சிறகடிக்க ஆசை: மீனாவை மாட்டிவிட்ட சீதா.. கோபத்தில் முத்து எடுத்த முடிவு! அருண் சொன்ன வார்த்தை, கதையே மாறிப்போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மே 27ஆம் தேதி காண எபிசோடில் முத்துவிடம் சேர்ந்த அருணுக்காக பேசப்போகிறார். அப்போது முத்து தன்னுடைய முடிவை உறுதியாக சொல்லிவிடுகிறார். அதே நேரத்தில் மீனாவிடம் அருண் நேரடியாக பேசுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அருண் உடைய அம்மா சீதாவின் வீட்டிற்கு வந்து தன்னுடைய மகனுக்காக சீதாவை பெண் கேட்கிறார். ஆனால் அதற்கு சீதாவின் அம்மா சந்திரா எங்க மூத்த மாப்பிள்ளை இருக்காங்க. அவரை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல, மீனா இரு அம்மா பொறுமையா பேசலாம் என்று சொன்னாலும் அதற்கு சந்திரா அதெல்லாம் வேண்டாம் இந்த வீட்டுக்கு எங்க மாப்பிள்ளை எவ்வளவோ நல்லது பண்ணி இருக்கிறார். இப்போ சீதாவுக்கு கண்டிப்பா ஒரு நல்ல இடத்துல வரன் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்காரு என்று சொல்லி விடுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அசிங்கப்படுத்திய சந்திரா

அதற்கு அருண் அம்மா சீதாவின் மனதில் என்ன இருக்குன்னு நீங்க கேட்காம முடிவெடுக்கிறிங்க என்று சொல்ல, நீங்க இதை பத்தி பேசுறதா இருந்தா இந்த வீட்டுக்கு வர வேண்டாம் என்று சந்திரா சொல்லிவிடுகிறார். இதனால் அதிர்ச்சியான சீதா ஏம்மா இப்படி பேசுற என்று கேட்க, நீ அமைதியா இரு என்று சந்திரா குரலை உயர்த்திப் பேச அருணின் அம்மா கிளம்பி விடுகிறார்.

அருண் சொன்ன வார்த்தை

அருண் அம்மாவிடம் என்ன ஆச்சு என்று கேட்க, எனக்கு சரிப்பட்டு வரும்னு தோணல அவங்க மாப்பிள்ளை எடுக்க முடிவை மீற முடியுதான்னு சொல்றாங்க என்று சொல்ல, அதற்கு அருண் அந்த முத்து இதை வச்சு என்னை பழிவாங்க பாக்குறானா? என்னைக்கு இருந்தாலும் சீதா தான் என்னுடைய பொண்டாட்டி, உன்னுடைய மருமக என்று சொல்லிவிட்டு அழைத்து செல்கிறார்.

முத்து எடுத்த முடிவு

மறுபக்கத்தில் சீதா முத்துவை வந்து சந்திக்கிறார். முத்து என்ன விஷயம் என்று கேட்க, நீங்க எங்க குடும்பத்துக்காக நிறைய செஞ்சு இருக்கீங்க. நீங்க எங்க குடும்பத்திற்கு நல்லது மட்டும் தான் நினைப்பீங்க உங்களுடைய விருப்பம் இல்லாம நான் அருணை கல்யாணம் பண்ண மாட்டேன். ஆனால் அவரும் நல்லவர் தான் என்று சொல்ல, அதற்கு முத்து உன் கண்ணு முன்னாடி காதல் என்ற திரை இருக்கு அதனால் அந்தப் பக்கம் அவனுடைய சுயரூபம் உனக்கு தெரியாது.

சீதா சொன்ன வார்த்தை

இது போல காதலிக்கும் போது நல்லவனா இருப்பவன் பலர் ஒரு சில மாதங்களில் அவனுடைய சுயரூபத்தை காட்டி விடுவாங்க. உனக்கு நல்ல ஒரு வாழ்க்கையை நான் முடிச்சு வைக்கிறேன் என்று சொன்னதும் சீதா அருண் அம்மா வீட்டிற்கு வந்து பேச வந்ததையும், அப்போது மீனா அங்கு இருந்த விஷயத்தை உளறி விடுகிறார். இதனால் முத்து கோபப்படுகிறார். மறுபக்கத்தில் மீனா பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது அருண் வழிமறித்து தான் சீதாவை உண்மையாக தான் காதலிக்கிறேன், நான் வேணும்னு எந்த பிரச்சனையிலும் உங்க கணவரிடம் செய்யவில்லை அது ஏதோ எதிர்பாராத விதமா தான் நடந்தது என்று தன் தரப்பு நியாயத்தை சொல்கிறார்.

ரகசியத்தை உளறிய சீதா

மீனா தன்னுடைய தங்கைக்காக இதில் நல்ல முடிவு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு முத்து வீட்டில் மீனாவிற்காக காத்துக் கொண்டிருக்கும் போது மீனா வீட்டிற்கு வருகிறார். அப்போது அம்மா வீட்டுக்கு போனதை பற்றி மீனா மறைத்து பேசிக் கொண்டிருக்க முத்து எனக்கு சீதா நீ அம்மா வீட்டுக்கு வந்த விஷயத்தையும் சொல்லிட்டா, அங்கு அருண் உடைய அம்மா வந்த விஷயத்தையும் சொல்லிட்டா என்று சொன்னதும் மீனா அதிர்ச்சியாகிறார்.

மிரட்டும் முத்து

பிறகு அருண் தன்னை வந்து பார்த்து பேசியதை பற்றி சொல்கிறார். அதற்கு முத்து நான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்கவே மாட்டேன். ஒருவேளை என்னுடைய சம்மதம் இல்லாமல் இந்த கல்யாணம் நடந்தா கூட நீயும் அந்த கல்யாணத்திற்கு போகக்கூடாது. அப்படியே போனால் என்னை மறந்துடு என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். இதனால் மீனா அதிர்ச்சியாகி நின்று கொண்டிருக்கிறார்.

ரோகிணியின் நாடகம்

மறுபக்கத்தில் மனோஜ் குளித்துக் கொண்டிருக்கும் போது ரோகிணி மனோஜை தவிக்க வைக்க வேண்டும் என்பதற்காக போனில் மகேஷ் என்று ஒருவரிடம் பேசுவது போல நடித்து கொண்டிருக்கிறார். ரோகிணி அவர் ஆண் நண்பரிடம் பேசிக்கொண்டு இருப்பதாக நினைத்து மனோஜ் அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+