சிறகடிக்க ஆசை: நான் ஏழை பொண்ணு தான்! ஆனால், ரோகிணி சொன்ன வார்த்தை.. ஆடிப்போன அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 25ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி பற்றிய மொத்த உண்மைகளும் குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் அண்ணாமலை இடம் ரோகிணி சொன்ன வார்த்தையை கேட்டு விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார்.

அட அட இன்னைக்கு எபிசோடு ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே நடந்து விட்டது. எப்பதான் ரோகிணி பற்றிய உண்மை குடும்பத்திற்கு தெரிய வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடு செம விருந்து என்று சொல்ல வேண்டும். ரோகிணி தன்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் ஏமாந்து இருக்கிறார் பிறகு எப்படியாவது தன்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று மனோஜை திருமணம் செய்திருந்தாலும் அவர் ஒவ்வொரு இடத்திலும் தன்னைப் பற்றிய உண்மைகளை மறைத்து கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் கொடுத்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் தான் மட்டுமே நல்லா இருக்க வேண்டும் என்று ரோகிணி செய்யும் செயல்களும் அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனால் அவர் எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்று அவர் பற்றிய உண்மைகளை பிரவுன் மணி மொத்த குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டார்.

Siragadikka aasai serial vijay tv

வாயைத் திறந்த மணி

அதாவது இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் முத்துவிடம் இப்போ எதுக்கு லூசு மாதிரி பேசிட்டு இருக்க என்று கேட்க, முத்து பிரவுன் மணி இடம் ஐயா இப்பவாவது உண்மைய சொல்லுங்களேன் என்று சொல்ல, மணி நான் ரோகிணியோட மாமா கிடையாது. நான் கறிக்கடை தான் வச்சிருக்கிறேன். நடிப்பதற்காக ஆசைப்பட்டு வித்யா வந்து கேட்டதும் நான் ஒத்துக்கிட்டேன்.

உண்மைகளை சொன்ன மணி

நான் நடிச்சதுக்கு பணம் எதுவும் வாங்கல. ஒரு பொண்ணு வாழ்க்கை இக்கட்டான சூழ்நிலையில் இருக்கு அதை காப்பாத்தணும்னு கெஞ்சிச்சி அதுக்காக தான் நான் இப்படி பண்ணுனேன். எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க என்று மணி சொன்னதும் விஜயா உடைந்து போய் உட்கார்ந்து இருக்கிறார்.

அண்ணாமலை நீங்க போய் இப்படி பண்ணலாமா என்று கேட்க, அதற்கு மணி காசுக்காக இதை பண்ணல என்று மீண்டும் சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு ரோகிணியிடம் வந்து உண்மையை சொல்லிட்டா வலி கொஞ்ச நேரம் தான். ஆனா பொய் சொல்லிட்டா வாழ்நாள் ஃபுல்லா காப்பாத்தணும் என்று அட்வைஸ் கொடுத்து விட்டு போகிறார்.

Siragadikka aasai serial vijay tv

முத்து செய்த நக்கல்

அதற்கு முத்து இவ்வளவு நாளா நம்ம தலையில மிளகாய் அரைச்சிட்டு ஏமாத்திட்டு இருக்குது என்று சொல்ல, அண்ணாமலை ரோகிணியிடம் வந்து உனக்கு என்ன பிரச்சனை? உன்னை இந்த வீட்ல ஒரு பொண்ணா தானே பார்த்தோம். அதுவும் விஜயா உனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருந்தா? உனக்கு எங்களையெல்லாம் ஏமாத்த எப்படி மனசு வந்தது என்று கேட்கிறார்.

அண்ணாமலையின் கோபம்

அதோடு முத்து மட்டும் இது கண்டுபிடிக்காம இருந்திருந்தால் நீ எங்களை கடைசி வரைக்கும் ஏமாத்திட்டு தான் இருந்திருப்பியா? என்று கேள்வி கேட்க ரோகிணி அப்படியெல்லாம் இல்ல அங்கிள் என்று அழுது கொண்டே சொல்ல அதற்கு அண்ணாமலை ஏற்கனவே பண விஷயத்துல தப்பு பண்ணுனீங்க அதுவே பெரிய தப்புன்னு நினைச்சா அதெல்லாம் ஒரு தப்பே இல்லை என்கிற மாதிரி நீங்க தப்பு மேல தப்பு பண்ணிட்டே போறீங்க.

அண்ணாமலை கேட்ட கேள்வி

உனக்கு என்னதான் வேணும் எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்க மனோஜ்க்கு இதுல சம்பந்தம் இருக்கா என்று கேட்க மனோஜ், எனக்கு ஒண்ணுமே புரியலை நான் யாரு கூட வாழ்ந்திட்டு இருக்கேன்னு தெரியல என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பிறகு ரோகிணியிடம் வந்து அண்ணாமலை நீ என்ன சொன்னாலும் நாங்க நம்பிடுவோம்னு இப்படி பண்ணுறியா இப்பவாச்சு சொல்லு உனக்கு என்னதான் பிரச்சனை எதற்காக அப்படி பொய் மேல பொய் சொல்லிட்டு இருக்க என்று கேட்க ரோகிணி பேச வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

உண்மையை சொன்ன ரோகிணி

நான் ஏழை வீட்டு பொண்ணு தான் என்று ரோகிணி சொன்னதும், விஜயா நிறுத்துடி நீ வாயை தொறந்தாலே பொய் மட்டும் தான் வருமா என்று தள்ளி விடுகிறார். அண்ணாமலை பொறுமையாக பேசு என்று சொல்ல அதற்கு விஜயா எவ்வளவு பொய் எவ்வளவு பித்தலாட்டம். நான் தான் உன்னை பார்த்து கூட்டிட்டு வந்த மருமகன்னு எவ்வளவு பெருமையா சொல்லிட்டு இருந்தேன் தெரியுமா? என்ன நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டல என்று கோபப்படுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

விஜயா செய்த செயல்

எவனோ ஒரு கறிக்கடைக்காரனை மாமான்னு சொன்ன, நான் அவனுக்கு கும்பிடலாம் போட்டு பணிவிடை செஞ்சு இப்ப நினைச்சா கூட எனக்கு உடம்பெல்லாம் கூசுது என்று ரோகிணியின் கன்னத்தில் அடித்து பேசுகிறார். அதற்கு முத்து நீங்க தலையில் தூக்கி வைத்து ஆடுனீங்க இல்ல அதான் கால்ல போட்டு மிதிச்சிருக்கு என்று சொல்ல, அதற்கு விஜயா அவன் கேக்குறதுல என்ன தப்பு இருக்கு இனி இந்த ஊரெல்லாம் இதை தானே கேட்கும் என்று திட்டி விட்டு ரூமில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி வீச ரோகிணியின் ஹேண்ட் பேக்கை ஹாலில் தூக்கி விசிறி அடிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+