சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன விஷயம், கோபத்தில் முத்து.. ரோகிணியை புரட்டி எடுத்த வித்யா.. இது பலருக்கு பாடம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூன் 27 ஆம் தேதிக்கான எபிசோடில் மீனா சொன்ன வார்த்தையை கேட்டு முத்து கடுமையாக கோபப்படுகிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் தோழியாக இருந்த வித்தியா இன்று ரோகிணியையே கேள்வி மேல் கேள்வி கேட்டு அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வீட்டில் சீதா ஏற்கனவே காதலித்திருக்கிறார், ஒரு பையனோட திரியிற அவளை எப்படி என்னுடைய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது என்று கேட்டதும் முத்து கோபமாகி உங்க குடும்பம் எங்களுக்கு சரிப்பட்டு வராது என்று கிளம்பி விடுகிறார். அதை தொடர்ந்து ரோகிணி வித்யா வீட்டிற்கு போகிறார்.

வித்யா வீட்டு வாசலில் நின்று கொண்டு கேள்வி கேட்கிறார். நீ எப்படி முருகனிடம் பணம் கேட்கலாம் என்று கேட்க ரோகிணி உனக்கு தான் முதலில் போன் செய்தேன் ஆனால் ரீச் ஆகல அதனால்தான் முருகனிடம் கேட்டேன் என்று சொல்ல, உன் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ என்னுடைய வாழ்க்கையை கெடுக்க தொடங்கிட்ட. என்னோட பிரண்டு என்று சொல்லி உன்னை மட்டும் தான் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தேன் ஆனால் நீ இப்படி பணம் கேட்டு தொந்தரவு பண்ணிட்டே இருந்தா என்னையும் உன்ன மாதிரியே நினைத்து விடுவாரு.
உனக்கு உன் வாழ்க்கை முக்கியம் என்றால் எனக்கு என் வாழ்க்கை முக்கியம். நீ உன்னுடைய அம்மா குழந்தை மீது பாசம் வைக்காம அவங்களை எங்கேயோ ஒரு இடத்தில் வச்சிருக்க. நீ என்னை பற்றி யோசித்து பார்ப்பியா? என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்க அதனால் கோபமான ரோகிணி உன்னை எல்லாம் பிரண்டுன்னு சொல்றதுக்கே கேவலமா இருக்கு என்று சொல்ல, நீ சொல்லவே வேண்டாம். முருகன் கிட்ட நீ பணம் கேட்டது தப்பு ஏற்கனவே வாங்குன ஒரு லட்சம் பணத்தை கொடுக்க வழியை பாரு என்று சொல்லி நித்யா அனுப்பி விடுகிறார்.
மறுபக்கம் முத்துவும் மீனாவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஸ்ருதி உள்ளே வருகிறார். பிறகு மீனாவிடம் சீதா கல்யாண விஷயம் பற்றி கேட்க, மீனாவும் நக்கலாக முத்துவுக்கு நடந்த விஷயத்தை சொல்கிறார். அதோடு இனி நானே மாப்பிள்ளை பார்க்க போறேன் என்று சொன்னதும் கடுப்பாகும் முத்து என்ன இப்படி பேசிட்டு இருக்க என்று கோபப்படுகிறார். அதோடு நான் சீதாக்கு பிடிச்ச மாப்பிள்ளையை கூட்டிட்டு வருவேன் என்று சொல்கிறார்.
இதனால் ரோகிணி கோபமாக வீட்டிற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்க இந்த பண விஷயத்தில் நீயும் எனக்கு உதவி பண்ண மாட்டியா? உங்க அம்மாவுக்கு கிப்ட் வாங்கியதால் தான் எனக்கு இப்ப நஷ்டம் ஆயிடுச்சு. நீ ஒரு லட்சம் கொடு நான் அடுத்த மாசம் கொடுக்கிறேன் என்று சொல்ல, நான் கொடுக்கலாம் ஆனால் இப்போ வரவு செலவு எல்லாம் அப்பா தான பாக்குறாரு அவர்கிட்ட போய் இப்போ கேட்டா அது அம்மாவுக்கு தெரிஞ்சுன்னா அவங்க கூட ரெண்டு லட்சம் கேப்பாங்க என்று சொல்ல ரோகினி கோபப்படுகிறார்.
அதற்கு மனோஜ் வேணும்னா நீ ரவி ஸ்ருதியிடம் கேட்டுப்பாரு என்று ஐடியா கொடுக்க, அதற்கு மனோஜை திட்டிவிட்டு ரோகிணி எனக்கு வேற வழி இல்லை இதைத்தான் செஞ்சாகணும் என்று ஸ்ருதியிடம் போய் பணம் கேட்கிறார். அதற்கு என்னிடம் பணம் இல்லை எல்லாத்தையும் ரெஸ்டாரண்டில் போட்டுட்டேன் என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி இதே பணத்தை மீனா கேட்டிருந்தா நீங்க உடனே கொடுத்து இருப்பீங்க எனக்கு தான் தரமா போறீங்க என்று சொல்ல, மீனா உங்கள மாதிரி ஏமாற்ற மாட்டாங்க. அதை சமாளிக்க அத்தைக்கு நகை வாங்கி கொடுக்க மாட்டாங்க. இப்போ இப்படி பணம் வேணும்னு என்கிட்ட கேட்க மாட்டாங்க என்றெல்லாம் சொல்ல ரோகிணி அவமானத்தில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications