சிறகடிக்க ஆசை: நீ தான் க்ரிஷ் அம்மா! ரோகிணியிடம் மனோஜ் சொன்ன வார்த்தை.. ஆடிப்போன விஜயா குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 24ஆம் தேதிக்கான எபிசோடில் க்ரிஷ் மனோஜின் குழந்தை என்று மீனாவும், முத்துவும் சந்தேகப்படுகின்றனர். ஆனால் மனோஜ், ரோகிணிடம் சொன்ன வார்த்தையை கேட்டு மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி வீடியோ காலில் க்ரிஷ் டீச்சரிடம் பேச அதை பார்த்து அண்ணாமலை சந்தேகப்படுகிறார். வீடியோ காலில் கூட மாஸ்க் போடணுமா என்று அவர் சந்தேகப்பட்டு கொண்டிருக்கும் போதே க்ரிஷ் இது அம்மாவே இல்ல. அம்மா குரல் இல்லை என்று சொல்ல, அவருடைய பாட்டி நீ அமைதியா இரு அம்மாக்கு உடம்பு சரி இல்லை அதான் மாஸ்க் போட்டு இருக்கா என்று சமாளிக்கிறார்.

அந்த நேரத்தில் ரோகிணிக்கு குரல் கொடுத்துக் கொண்டிருந்த வித்யாவுக்கு இருமல் வருகிறது. அப்போது ரோகிணி தனக்கு இருமல் வந்தது போல நடிக்கிறார் அதனால் மீட்டிங்கை சீக்கிரமாக முடித்து விடுகின்றனர். அதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் கோவிலுக்கு போயிட்டு வந்து ஸ்கூலில் அண்ணாமலைக்காக காத்திருக்கின்றனர். அப்போது க்ரிஷ் மற்றும் அவருடைய பாட்டியும் வருகின்றனர்.
க்ரிஷ் முத்து மற்றும் மீனாவை பார்த்து கூப்பிட்டு விட, அவர்கள் சாக்லேட் கொடுத்து பொட்டு வைத்து விடுகின்றனர். பிறகு க்ரிஷ் வீடியோ காலில் வந்தது எங்க அம்மா மாதிரியே இல்லை மாஸ்க் போட்டுட்டு இருந்தாங்க என்று சொல்ல, முத்துவிற்கும் மீனாவிற்கும் சந்தேகம் வருகிறது. அதற்கு அவருடைய பாட்டி சமாளிக்கிறார்.

அதைத் தொடர்ந்து முத்து சாப்பிட ஹோட்டலுக்கு போகலாம் என்று க்ரிஷை கூப்பிட க்ரிஷ் சந்தோஷமாக கிளம்புகிறார். ஆனால் அவருடைய பாட்டி வெளியே எங்கேயும் சாப்பிடக்கூடாதுன்னு இவங்க அம்மா சொல்லி இருக்கா என்று அங்கிருந்து கூட்டிக்கொண்டு போய்விடுகிறார். பிறகு மீனாவும் முத்துவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மீனா எனக்கு இதுல ஏதோ ஒரு குழப்பம் இருக்கு க்ரிஷ் அம்மா யாருன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன், அது ஜீவா தான். க்ரிஷோட அப்பா உங்க அண்ணன் தான் என்று சொன்னதும் முத்து அதிர்ச்சியடைகிறார்.

ஆனால் அதில் ஒரு விஷயம் இடிக்குது, ஜீவாவும் மனோஜும் ரெண்டு பேரும் ரெண்டு வருஷம் தான் பழக்கம், ஒரு வருஷம் சேர்ந்து வாழ்ந்தோம் என்று சொன்னாங்க. ஆனா க்ரிஷ்க்கு ஏழு வயது ஆகுது அப்புறம் எப்படி என்று முத்து கேட்க, அதற்கு மீனா அவர்கள் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம் வெறும் லவ் பண்றதுக்காகவா 27 லட்சத்தை தூக்கி கொடுத்து இருப்பாரு. குழந்தைக்காக தான் கொடுத்திருப்பார்.
அதனால் தான் கிரிஷ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்ப எல்லாம் அவர் க்ரிஷுக்காக சப்போர்ட் பண்ணாரு என்று சொன்னதும் முத்துவும் சந்தேகப்படுகிறார். அடுத்ததாக இரவு நேரத்தில் இதையே முத்துக்கு மீனாவும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி ஃபோனை பார்த்துக் கொண்டே வந்து விஜயாவின் மேல் மோதி விடுகிறார்.
அதற்கு விஜயா எப்போது பார்த்தாலும் நீ போனை தான் பாத்துட்டு இருப்பியா என்று திட்ட, அதற்கு அண்ணாமலை இப்ப எல்லாமே ஃபோன் மூலமாக நடக்குது. உலகம் அவ்வளவு முன்னேறிப் போய் இருக்குது. இன்னைக்கு ஸ்கூலில் அந்த க்ரிஷ் பையனோட அம்மா வீடியோ காலில் வந்தாங்க என்று எல்லோரிடமும் சொல்கிறார். அதோடு மாஸ்க் போட்டுட்டு வீடியோ காலில் வந்தது பற்றி சொன்னதும் அதற்கு மனோஜ் வெளிநாட்டில் அப்படி ரூல்ஸ் இருக்கலாம் அதனால் கூட அவங்க அப்படி செஞ்சி இருக்கலாம் என்று மேலும் பல விஷயங்கள் மனோஜ் பேசிக்கொண்டே இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை கேட்ட கேள்வி! ரோகிணி நிலைமை? விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்
அதனால் முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வருகிறது. ஒரு கட்டத்தில் ரோகிணியிடம், ரோகிணி அந்த பையன் உன்னுடைய மகனாக இருந்தால் நீ வெளிநாட்டில் இருக்கும் போது அங்கு மாஸ்க் போட வேண்டிய ரூல்ஸ் இருக்கு என்றால் வீடியோ காலில் மாஸ்க் போட்டுட்டு தானே பேசுவ என்று கேட்க, இதை எதிர்பார்க்காத ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அப்பொழுது முத்துவும் மீனாவும் குழப்பத்தில் இருக்கிறார்கள் விஜயா என்னடா பேசுற என்று கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி அடுத்தவங்களை பற்றி இந்த நேரத்தில் நம்ம வீட்டில் எதற்காக பேசணும்? அந்த பொண்ணோட சூழ்நிலை என்ன இருந்துச்சோ அது நமக்கு தெரியாது. அதனால அடுத்தவங்கள பத்தி நாம பேசாம வேண்டாம்னு நினைக்கிறேன் என்று மனோஜை கூட்டிக்கொண்டு ரோகிணி கிளம்பி விடுகிறார்.

பிறகு மீனா தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா எனக்கு சந்தேகம் அதிகமாயிட்டே இருக்கு, உங்க அண்ணன் மனோஜ் தான் க்ரிஷின் அப்பா என்று எனக்கு உறுதியாக தெரிகிறது என்று சொல்ல, அதற்கு முத்து பல சந்தேகங்களை கேட்டுக் கொண்டே இருக்கிறார். கடைசியாக ரோகிணி தான் பாவம் மனோஜும் ஜீவாவும் சேர்ந்து ரோகிணியை ஏமாத்துறாங்க என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications