சிறகடிக்க ஆசை: ரோகிணியின் அம்மா பற்றிய ரகசியத்தை கண்டுபிடித்த முத்து.. அதிர்ச்சியில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் அம்மா பற்றி முத்து மற்றும் ஸ்ருதி கேள்வி எழுப்புகின்றனர். அதே நேரத்தில் மனோஜ் கேட்ட கேள்வியால் ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை ரோகிணியிடம் இதுவரைக்கும் நடந்ததெல்லாம் போகட்டும் இதுக்கு அப்புறம் இந்த வீட்டோட உண்மையான மருமகளாகவும் மனோஜ்க்கு நல்ல மனைவியாகவும் இருக்கணும் என்று சொல்ல, ரோகிணியும் தலையாட்டுகிறார். உடனே பாட்டி மீனாவிடம் கற்பூரம் தட்டை எடுத்துட்டு வா என்று சொல்ல மீனாவும் எடுத்துக்கொண்டு வருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

கோபப்படும் விஜயா

பிறகு பாட்டி ரோகிணியிடம் இனி எந்த பொய்யும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் பண்ணு என்று சொல்ல, ரோகிணி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சத்தியம் செய்கிறார். பிறகு ரூமுக்கு போங்க என்று பாட்டி சொன்னதும் ரோகிணி போகும் போது முத்து மீனாவை முறைத்துக் கொண்டே போகிறார். பிறகு எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவளை இந்த வீட்டை விட்டு துரத்தலாம்னு பார்த்தா நீங்க அவளை இந்த வீட்டில் உட்கார வச்சிருக்கீங்க என்று விஜயா பாட்டியிடம் கோபப்படுகிறார்.

பஞ்சாயத்து முடிந்தது

அதற்கு பாட்டி அவ தப்பு பண்ணுனதுக்கு நீயும் தான் காரணம். நீ பணம் முக்கியம்னு நினைச்சா அதனாலதான் அவ பொய் சொல்லி இருக்கா என்று சொல்லி, விஜயாவை ஆப் செய்கிறார். இனியாவது மூணு மருமகளையும் ஒரே மாதிரி பாருன்னு சொல்ல, முத்து பஞ்சாயத்து முடிஞ்சிடுச்சு இனி எனக்கு பசிக்குது நான் ஏதாவது வாங்கிட்டு வரேன் எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்.

மனோஜின் கோபம்

பிறகு ரோகிணி ரூமில் நின்று கொண்டிருக்கும் போது மனோஜ் வருகிறார். ரோகிணி மனோஜிடம் ரொம்ப தேங்க்ஸ் மனோஜ் என்னை காப்பாத்துனதுக்கு என்று சொல்ல, நான் உன்னை காப்பாற்றியதற்காக அப்படி சொல்லல. நீ போனை வைக்கும்போது உங்க அம்மா என்ன அடிக்க கூடாதுன்னு சொன்ன ஒரு காரணத்துக்காக தான் அப்படி சொன்னேன்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி சமாளிப்பு

இல்லன்னா அம்மா அதிகமா அடிச்சிருப்பாங்க என்று சொல்லிவிட்டு எல்லோரும் என்னை மாறி மாறி கோமாளி ஆக்குறீங்க எல்லாரும் என் கூட என்னை ஏமாற்றிக்கொண்டே இருக்கீங்க. நான் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ஏமாந்துகிட்டு இருக்க போறேன்னு தெரியல என்று ஃபீல் பண்ணி பேச ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். நான் உன்கூட சேர்ந்து வாழணும் என்பதற்கு இப்படியெல்லாம் பொய் சொன்னேன் என்று ரோகிணி சொல்ல இதுகூட உண்மையா அல்லது பொய்யா என்று மனோஜ் கேட்டதும் ரோகிணி நான் இந்த உண்மையை உன்கிட்ட சொல்லணும் நினைச்சிட்டே இருந்தேன் சந்தர்ப்பம் கிடைக்கல.

பேச்சு வார்த்தை

உனக்காகத்தான் நான் எல்லாமே பண்ணுனேன். உன் மேல சத்தியம் என்று சொல்ல வர உன் சத்தியத்தை எல்லாம் இனி நான் நம்ப போறது இல்ல என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே போனதும் ரோகிணி அழுது கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் மொட்டைமாடியில் முத்து, மீனா, ரவி, ஸ்ருதி நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முத்து கண்டுபிடித்த உண்மை

அப்போது ரோகிணி பற்றி பேசுவதால் மனோஜ் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அதில் முத்து எனக்கு இன்னமும் பார்லர் அம்மா ஏதோ உண்மையை மறைக்கிறது தோணுது என்று சொல்ல, அதற்கு மீனா அதுதான் அவங்க தெளிவா சொல்லிட்டாங்களே அத்தை பணக்காரன் மருமக வேணும்னு கேட்டதால் இப்படி ஏமாற்றினேன்னு சொல்றாங்களே என்று கேட்க, அதற்கு முத்து அவங்க அப்பா தான் கெட்டவரு. சரி, ஆனா அவங்க அம்மா நல்லவங்க தானே அம்மா போட்டோவை ஏன் இதுவரைக்கும் காட்டல என்று முத்து கேட்க ஸ்ருதியும் ஆமாம் முத்து கேட்கிறது சரியான கேள்வி என்று சொன்னதும் இதை மனோஜ் கேட்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

பீல் பண்ணும் மனோஜ்

அது மட்டுமில்லாமல் மனோஜ் வந்து கடைசியா இந்த உண்மை எனக்கு தெரியும் என்று சொன்னது சுத்தமான பொய். அவன் உண்மை தெரிஞ்ச பிறகு தான் குடிக்க ஆரம்பிச்சான். ஏற்கனவே தெரிஞ்ச உண்மைக்காக அவன் குடிச்சு பிரச்சனை பண்ணி இருக்க மாட்டான் என்று சொன்னதும் மனோஜ் அங்கிருந்து கிளம்பி சென்று ரூமில் தனியாக உட்கார்ந்து இருக்கிறார். ரோகிணி பேச வரும்போதும் மனோஜ் கோபத்தை காட்ட ரோகிணி தனியாகவும் மனோஜ் தனியாகவும் உட்கார்ந்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+