சிறகடிக்க ஆசை: மனோஜ் திமிருக்கு விழுந்த அடி! ரதிக்காக களமிறங்கிய முத்து - மீனா.. விஜயா எடுத்த உருப்படியான முடிவு
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றான 'சிறகடிக்க ஆசை', இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்களுடன் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. விஜயா மீதான ஸ்ருதியின் அம்மாவின் அக்கறையும், ரதியின் காதலனுக்காக முத்துவும் மீனாவும் நடத்திய அதிரடி வேட்டையும், மனோஜ் - ரோகிணி எடுத்த மோசமான முடிவும் இன்றைய எபிசோடின் முக்கிய ஹைலைட்ஸ்.
ஸ்ருதியின் அம்மா விஜயாவிடம் வந்து, "என்னைக்காவது ஒருநாள் பிரச்சனை ஆகிவிடும். நீங்க கொஞ்ச நாள் கேரளாவில் தங்கியிருங்களேன். எங்களுக்கு அங்கே சொந்தமா பெரிய வீடு இருக்கு, போட் ஹவுஸ் இருக்கு. நீங்க வேணா தங்குங்க," என்று பாசத்துடன் கூறுகிறார். ஆனால் ஸ்ருதியோ, "அங்கே தங்கினால் மட்டும் விட்டுவிடுவார்களா? போலீஸில் கம்ப்ளைன்ட் பண்ணினால் ஆன்ட்டி ஏதாவது விசாரிப்பாங்க," என்று பயமுறுத்துகிறார். ரவி உடனே, "அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. அம்மாவுக்கு நாங்க இருக்கோம். நம்ம மேல எந்தத் தப்பும் இல்லை," என்று கூறி ஸ்ருதிக்கும், விஜயாவுக்கும் ஆறுதல் அளிக்கிறார்.

மனோஜ் - ரோகிணியின் மோசமான பேரம்
மறுபக்கம், மனோஜ் ஷோரூமில் கோபமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, ரோகிணி வந்தவுடன் அவருடனும் கோபமாக பேசுகிறார். அதைப் பார்த்த ராணி, "என்ன ஆச்சு சார்? கோவமா இருக்காரு," என்று கேட்க, ரோகிணி நடந்த பிரச்சனையைச் சொல்கிறார். அதற்கு ராணி, "அந்தப் பொண்ணு ரதி குடும்பத்துக்கு பணத்தைக் கொடுத்து சரி பண்ணப் பாருங்க. இதுமாதிரி எல்லாம் பிரச்சனைக்கு இதுதான் சரியான முடிவு," என்று பணத்தினால் பிரச்சனையைத் தீர்க்க ஆலோசனை கூறுகிறார்.
ரோகிணியும் மனோஜிடம் வந்து, "இந்தப் பிரச்சனையை நாம் எப்படியாவது தீர்த்து வைத்தால்தான் ஆன்ட்டிக்கு என்மேல இருக்கிற கோவம் போகும். அதனால நாம கொஞ்சம் பணம் கொடுத்து இந்தப் பிரச்சனையைச் சரி பண்ண பார்ப்போம்," என்று சொல்கிறார். முதலில் மனோஜ் யோசித்தாலும், "அம்மாவும் டென்ஷனா இருக்காங்க. பேசிப் பார்ப்போம்," என ஒரு தவறான முடிவை எடுக்கின்றனர்.
சிக்கலில் ரதியின் குடும்பம்
ரதியின் குடும்பத்தினர் வீட்டில் உட்கார்ந்து, எப்படியாவது அந்தப் பையனுக்கு (தீபன்) ரதியைக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் அங்கு வருகின்றனர். "நீங்க அந்த டான்ஸ் சொல்லிக் கொடுக்கிறவங்க வீட்டில் இருக்கிறவங்கதானே?" என்று ரதியின் குடும்பத்தினர் கேட்க, மனோஜ் "ஆமாம்" என்று சொல்கிறார். "உங்க பொண்ணு பிரச்சனைக்குத் தீர்வு கொடுக்கத் தான் வந்திருக்கேன்," என்று மனோஜ் கூற, "என்ன சொல்லுங்க" என்று ரதியின் குடும்பத்தினர் கேட்கின்றனர்.
அப்போது மனோஜ், "உங்க பொண்ணோட கர்ப்பத்தைக் கலைச்சிட்டு நாங்க ஒரு லட்சம் பணம் கொடுக்கிறோம். அதை பேங்கில் போட்டுக்கோங்க," என்று அதிர்ச்சியூட்டும் வகையில் கூற, ரதியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். ஆத்திரமடைந்த ரதியின் குடும்பத்தினர், உடனடியாக மனோஜை அடித்து நாற்காலியில் கட்டிப் போட்டு படுக்க வைத்து விடுகின்றனர். ரோகிணியையும் ஒரு ரூமில் அடைத்து விட, இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
முத்து - மீனாவின் அதிரடி
மறுபக்கம், முத்து கார் செட்டில் உட்கார்ந்து தீபக்காகக் காத்துக் கொண்டிருக்க, மீனா வருகிறார். "தீபக் நம்பர், அட்ரஸ் வாங்கிட்டேன்," என்று சொல்ல, முத்து "போன் பண்ணி நான் சொல்வதுபோல் சொல்லு," என மீனாவிடம் கூறுகிறார். அதன்படி, மீனா தீபகிற்க்கு போன் போட்டு, ரதியின் தோழி பேசுவதாகவும், ரதி பாய்சன் குடித்துவிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். அதைக் கேட்ட தீபக் "ரதிக்கு என்ன ஆச்சு?" என்று பதற்றம் அடைகிறார்.
தேடுதல் வேட்டை
முத்துவும் மீனாவும், "அவன் உண்மையா லவ் பண்ணி இருந்தா, நான் வருவேன். பொய்யா, டைம் பாஸுக்காக லவ் பண்ணி இருந்தா, வரமாட்டான்," என்று பேசிக் கொண்டிருக்க, தீபன் ஆட்டோவில் வந்து இறங்குகிறார். மீனா தீபனிடம், "நீங்க எங்கே இருக்கீங்க?" என்று கேட்க, "நான் வர சொன்ன இடத்துலதான் இருக்கேன்" என்று தீபக் சொல்கிறார். உடனடியாக முத்து வந்து தீபக்கை அடி வெளுத்து வாங்குகிறார்.
இந்த அதிரடி திருப்பங்களுடன் இன்றைய எபிசோடு முடிந்துள்ளது. மனோஜ் - ரோகிணி என்ன ஆவார்கள்? முத்து தீபனை என்ன செய்யப் போகிறார்? ரதியின் நிலை என்ன? என்பது போன்ற பல கேள்விகளுடன் இந்த விறுவிறுப்பான எபிசோடு முடிவடைந்துள்ளது. அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications