சிறகடிக்க ஆசை: விஜயாவை மிரட்டிய அண்ணாமலை.. மீனாவால் கோபத்தில் ரோகிணி.. ஸ்ருதி- ரவிக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் 30ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவின் பணம் திரும்ப கிடைத்தது குறித்து அண்ணாமலை விசாரிக்கிறார். அப்போது விஜயாவிடம் அண்ணாமலை மிரட்டி பேசுகிறார். அதேபோல மீனா செய்த செயலால் ஸ்ருதி ரவிக்கு பாராட்டு கிடைக்கிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயாவிடம் அண்ணாமலை கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். இனி அந்த சிந்தாமணிகிட்ட பேச்சு வார்த்தை வச்சுக்காத அவங்களுடைய பழக்க வழக்கம் சரி இல்ல. அவங்க நம்ம மருமகளுக்கு போட்டியா இருக்காங்கனா நீ நம்ம மருமகளுக்கு தான் சப்போர்ட் பண்ணனும். உன்னுடைய மருமக மீனா ஜெயித்தா இந்த குடும்பத்திற்கு பெருமை தானே என்று சொல்ல, விஜயா அவங்க தான் இந்த பணத்தை திருடுனாங்க என்பதற்கு இவங்க கிட்ட என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்கிறார்.

அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி
அதற்கு ரவியும் ஸ்ருதியும் நாங்க அந்த சிந்தாமணி வீட்டில் இருந்து தான் பணத்தை எடுத்துட்டு வந்தோம் என்று சொன்னதும் விஜயா அதிர்ச்சியாகிறார். என்ன நடந்தது என்று அண்ணாமலை கேட்க மீனாவிடமிருந்து பணத்தை திருடிட்டு போன சிந்தாமணி வீட்டிற்கு நாங்க இன்கம் டேக்ஸ் ஆபிஸர் போல ரைடு போயி பணத்தை எடுத்துட்டு வந்துட்டோம் என்று சொன்னதும், மனோஜ் இது ஏமாற்ற வேலை நீங்கதான் போலீசுக்கு போக வேண்டிய ஆட்கள் என்று சொல்கிறார்.
முத்து கொடுத்த பதிலடி
அதற்கு முத்து இது நம்முடைய பணம் அந்த பணத்தை திருடுனவங்க கிட்ட இருந்து நம்ம எடுத்துட்டு வந்துட்டோம் அவ்வளவுதான். நாம யாரையும் ஏமாத்தல அவங்க பணத்த போய் எடுத்துட்டு வரல அவங்க கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது என்று சொன்னதும் அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். அப்போது வழக்கம் போல மீனா விஜயாவுக்கு சப்போர்ட்டாக அத்தையை திட்டாதீங்க மாமா என்று சொல்ல, விஜயா மீனாவிடம் எனக்காக நீ ஒன்னும் சப்போர்ட் பண்ணிட்டு வர வேண்டாம் என்று அவமானப்படுத்தி மீனாவுக்கு குட்டு கொடுத்து விடுகிறார்.
மீனாவுக்கு அவமானம்
எத்தனை முறை அவமானப்பட்டாலும் திருந்தாத மீனாவிற்கு இந்த அவமானம் பெரிதாக தெரியவில்லை. மீண்டும் வழக்கம்போல தலையை குனிந்து கொண்டு நின்று கொண்டு இருந்தார். அடுத்ததாக ரவி ஸ்ருதி ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா அவர்களுக்கு வாழைப்பூ வடையும், இன்னும் கொஞ்சம் ஸ்னாக்ஸும் செய்து கொண்டு கொடுக்கிறார். தனக்கு பணம் கிடைப்பதற்கு உதவி செய்ததற்கு தன்னால் முடிந்த சின்ன ட்ரீட் என்று சொல்லி சாப்பாட்டை கொடுத்துவிட்டு சீதாவிடம் சென்று பணத்தையும் கொடுக்கிறார்.
சீதா சொன்ன விஷயம்
சீதா பணம் எப்படி கிடைத்தது என்று கேட்க, முத்து செய்த செயலை சொன்னதும் சீதாவும் சந்தோஷப்படுகிறார். பிறகு மீனா கிளம்பியதும் அங்கு போலீஸ்காரர் அருண் வருகிறார். அருண் நமக்கு சீக்கிரமாக கல்யாணம் நடக்கணும் என்பதற்காக நான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன் என்று பிரசாதத்தை கொடுக்கிறார். அப்போது மீனா கொடுத்த பணத்தை சீதா கொடுக்க நீ யார்கிட்டமும் கடன் வாங்கினியா என்று அருண் கேட்கிறார்.
சமையலுக்கு பாராட்டு
அதற்கு சீதா இல்ல எங்க அக்காவோட கணவர் அந்த பணத்தை கண்டுபிடிச்சிட்டாரு என்று சொல்லி பணத்தை கொடுக்கிறார். பிறகு அருண் அங்கிருந்து கிளம்புகிறார். மறுபக்கத்தில் ஹோட்டலில் ஒரு யூடியூபர் சாப்பிட வருகிறார் என்பதற்காக தடபுடலாக சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் வரும் நேரத்தில் சமையல் ரெடியாகாததால் மீனா சமைத்த ஸ்னாக்ஸை கொடுக்கிறார்கள்.

சந்தோஷத்தில் ஸ்ருதி
முதலில் நீத்து இதற்கு வேண்டாம் என்று சொன்னாலும் வேறு வழி இல்லாமல் அவரும் சரி என்று சொல்கிறார். யூடியூபர் சாப்பிட்டு பார்த்துவிட்டு பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார். அந்த நேரத்தில் ரவி சமைத்து முடித்து விட அதையும் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பிறகு எல்லாமே சூப்பராக இருக்கிறது என்று ஹோட்டலுக்கு நல்ல ரிவ்யூ கொடுத்துவிட்டு கிளம்புகிறார். இதனால் நீத்து சந்தோசமாகி ரவி மற்றும் ஸ்ருதிக்கு பணம் கொடுத்து பாராட்டுகிறார்.
கோபத்தில் ரோகிணி
பிறகு ரவியும் ஸ்ருதியும் வீட்டிற்கு வந்து ஹோட்டலில் நடந்த விஷயத்தை குடும்பத்தில் எல்லோரிடமும் சொல்லி மீனாவிடம் பாதி பணத்தை கொடுக்க, மீனா பணம் வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் ஸ்ருதி பாராட்டு உங்களுக்கும் கிடைக்க வேண்டியது தான் அதனால் பாதி பணத்தை எடுத்துக்கோங்க என்று கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரோகிணி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications