சிறகடிக்க ஆசை: மீனாவிடம் வித்யா சொன்ன விஷயம்.. தப்பித்த சீதா.. அதிர்ச்சி கொடுத்த முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 மார்ச் 5ஆம் தேதிக்கான எபிசோடில் ஸ்ருதியின் அம்மா அண்ணாமலை வீட்டில் வந்து பிரச்சனை செய்கிறார். அதே நேரத்தில் மீனாவிற்கு வித்யா போன் செய்து தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பேசுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வித்யா மற்றும் முருகன் இருவரும் கோவிலில் சந்தித்து கொள்கிறார்கள். அப்போது மீனா சொல்றது போல இருவரும் தங்களுக்கு பிடித்த விஷயத்தை பேப்பரில் எழுதி மாறி மாறி படித்துக் கொள்கிறார்கள். அப்போது வித்யா எழுதிக் கொடுத்ததில் பாதி ஓகேவாக இருந்தாலும் கொஞ்சம் மாத்திக்கிறேன் என்று முருகன் சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அதுபோல நான் எழுதி கொடுத்தது உங்களுக்கு ஓகேவா என்று முருகன் கேட்க, நீங்களே எனக்கு விட்டுக்கொடுக்கும் போது நானும் உங்களுக்காக விட்டுக் கொடுக்க மாட்டேனா? ஆனாலும் அவங்க கிட்ட கேட்டு சொல்றேன் என்று சொல்ல, யாருகிட்ட என்று முருகன் கேட்கிறார். அதற்கு என்னுடைய மனசாட்சி என்று சொல்லிவிட்டு தனியாக வந்த வித்யா மீனாவுக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்கிறார்.

அப்போது மீனா அவர் மட்டும் எல்லா இடத்திலும் விட்டுக்கொடுத்து போகக்கூடாது நீங்களும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகணும் என்று அட்வைஸ் செய்கிறார். அப்போது நான் இப்பவே லவ்வ சொல்லிடவா என்று ஸ்ருதி கேட்க, அதற்கு மீனா வேணாம் வெயிட் பண்ணுங்க அவரே சொல்லட்டும் என்று அட்வைஸ் பண்ணுகிறார். பிறகு வித்யாவிடம் முருகன் வந்து உங்க மனசாட்சி கிட்ட கேட்டுட்டீங்களா என்ன சொல்லுச்சு என்று கேட்க, அதற்கு வித்யா அதையெல்லாம் இப்ப சொல்ல முடியாது வாங்க சாமி கும்பிடலாம் என்று அழைத்து செல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மறுபக்கத்தில் ஸ்ருதியின் அம்மா அண்ணாமலை வீட்டிற்கு கோபமாக வருகிறார். என் பொண்ணை வேலைக்கு அனுப்பி தான் நீங்க வீட்டில் சாப்பிடனுமா? அவளை நாங்க எப்படி வளர்த்திருக்கிறோம் தெரியுமா? அவ டப்பிங் போறதுக்கு கூட அப்பாவுக்கு பிடிக்காது. அவ ஆசைக்காகத்தான் அவங்க அப்பா சம்மதிச்சாரு ஆனா இப்போ ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துட்டு இருக்கா என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு அண்ணாமலை எங்க வீட்டுல மூணு மருமகள் இருக்காங்க. யாருகிட்டயும் நாங்க வேலைக்கு போ சம்பளம் தா என்று சொன்னது கிடையாது. எங்க பசங்க சம்பாதிக்கிறது வீட்டு செலவுக்கு கொடுப்பாங்க அதுவே எங்களுக்கு போதும் என்று சொல்ல ஆனாலும் ஸ்ருதியின் அம்மா கோபமாக என் பொண்ணு இனி இந்த வீட்டுக்கு சம்பாதித்து தரக்கூடாது என்று இந்த பிளைன் செக்குல நீங்க எவ்வளவு பணம் வேணாலும் எழுதிக்கோங்க என்று சொல்ல அதற்கு அண்ணாமலை எங்களுக்கு பணம் தேவையில்லை என்று சொல்கிறார்.

ஆனாலும் ஸ்ருதியின் அம்மா மீண்டும் மீண்டும் பணத்தை எழுதிக்கோங்க என்று சொல்லிக் கொண்டே இருக்க அதை வாங்கிய முத்து அதில் 50 ரூபாய் என்று முதலில் போட பிறகு ஒவ்வொரு ஜீரோவாக கூட்டி 500 கோடி என்று எழுத ஸ்ருதியின் அம்மா பயப்படுகிறார். உடனே முத்து அந்த செக்கை எடுத்துக்கொண்டு நாம் போய் பணம் எடுத்துட்டு வந்துடுறேன் என்று கிளம்ப, ஸ்ருதி அம்மா வேக வேகமாக நிறுத்தச் சொல்கிறார்.

அதற்கு முத்து நீங்க தானே எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னீங்க என்று சொல்ல, அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்ருதியின் அம்மா நிற்கிறார். அப்போது முத்து நீங்க பேசுறதை முதலில் நிறுத்துங்க என்று செக்கை கிழித்து போடுகிறார். ஆனாலும் ஸ்ருதியின் அம்மா ஓவராக பேசிக்கொண்டே போக கோபமான அண்ணாமலை நிறுத்துங்க நீங்க இந்த வீட்டோட சம்மந்தி என்பதால் தான் பொறுமையா பேசிகிட்டு இருக்கோம்‌.

Siragadikka aasai serial vijay tv

நீங்க அளவுக்கு மீறி பேசிட்டு இருக்கீங்க என்று சொல்ல, உடனே விஜயாவிடம் இந்த வீட்ல நீங்க தான் நேர்மையாக நடப்பீங்க நீங்களாவது ஸ்ருதியை வேலைக்கு போகக்கூடாது என்று சொல்லக்கூடாதா? என்று கேட்க, அதற்கு விஜயா உங்க பொண்ணு உங்க பேச்சையே கேட்கவே மாட்டேங்குறா அப்புறம் என் பேச்சை கேப்பாளா? என்று சொல்கிறார்.

அதற்கு ஸ்ருதியின் அம்மா இனி என்னுடைய பொண்ணு அந்த ஹோட்டலுக்கு சர்வையர் வேலை பார்க்க போகக்கூடாது வேணும்னா நாங்க ரவிக்கு ஒரு ஹோட்டல் வச்சி கொடுக்கிறோம். அதை பார்த்துக்க சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் மற்றும் சீதாவும் அருணும் வித்யாவும் முருகனும் இருக்கும் கோவிலுக்கு வருகிறார்கள்.

அப்போது சீதா, வித்யாவை பார்த்து விடுகிறார். இதனால் நான் அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன் என்று கிளம்பி விடுகிறார். பிறகு அருண் தனியாக நிற்கும் போது அப்போது முருகன் அருணிடம் வந்து நலம் விசாரிக்கிறார். பிறகு இருவரும் காதல் பற்றி மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+