சிறகடிக்க ஆசை: விஜயா வீட்டுக்கு குழந்தை வர போகுது.. போட்டுடைத்த பாட்டி, வெட்கத்தில் முத்து சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் பாட்டி வீட்டை விட்டுப் போகும்போது இந்த வீட்டில் விரைவில் குழந்தை வரவேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிட்டு போயிருக்கிறார். அதை கேட்டு விஜயா கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எல்லோரும் ஹாலில் வட்டமாக இருக்க மீனா முத்துக்கு சாப்பாடு வைக்கிறார். பாட்டி சொன்னது கூட நல்லா இருக்கு. எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயாவும் வந்து சாப்பிட உட்காருகிறார். அப்போது மீனா அவருக்கு பூரி வைத்து விட, சாப்பிடும் நேரத்தில் முத்து ஆடிய ஆட்டம் என்ன என்று பாட்டு பாடி விஜயாவை வெறுப்பேற்றுகிறார்.

அசிங்கப்படுத்திய குடும்பம்
கொஞ்ச நேரத்தில் அங்கு வந்த அண்ணாமலையும் முத்து போலவே கிண்டல் செய்கிறார். அடுத்ததாக ஸ்ருதி வந்து ரோகிணி தான் உங்களோட ஃபேவரைட் மருமகள் என்று சொல்லுவீங்க இப்போ இனி அந்த இடத்துக்கு யார் வருவாங்க என்று கிண்டல் செய்கிறார். அதை தொடர்ந்து ரவி, மீனா என எல்லாரும் விஜயாவை ரவுண்டு கட்டி கேள்வி கேட்டு கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபமான விஜயா போதும் என்று கத்துகிறார்.
விஜயாவின் பகல் கனவு
அப்போது மீனா உங்களுக்கு ஒன்னும் மீனா பூரி வைக்கலையே அதுக்குள்ள போதும்னு சொல்லுறீங்க என்று சொன்னதும் இதுவரைக்கும் தான் கண்டது கனவு என்று விஜயாக்கு தெரிய வருகிறது. அண்ணாமலை என்ன பகலிலே கனவா என்று கிண்டல் செய்கிறார். பிறகு எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாட்டி ஊருக்கு கிளம்புவதாக சொல்கிறார்.
பாட்டி போட்ட கண்டிஷன்
அப்போது முத்து கொஞ்ச நாள் இருந்துட்டு போங்க பாட்டி என்று சொல்ல, நான் இல்லன்னா அங்க வேலையே நடக்காது என்று சொல்லிவிட்டு எல்லோருக்கும் விபூதி வைத்துவிட்டு இந்த வீட்டில் குழந்தை பிறந்தால் தான் பிரச்சனை இருக்காது. முதல்ல எல்லோரும் குழந்தை பெற்றுக் கொள்கிற வழியை பாருங்க. அந்த தொட்டிலுக்கு வேலை இல்லாம போயிடும் போல என்று அட்வைஸ் செய்கிறார்.
வெட்கத்தில் முத்து
அப்போது விஜயாவிடம் இனியாவது மூன்று மருமகளையும் ஒன்னா பாரு என்று சொல்லிவிட்டு மனோஜிடம் பொறுப்பாக இருக்குமாறும் ரோகிணியிடம் இனியாவது பொய் சொல்லாமல் உண்மையாக இரு என்று சொல்கிறார். பிறகு ஸ்ருதி ரவியிடம் சண்டை போட்டாலும் சந்தோஷமா வாழனும் என்று சொல்லிவிட்டு மீனா கிட்ட எனக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை அவளே எல்லாம் பாத்துக்குவா. குழந்தை பிறந்தே ஆகணும் அதுக்கு மீனாதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு கிளம்ப முத்து வெட்கத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
கண்டுகொள்ளாத மனோஜ்
பிறகு விஜயா ரோகிணியை பார்த்து முறைக்க ரோகிணி ரூமுக்குள் போகிறார். அவரை தொடர்ந்து மனோஜும் பின்னாலே போகும்போது விஜயா முறைத்ததுடன் அவர் ஹாலில் உட்காருகிறார். மறுநாள் மனோஜ் வேலைக்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறார். ரோகிணி அமைதியாக ரெடியாகி நின்று கொண்டிருக்கிறார். மனோஜ் எதுவும் பேசாமல் வெளியில் வந்து விஜயாவிடம் சொல்லிவிட்டு போக கிளம்புகிறார்.
அம்மா பிள்ளை மனோஜ்
அப்போது விஜயா மனோஜை நிற்க சொல்லி இனி மேல் ரோகிணி ஷோரூமுக்கு வரக்கூடாது. நீ மட்டும் தான் போகணும் அவ கிட்ட பேசக்கூடாது என்று சொல்கிறார். இதை அவளை என் முன்னாடி நிற்க வைத்து நீ சொல்லு என்று சொல்ல ரோகிணியை கூப்பிட்டு இனிமேல் ஷோரூம் வர வேண்டாம் என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு ரோகிணி ஏன் என்று கேட்கிறார். விஜயா முறைத்துக் கொண்டு ஏன் என்று உனக்கு தெரியாதா? நீ ஒன்னும் தெரியாத பாப்பாவா? என்று கோபப்பட்டு பேசுகிறார்.
விஜயாவின் புது பிளான்
அவன் வேலையை இனி அவனே பார்த்துக் கொள்வான் என்று சொல்கிறார் அதற்கு ரோகிணி அவருக்கு யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கணும் யார் நமக்கு எவ்வளவு பணம் தரணும் என்று அக்கௌன்ட் எதுவும் தெரியாது. அதை நான் தான் மெயின்டன் பண்ணிட்டு இருக்கிறேன் என்று சொல்ல என் பையன் நிறைய படிச்சிருக்கான் அவனுக்கு எல்லாம் தெரியும் இனி அவன் வேலையை அவனே பார்த்துக்கொள்வான் நீ அங்கே போகக்கூடாது என்று திட்டியதால் ரோகிணி ரூமுக்கு வந்து கோபமாக நின்று கொண்டிருக்கிறார்.
அம்மாவின் பிறந்தநாள்
அப்போது ரோகிணியின் அம்மா போன் செய்து கல்யாணி நல்லா இருக்கியா என்று விசாரிக்க, நான் இருக்கிற நிலைமையில் நீ இந்த கேள்வி கேட்கிற என்று கோபப்படுகிறார். அப்போது இன்னைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா? எனக்கு பிறந்தநாள் என்று சொன்னதும் ரோகிணி கோபத்தை மறந்து அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு நீ வீட்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டு இன்னைக்காவது வருவியா என்று கேட்க ரோகிணி வருகிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications