சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றிய அடுத்த உண்மை! ஆதாரத்தை கையில் எடுத்த முத்து.. மனோஜ் கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 31ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி அறையில் இருந்த க்ரிஷ் டிரஸை முத்துவும் மீனாவும் கண்டுபிடிக்கிறார்கள். அதுபோல ரோகிணி ஸ்ருதிக்கு போன் செய்து சில விஷயங்களை பேசுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் போலீஸ் ஆபீஸர் அருண் பைக்கில் சீதா செல்கிறார். இதனால் அருண் தேங்க்ஸ் சொல்ல, சீதா எதற்கு என்று கேட்க, என்னுடைய காதலை அக்செப்ட் பண்ணியதற்கு என்று சொல்ல, நான் அக்செப்ட் பண்ணலையே என்று சீதா கேட்க, அதான் பைக்ல வந்துட்டியே என்று சொல்ல சீதா வெட்கப்படுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

பீல் பண்ணும் மீனா

மறுபக்கத்தில் மீனா சோகமாக தனியாக வீட்டில் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து மீனாவிற்கு சாப்பாடு வாங்கிட்டு வருகிறார். அவரிடம் இந்த வீடு எவ்வளவு கலகலப்பாக இருந்துச்சு. இப்ப யாருமே இல்லாமல் நாம் இரண்டும் பேரும் மட்டும் தனியாக இருக்கிறோம் என்று மீனா ஃபீல் பண்ணி பேச முத்து மனோஜ் எங்க போனான் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முத்துக்கு வரும் சந்தேகம்

அதற்கு அவர் தூங்கி முழிச்சு எங்க போனாருன்னு தெரியல என்று மீனா சொல்ல, நாம ரெண்டு பேரும் மட்டும் தானே இருக்கோம் அதனால நான் சாப்பாடு வாங்கிட்டு வந்துட்டேன் என்று சொல்ல, மீனா குடும்பத்தை நினைத்து பீல் பண்ணி பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது முத்து இந்த பார்லர் அம்மா இன்னும் எத்தனை உண்மை மறைச்சிருக்குன்னு தெரியல. எனக்கு அது மேல இன்னும் சந்தேகம் இருந்துகிட்டே இருக்கு என்று சொல்கிறார்.

அடுத்த தேடல் தொடங்கியது

அதற்கு மீனா எனக்கும் அப்படித்தான் தோணுது என்று சொல்ல, அப்போ அவங்க இல்லாத நேரத்துல தான் ரூமில் செக் பண்ணி பார்க்கணும் என்று முத்து சொல்ல, முதலில் மீனா மறுக்கிறார். பிறகு சரி என்று சொல்லிவிடுகிறார். முத்துவும் மீனாவும் மனோஜ் ரூமில் ரோகிணி பற்றிய ஆதாரம் ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது க்ரிஷுக்காக ரோகிணி எடுத்து வைத்த டிரஸ் இருக்கிறது. அதை பார்த்ததும் மீனா யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ரோகிணிக்கு மீண்டும் சிக்கல்

அப்போது முத்து நீ மனோஜ் மேல சந்தேகமா இருக்குன்னு சொன்னியே இந்த டிரஸ் அவன் தான் எடுத்து வைத்திருப்பானா என்று சொல்ல, எனக்கு அந்த சந்தேகம் இருக்கு. அதுவும் க்ரிஷ் அளவுக்கு சரியா இருக்கிறது. ஆனா ஒருவேளை இந்த டிரஸ்ஸ ரோகிணி எடுத்து வச்சிருக்கலாம்.. அவங்கதான் கிளைங்ட்டுக்காக எல்லாம் எடுத்துக் கொடுக்கிறேன்னு சொல்லுவாங்களே என்று சொல்ல,

முத்து கையில் ஆதாரம்

அந்த பார்லர் அம்மா சொல்லும் வார்த்தை எதுவுமே உண்மை கிடையாது. இதை எப்படி எடுத்துக்கன்னு தெரியல என்று யோசித்து கொண்டு இருக்கும்போது காலிங்பெல் சத்தம் கேட்டது டிரஸ்ஸை இருந்த இடத்தில் வைத்துவிட்டு முத்துவும் மீனாவும் வெளியே வந்து விடுகிறார்கள். பிறகு மனோஜிடம் போதை தெளிஞ்சு வெளியே போகும்போது எங்க போறேன்னு சொல்லிட்டு போக மாட்டியாடா என்று கேட்க, அதற்கு மனோஜ் டே இது நீ எப்பவும் பண்ற வேலை தானடா என்று சொல்லிவிட்டு போகிறார்.

மீனா சொன்ன உண்மை

பிறகு மனோஜ் ரூமில் இருக்கும் போது முத்துவை மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா உங்க அண்ணன் ரோகினி வந்த பிறகுதான் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறி இருக்கிறார். ஆனால் அவங்களை உங்க அம்மா வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் போது எதுவுமே பேசல ரோகிணி இல்லன்னா அவர் இன்னைக்கு ஒரு பிசினஸ் மேனா மாறியிருக்க முடியாது என்று சொல்லிக் கொண்டிருக்க இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மனோஜ் என்ன பற்றி நீங்க பேசாதீங்க என்று கோபப்படுகிறார்.

ஸ்ருதி சொன்ன வார்த்தை

அடுத்ததாக ஸ்ருதி மீனாவிற்கு ஃபோன் பண்ணி வீட்டில் நடந்த விஷயங்கள் பற்றி கேட்கிறார். அப்போது பாட்டி வராங்க என்றதும் உடனே கிளம்பி வரோம் என்று சொல்கிறார்.அதற்க்கு ரவி இன்னைக்கு நமக்கு வேலை இருக்கு என்று சொல்ல, அதற்கு முடியாது நாம அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறார் பார்த்தே ஆகணும் நாளைக்கு காலையில் கிளம்பனும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சந்தோஷத்தில் ஸ்ருதி

பாட்டி வந்தா ஜாலியா இருக்கும் இந்த பஞ்சாயத்தில் என்ன நடக்கிறது என்று நேரடியா பார்த்தா தான் நல்லா இருக்கும் என்று சொல்லி சொல்ல ரவி கோபப்படுகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் ரவியும் ஸ்ருதியும் வீட்டிற்கு காரில் கிளம்பி வந்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி ஃபோன் பண்ணி உங்களுக்கு விஷயம் தெரியுமா என்று கேட்க, எல்லாம் தெரியும் ரோகிணி உங்களுக்கு மாமானு ஒருத்தர் கிடையாதா? அவர் நடிக்க தான் வந்தாரா என்று கேட்க அதற்கு ரோகிணி முதலில் அதிர்ச்சி ஆகிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணிக்கு தெரிந்த விஷயம்

பிறகு என் தரப்பு நியாயத்தையும் கேட்கணுமா இல்லையா அவங்க எதுவுமே கேட்காம என்னை விரட்டி விட்டுட்டாங்க என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். அதற்கு ஸ்ருதி அதுதான் இன்னைக்கு பஞ்சாயத்து பண்ண ஜட்ஜ் வராங்களே என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சியடைகிறார். பிறகு பாட்டி உங்களுக்காக பேச வராங்க நீங்களும் வந்துருங்க என்று சொல்லிவிட்டு ஸ்ருதி போனை வைக்க ரோகினி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+