சிறகடிக்க ஆசை: மீனா செய்த அதிசயம்! விஜயா,ரோகிணிக்கு செம பதிலடி.. அண்ணாமலைக்கு வந்த சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 24ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவின் நிலைமையை பார்த்து விஜயா அசிங்கப்படுத்தி பேச அதற்கு முத்து சரியான பதிலடி கொடுக்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலைக்கு சில சந்தேகங்கள் வருகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா அழுது கொண்டே இருக்க முத்து மீனாவிடம் இருந்து திருட்டு பசங்க பணத்தை அடிச்சுட்டாங்க என்ற விஷயத்தை வீட்டில் சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா என்று அண்ணாமலை கேட்க, கொடுத்து இருக்கோம்பா என்று முத்து சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மனோஜின் திமிர்

அதற்கு மனோஜ் இனி அந்த பணம் கிடைக்காது. 30 லட்சம் தொலைஞ்சு போச்சுனு நான் கம்ப்ளைன்ட் கொடுத்ததே இன்னும் கிடைக்கல. உங்க ரெண்டு லட்சம் மட்டும் கிடைச்சிருமா? என்று கேட்க அதற்கு முத்து கோபப்படுகிறார். அப்போது அண்ணாமலை மீனாவிற்கு ஆறுதல் சொல்ல, மீனா தங்கச்சி சீட்டு போட்டு வச்சிருந்த பணமும் அவ பிரண்டு கிட்ட கடன் வாங்கின பணமும் இப்படி போயிடுச்சே மாமா என்று அழுது கொண்டிருக்கிறார்.

அண்ணாமலை கேட்ட கேள்வி

அதற்கு அண்ணாமலை விஜயாவிடம் உன்னுடைய நகையை கொடு அவங்க கடனை வாங்கி கொடுத்து இருக்காங்க என்று சொல்ல, அதற்கு விஜயா அதிர்ச்சி ஆகிறார். மீனாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று போட்ட பிளான் கடைசியில் அவருக்கே பிரச்சனையாக திரும்புகிறது. இதனால் கோபமான விஜயா அவ திமிரு பிடிச்சு போய் அந்த சிந்தாமணிக்கு போட்டியா வந்து பெரிய ஆளாக ஆகணும்னு பேராசை பட்டா அதுக்கு நான் என் நகையை கொடுக்கணுமா என்று கேட்கிறார்.

மீனாவின் பதிலடி

அதற்கு மீனா கோபப்பட்டு எனக்கு ஒன்னும் எந்த பேராசை கிடையாது. அது என்னை தேடி வந்த ஆர்டர். நான் முயற்சி செய்யனும்னு நெனச்சேன் அவ்வளவுதான் என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். அதற்கு ரோகிணி இப்போ எதுக்கு ஆன்ட்டியை எதிர்த்து பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க, நான் யார்கிட்டயும் பொய் சொல்லி ஏமாத்தல, நகையை வச்சி பொய்யான நகை எடுத்துட்டு வந்து வைக்கல, நான் உழைத்து சம்பாதிக்கணும்னு நினைச்சேன் அதற்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுறேன் என்று மனோஜ், ரோகிணி, விஜயா மூன்று பேருடைய வாயை அடைக்கிறார்.

முத்து சொன்ன வார்த்தை

பிறகு எங்களுக்கு யாருடைய நகையும் வேண்டாம் என்று மீனா சொன்னதும் முத்து ஏற்கனவே அவங்க வீடுன்னு சொல்லி காமிச்சிட்டு இருக்காங்க நிம்மதியா சாப்பிட கூட முடியாது. அதனால நாங்களே பார்த்துகிறோம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் அம்மாவும், சத்யா, சீதா எல்லோரும் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் வழக்கம் போல விஜயா திமிராக நடந்து கொள்கிறார்.

மாட்டிக்கொண்ட விஜயா

மீனா அம்மா மீனாவை பார்த்ததும் சின்ன அடின்னு மாப்பிள்ளை சொன்னாரு ஆனா இவ்வளவு பெருசா கட்டு போட்டு இருக்கு என்று கேட்க, சீதா ஏன் அவங்களை துரத்திட்டு போனா? பணம் சம்பாதிக்கலாம் உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது என்று கேட்க, மீனாவின் அம்மா உனக்கு மட்டும் ஏன்டி இப்படி எல்லா ஆகுது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அண்ணாமலை விஜயாவிடம் காபி போடு என்று சொல்ல, விஜயா முறைக்கிறார்.

குடும்பத்தின் ஆறுதல்

தண்ணியாவது எடுத்துட்டு வந்து கொடு என்று சொல்ல, மீனா போக போகிற சீதா நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் விஜயா ஏற்கனவே ஒருத்தி பாடா பாடுபடுத்துறா இதுல நீ வேற வரியா என்று விஜயாவே கிளம்புகிறார். பிறகு மீனாவிடம் என்ன நடந்தது என்று எல்லோரும் விசாரிக்க, நீ கஷ்டப்பட்டு சீட்டு போட்ட பணம் அதுவும் இல்லாம உன் பிரண்டு கிட்ட வேற கடன் வாங்கி கொடுத்த கண்டிப்பா கொடுக்கிறேன் என்று சொல்ல, நீ கவலைப்படாத அக்கா கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கலாம் என்று சீதா பேசிக் கொண்டிருக்கும் போது சத்யாவும் மீனாவுக்கு ஆறுதலாக பேசுகிறார்.

அவமானப்படும் மீனா குடும்பம்

அப்போது முத்து மண்டபத்தின் அட்ரஸ் கேட்க, மீனா விசிட்டிங் கார்டு எடுத்து கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்டு போகும்போது சாப்பிட்டு போங்க அத்தை என்று முத்து சொன்னதும் விஜயா கோபமாகி அவளே சமைக்காமல் இருக்கா இங்கு இருக்கிற சாப்பாடு இங்கே இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் போதும் வேற யாருக்கும் இல்லை என்று திமிராக பேச அதனால் முத்து கோபப்படுகிறார். அதற்கு சந்திரா வேண்டாம் மாப்ள நாங்க கிளம்புறோம் என்று சொல்ல, அதெல்லாம் இல்ல. நான் ஹோட்டல்ல இருந்து வாங்கி கொடுத்து அனுப்புறேன் நீங்க சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லி சத்யாவை அழைத்து செல்கிறார்.

ரோகிணியை விரட்டும் மனோஜ்

மறுபக்கம் ரோகிணி ஷோரூமுக்கு வர மனோஜ் எதுக்கு இங்க வந்த என்று கேட்கிறார். மனோஜ் இப்படி பேசுற உன்மேல நான் எவ்ளோ பாசம் வச்சிருக்கேன் தெரியுமா? உனக்கு உடம்பு சரியில்லைன்னுதும் உப்பு காரம் சேர்க்காமல் சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கிறேன் என்று சொல்ல, நீ இங்க வந்தது அம்மாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும் இங்கிருந்து போ என்று சொல்ல, உன்ன பத்தி நான் புரிஞ்சுக்காம வந்துட்டேன் உங்க அம்மா உனக்கு பிரச்சனை என்கிற போது வந்து நிற்க்கல நான் தான் உனக்காக எவ்வளவு கஷ்டத்தை தாங்கி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சமைக்கும் விஜயா

ரோகிணி போனதும் ஷோரூம்மில் வேலை பார்ப்பவர் மேடம் ஏன் சார் கடைக்கு இப்போ வரல அதனால வியாபாரமே இல்லை என்று சொல்ல அதற்கு மனோஜ் அந்த நபரிடம் கோபப்பட்டு அவரை விரட்டி விடுகிறார். அடுத்ததாக விஜயா வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அங்கு பார்வதி வருகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+