சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன அடுத்த ரகசியம்.. ஆடி போன அண்ணாமலை குடும்பம்! அழுத மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் மூன்றாம் தேதிக்கான எபிசோட் ரோகிணி பற்றிய அடுத்த உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ரோகிணி சொல்ல உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும் என்று அண்ணாமலை மொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் எனக்கு ஏற்கனவே ரோகிணியின் மாமா பற்றிய உண்மை தெரியும். அவர் உண்மையான மாமா இல்லை என்று எனக்கு ரோகிணி சொல்லிட்டா என்று சொன்னதும் மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். நேற்று வரைக்கும் நான் கேட்டதற்கு எனக்கு எந்த உண்மைகளும் தெரியாதுன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுன என்று அண்ணாமலை கேட்க, உண்மைய சொன்னா அம்மா திட்டுவாங்கன்னு தான் நான் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிட்டேன் என்று மனோஜ் சமாளிக்கிறார்.

உண்மைகளை சொன்ன ரோகிணி
அப்போது மனோஜிடம் ஏன்டா என்கிட்ட சொல்லல என்று விஜயா அடிக்க, அதற்கு பாட்டி பேசிட்டு இருக்கும்போது எதுக்கு கை நீட்டுற என்று திட்டுகிறார். அதை தொடர்ந்து பாட்டி ரோகிணியிடம் மூத்த மருமகளுக்கு தான் பொறுப்பு அதிகமா இருக்கு. நீ எதுக்காக இந்த வீட்டுக்குள் வரும்போது பொய் சொல்லிட்டு வந்த என்று கேட்க, அதற்கு ரோகிணி எனக்கு மனோஜை ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. அவனை ரொம்ப காதலிச்சேன் ஏற்கனவே எங்க அப்பா எங்க அம்மாவை ஏமாற்றிட்டு போயிட்டாரு அதனால அவர் மீது கோபத்தில் இருந்தேன் அதனால் தான் நான் அவர் இறந்து போயிட்டாருன்னு சொன்னேன்.
ஏமாற்றத்தில் விஜயா
ஆனால் பணக்கார வீட்டு பொண்ணுன்னு சொன்னாதான் அத்தை சம்மதிப்பாங்கன்னு தான் அப்படி சொல்லி விட்டேன். குடும்பத்தை ஏமாற்றி நான் சந்தோஷப்படணும் என்பதற்காக இப்படி ஒரு பொய் சொல்லல. மனோஜை கல்யாணம் பண்ணனும் என்பதற்கு தான் நான் இப்படி எல்லாம் செஞ்சேன் என்று சொல்கிறார். அதற்கு விஜயா ஏற்கனவே இந்த வீட்டில் ஒன்னும் இல்லாதவ ஒருத்தி இருக்கா, நீயும் ஒன்னும் இல்லாதவ தானா என்று திட்டுகிறார்.
ரோகிணி சொன்ன தகவல்
அதற்கு ரோகிணி நான் வந்து தான் மனோஜ் வாழ்க்கையே மாற்றி இருக்கிறேன். அதற்கு முன்பு மனோஜ் எல்லாரிடமும் அசிங்கப்பட்டு இருந்தான். இப்போ அவன் ஒரு சொந்த தொழில் பண்றான், அதுக்கு காரணம் நான் தான் என்று சொல்ல, அதற்கு முத்து அது எங்க அப்பா பணத்துல பண்ணுனது என்று சொல்ல, அது கூட நான் அந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கலன்னா மனோஜ் இன்னமும் வேலைக்கு போகாமதான் இருந்திருப்பான்.
பார்லரும் போயிடுச்சு
மனோஜ் வேலைக்கு போக வேண்டும் என்பதற்காக நான் எவ்வளவோ கஷ்டப்பட்டேன். எவ்வளவோ கடன் அடைச்சிருக்கிறேன். பார்லரை கூட வித்துட்டேன் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகிறார். ஆமா அதை விற்று ஒரு வருஷம் ஆகிடுச்சு. கடன் நிறைய இருந்தது என்பதற்காக அதை விற்றுட்டேன் என்று சொல்ல, அண்ணாமலை எனக்கு ஏற்கனவே தெரியும் இந்த உண்மையை நீ உன் வாயால சொல்லணும் என்று தான் நான் இதுவரைக்கும் அமைதியா இருந்தேன் என்று சொல்ல விஜயா அண்ணாமலை மீது கோபப்படுகிறார்.

மீண்டும் ஏமாற்றும் ரோகிணி
அதற்கு பாட்டி என் பிள்ளை இந்த குடும்பம் நல்லா இருக்கணும் என்று தானே உண்மையை சொல்லாமல் மறைத்து இருக்கான் என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். பிறகு அண்ணாமலை ரோகிணியிடம் இவ்வளவு விஷயங்கள் தான் மறைச்சிருக்கியா? இல்ல இன்னும் இருக்கா? என்று கேட்க, ரோகிணி கொஞ்ச நேரம் யோசிக்கிறார். பிறகு வேற எந்த உண்மைகளும் கிடையாது இவ்வளவுதான் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications