங்களாத்தான் இருக்காங்க. உன் குடும்பமும் நல்ல குடும்பம்தான். நீ உண்மையைச் சொல்லிடு. முத்துவும் மீனாவும் உன்னைப் பார்த்துப்பாங்க" என்று கூறுகிறார்.
உடனே ரோகிணி, "என்னோட வாழ்க்கையில நீ எடுத்த முடிவுகள் எல்லாம் தப்புதான். நீ சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது" என்று சொல்லிவிட்டு, பணத்தை எடுத்து அம்மாவிடம் கொடுத்து, "இந்த காசை நீ முத்து கிட்ட கொடுத்துட்டு மீதி செலவுக்கு வச்சுக்கோ. நான் உனக்கு இருக்கேன்" என்று கூறிவிட்டு செல்கிறாள்.
ரவி அறைக்கு வந்ததும், சுருதி "என்ன முடிவு எடுத்திருக்க" என்று கேட்கிறார். அதற்கு ரவி, "பிரஷ் ஆகிட்டு போய்ட்டு தூங்கலாம்னு முடிவு எடுத்து இருக்கேன்" என்கிறார். "நான் அத பத்தி கேட்கல, ரெஸ்டாரன்ட் எப்போ ரிசைன் பண்ணிட்டு வரப்போற" என்று சுருதி கேட்க, ரவி "நீ எப்ப கேட்டாலும் ஒரே பதில்தான், என்னால இப்ப வர முடியாது" என்று திட்டவட்டமாக சொல்லிவிடுகிறார். இதனால் டென்ஷன் ஆகும் சுருதி "உனக்கு இன்னும் மூணு மாசம் தான் டைம். அதுக்குள்ள நீ முடிவு எடுக்கலன்னா என்னோட முடிவு வேற மாதிரி இருக்கும்" என்று கூறிவிட்டு அமைதியாகிறார்.
மறுபக்கம் ரோகிணி வித்யாவிற்கு போன் செய்து, "நான் உன்கிட்ட அன்னைக்கு பேசினது தப்புதான். எனக்கு உன்ன விட்டா வேற யாரடி பிரண்ட் இருக்கா? எங்க அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. கொஞ்ச நாள் கிரிஷை உங்க வீட்டில் தங்க வச்சுக்க" என்று சொல்கிறாள். அதற்கு வித்யா, "என் மேல உனக்கு கோவம் எல்லாம் இல்லடி. நீ முருகன் கிட்ட பணம் கேட்டதால தான் எனக்கு கோபம் வந்துடுச்சு" என்று கூறுகிறாள். மேலும் வித்யா, கல்யாண விஷயமாக பேச ஊருக்கு போய்கிட்டு இருக்கேன், ஒரு வாரம் ஆகும் என்று கூறுகிறாள். சரியென்று சொல்லி ரோகிணி போனை வைத்து விடுகிறார்.
மீண்டும் கிரிஷ் தூங்காமல் ரோகிணி அறைக்கு ஓடி வந்து விடுகிறான். கிரிஷை பார்த்து பதறிப்போன ரோகிணி என்ன ஆச்சு என்று கேட்க, நான் இன்னைக்கு உன்கூட தான் தூங்கப்போறேன் அம்மா என்று சொன்னதும் ரோகிணி கிரிஷை வெளியே தள்ளி அடி போடுகிறார். இதை மீனா பார்த்து விடுகிறார். இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது முத்து வந்ததும் ரோகிணி சொன்னது போலவே கிரிஷ் இவங்க என்ன அடிக்கல என்று சொல்லிவிடுகிறார். பிறகு கிரிஷிடிடம் மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கும் போது மீனா எதுக்காக இந்த வீட்டில இருக்க பிடிக்கலைன்னு ரோகிணி கிட்ட சொன்ன என்று கேட்க? நான் அப்படி சொல்லல பாட்டிக்கு சரி ஆகுற வரைக்கும் இங்கே தான் இருப்பேன்னு சொன்னேன் என்று சொல்கிறார். இதனால் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications