Siragadikka Aasai : முத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோகிணி! அசிங்கப்பட்ட அருண்.. இன்று தான் செம சம்பவம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடு, ரோகிணியின் சதியால் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் மனோஜ் குடும்பத்திற்குத் திரும்பி வந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ரோகிணி கைது செய்யப்பட்ட நிலையில், அவளைக் காப்பாற்ற முத்துவும் மீனாவும் எடுத்த முயற்சிகள், மற்றும் குடும்பத்தினர் ரோகிணியை மன்னித்தது போன்ற உணர்வுபூர்வமான காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெற்றன.

ரோகிணியின் துரோகம்
நேற்றைய எபிசோடில் ரோகிணியின் துரோகம் அம்பலமான நிலையில், இன்றைய எபிசோடில், அவள் கைது செய்யப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். இது குறித்துப் பேசிய மீனா, "ரோகிணியை அரெஸ்ட் பண்ணினால் மாமாவுக்குத்தான் அவமானம், நம்ம குடும்பத்துக்கு இது ரொம்ப கஷ்டத்தைக் கொடுக்கும்," என்று கூறுகிறார். "ஆமா, அப்பா ரொம்ப வருத்தப்படுவார்," என்று சொல்லும் முத்து, போலீஸ்காரர்களிடம் சென்று, "அந்தச் சிட்டிதான் ஆளை வச்சு அடிச்சிருக்கா. இவங்க பேசத்தான் சொல்லி இருக்காங்க. விட்டுடுங்க சார்," என்று கெஞ்சுகிறார்.
"இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதே உங்க பொண்டாட்டி தான், அப்புறம் எப்படி விட முடியும்?" என்று போலீஸ் கேட்க, "எங்க குடும்பத்தோட மரியாதை போயிடுவோம்," என்று முத்துவும் மீனாவும் கெஞ்சுகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல், போலீஸ், "இதுதான் உனக்கு கடைசி வார்னிங். இதுக்கு அப்புறம் இது மாதிரி பண்ணக் கூடாது. பண்ணினால் அரெஸ்ட் பண்ணிடுவேன்," என்று ரோகிணியை மிரட்டிவிட்டு, பேப்பரில் கையெழுத்து போடச் சொல்கின்றனர். ரோகிணியும் கையெழுத்துப் போடுகிறார்.
அசிங்கப்பட்ட அருண்
அதோடு உங்களால தான் இந்த பொண்ணு இவ்வளவு கஷ்டப்பட்டு அலைஞ்சது அதுக்காக இந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல, ரோகினி மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு மீனா வெளியே வரும்போது அங்கு வந்த அருண் நான் மேலிடத்தில் பேசி விட்டேன் ஒரு விளக்க கடிதம் எழுதிக் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் என்று அருண் சொல்ல, அதற்கு முத்து தப்பே பண்ணாம நான் ஏன் எழுதி தரணும் என்று கேட்கிறார். அதற்கு மீனா நான் உண்மையை நிரூபிச்சுட்டேன் அவங்க விட்டுட்டாங்க என்று சொன்னது அதிர்ச்சியில் விட்டுட்டாங்களா என்று கேட்க, அவர் மேல தப்பே இல்லை என்று நிரூபிச்சிட்டேன் என்று சொன்னதும் அருண் கோபப்படுகிறார்.
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரி உங்களுக்கு என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லுங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போக முத்து என்னா நடிக்கிறான் என்று சொல்லி கொண்டிருக்கிறார். பிறகு போலீஸிடம் சென்று அருண் எப்படி சார் அவனை விட்டுடிங்க என்று கேட்க, உங்க குடும்ப பிரச்சனையை ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வராத. உனக்கு அவன் மேல கோபம் இருக்கு என்று தெரியும் அத வச்சு பழிவாங்க நினைக்காத என்று ஆபீஸர் அருணை திட்டி விடுகிறார்.
கிரிஷின் பாசம்
அண்ணாமலை வீட்டிற்குத் திரும்பும்போது கிரிஷ் வீட்டில் இல்லாததால் விஜயாவிடம் கேட்கிறார். விஜயா சரியான பதில் சொல்லாமல் கோபமாகப் பேச, ரவியும் அண்ணாமலையும் கிரிஷைத் தேட வெளியே செல்கின்றனர். கிரிஷ், ரோகிணிக்கு எதுவும் ஆகக் கூடாது என ஒரு கோவிலில் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து அண்ணாமலை நெகிழ்கிறார்.
"என் பாட்டிதான் ஏதாவது கஷ்டமா இருந்தா சாமிகிட்ட சொல்லி அழச் சொல்லுவாங்க. அவங்க அழுது நான் பார்த்திருக்கேன். அதனாலதான் அம்மா அரெஸ்ட்னு சொல்லிவிட்டு, ரோகிணி ஆன்டியை அரெஸ்ட் பண்ணிட்டாங்க, அதனாலதான் எனக்கு அழுகை வந்துடுச்சு," என்று கிரிஷ் சொல்கிறான். "கொஞ்ச நாள் ரோகிணி கூடப் பழகுனதால இவன் எவ்வளவு பாசமா இருக்கா," என்று அண்ணாமலை உணர்ச்சிவசப்பட்டு, கிரிஷை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
அண்ணாமலையின் அட்வைஸ்
பிறகு, வீட்டில் அனைவரும் முத்து வருவார் என்று எதிர்பார்த்து இருக்க, முத்து வீட்டிற்கு வந்து நடந்த விஷயங்களைச் சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் ரோகிணியும் மனோஜும் வீட்டிற்கு வந்துவிட, "இந்த வீட்டில் என்ன நடக்குதுன்னே தெரியல," என்று அண்ணாமலை கோபப்படுகிறார். "சம்பந்தமே இல்லாம பணம் கேட்கிறாங்க. இந்த வீட்டில் வாழ வந்த பொண்ணு ரவுடிங்க கூட சகவாசம் வச்சிருக்க," என்று சொல்லிவிட்டு, ரோகிணியை அழைத்து, "என்ன பழக்கம் இதெல்லாம்?" என்று கண்டிக்கிறார்.
ரோகிணி மன்னிப்பு கேட்க, "நம்ம சரியா இருந்தா நேரம் சரியா இருக்கும்," என்று அண்ணாமலை அட்வைஸ் சொல்கிறார். பின்னர், குடும்பத்தினர் அனைவரும் ரோகிணியிடம் என்ன பேசுவார்கள், அதற்கு விஜயாவின் பதில் என்ன, அண்ணாமலை என்ன முடிவு எடுக்கிறார் என்பதை வரும் எபிசோடுகளில் காணலாம்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications