சிறகடிக்க ஆசை: மக்கு என மீண்டும் நிரூபித்த மீனா.. விஜயாவுக்கு கிடைத்த தண்டனை! மாஸ் காட்டிய முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 பிப்ரவரி 26ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா முன்பே சிந்தாமணி மீனாவை அசிங்கப்படுத்துகிறார். அதுபோல மனோஜ் மற்றும் விஜயா இருவருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்வதி வீட்டில் சிந்தாமணியை பார்த்ததும் அதிர்ச்சியாக இருக்கிறார். ஆனால் விஜயா சிந்தாமணி தான் பெரியவங்க அவங்க கூட உன்னால போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்று திமிராக பேசுகிறார். அதற்கு மீனா அப்படி சொல்லாதீங்க அத்தை என் மருமக ஜெயப்பான்னு சொல்லுங்க என்று சொல்கிறார். ஆனால் விஜயா வழக்கம்போல மீனாவை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

விஜயா பேசுவதை கேட்டு சந்தோஷமான சிந்தாமணி மீனாவின் கொட்டத்தை நான் அடக்குறேன். மீனாவை வளர முடியாமல் நான் செய்வேன் என்று விஜயாவிடமே சபதம் போடுகிறார். அதையும் பார்க்கலாம் என்று மீனா சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார். அப்போதுதான் பார்வதிக்கு சிந்தாமணியின் பிளான் புரிகிறது. மீனாவை பழி வாங்க வேண்டும் என்று தான் இந்த சிந்தாமணி விஜயா கிளாஸில் சேர்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்கிறார்.

அதைத்தொடர்ந்து விஜயா இவ்வளவு அவமானப்படுத்திய பிறகும் வீட்டில் விதவிதமான சாப்பாடுகளை மீனா செய்து வைத்திருக்கிறார். எல்லோரும் சாப்பிட உட்காரும்போது ரவி பீட்சா ஒன்று வாங்கிக் கொண்டு வருகிறார். அதை எல்லோரும் விஜயா மற்றும் மனோஜ் முன்பு ருசித்து சாப்பிடுகிறர்கள். ரவி விஜயாவிற்கு கொடுக்க அவங்க டயட்டில் இருக்கிறார்கள் இதை எலலாம் சாப்பிட மாட்டாங்க என்று முத்து ஏற்றி விடுகிறார்.

விஜயா அவமானப்படுத்தியது பற்றியும் சிந்தாமணி விஜயா டான்ஸ் கிளாஸில் இருப்பது பற்றியும் மீனா எதுவுமே முத்துவிடம் சொல்லவில்லை. ஆனால் விஜயா இப்படி ஒரு நாள் மட்டும் சமைச்சா போதாது தினமும் எனக்கு நீதான் சமைச்சு தரணும் என்று ரூல்ஸ் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு மீனா எனக்கு ஒரு நாள் ஆர்டர் இருக்கு அன்னைக்கு சமைக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மனோஜ் எங்ககிட்ட பணம் வாங்குறீங்களா எனக்கு சமைச்சு தந்தாகணும் என்று சொல்ல அதெல்லாம் முடியாது டா வேணும்னா சமைச்சு சாப்பிடு என்று முத்து திட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது மனோஜ் மற்றும் விஜயாவிற்கு வயிறு சரியில்லாமல் போய்விடுகிறது. இருவரும் பாத்ரூமுக்கு ஓடி டயர்ட் ஆகி விடுகிறார்கள். பிறகு இருவரும் சோகமாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அண்ணாமலை விசாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications