சிறகடிக்க ஆசை: மனோஜை காப்பாற்றிய முத்து! அதிர்ச்சி கொடுத்த ரோகிணி.. செம பதிலடி கொடுத்த மீனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025, ஜனவரி 6ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் ஷோரூமில் இருக்கும்போது சிலர் வந்து மனோஜிடம் பிரச்சனை செய்கின்றனர். அப்போது முத்து தான் மனோஜ்க்கு உதவி செய்கிறார். அதே நேரத்தில் முத்து மற்றும் மீனாவிடம் ரோகிணி கோபப்படுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இரண்டு பேரும் ஷோரூமில் இருக்கும்போது அங்கு ஸ்ருதி, ரவி இருவரும் வருகின்றனர். அவர்களிடம் என்ன விஷயம் என்று கேட்க, முத்து தான் வர சொன்னார் என்று இரண்டு பேரும் சொன்னதும் என்னவாக இருக்கும் என்று மனோஜும், ரோகிணியும் யோசித்துக்கொண்டிருக்கின்றனர்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது அங்கு முத்து, அண்ணாமலை, விஜயா, மீனா என எல்லோரும் வருகிறார்கள். அவர்களை பார்த்ததும் மனோஜ் என்ன விஷயம் என்று கேட்க, அதற்கு முத்து அதுதான் எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சுல்ல இது அப்பாவோட பணம் தானே அப்போ அப்பாதான் இனி ஓனர் நீ மேனேஜரா வேணா இருந்துக்கோ என்று சீட்டிலிருந்து மனோஜை எழுந்திருக்க சொல்கிறார்.

மனோஜ் எழுவதற்கு தயக்கம் காட்டுகிறார். ஆனால் முத்து வலுக்கட்டாயமாக சேரில் இருந்து எழுந்திரு என சொல்கிறார். பிறகு அண்ணாமலை மற்றும் விஜயாவை நிற்க வைத்து அவர்கள் இருவருக்கும் முத்து மாலை போட்டு மரியாதை செய்கிறார். அதோடு இனி இவங்கதான் இந்த கடையின் ஓனர் மனோஜ் உங்கள மாதிரி இங்கே வேலை செய்யுற ஆள் என்று சொன்னதும் மனோஜ் கோபப்படுகிறார்.

அப்போது முத்துவின் நண்பர் செல்வமும் மனோஜை கிண்டல் செய்ய அதனால் கோபமான விஜயா செல்வத்தை திட்டி விடுகிறார். அந்த நேரத்தில் சந்தோஷி சார் அங்கு வருகிறார். அவர் வந்து நீங்க இங்கே எல்லாரும் குடும்பத்தோடு இருக்கீங்க... என்ன மாலையெல்லாம் போட்டு இருக்கீங்க.. எதுவும் விசேஷமா என்று கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை கோயிலுக்கு போயிட்டு வந்தோம். அப்படியே கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆகுதுன்னு பாத்துட்டு போலாம்னு வந்தோம் என்று சமாளிக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் பணம் வாங்கிய டீலர்கள் வந்து கடையில் சத்தம் போடுகிறார்கள்.

அதற்கு சந்தோஷி மனோஜ் மேல எந்த பிரச்சினையும் இல்ல என்னால்தான் பொருட்கள் அனுப்பி வைக்க முடியல. ரெண்டு நாளில் எல்லாம் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அவர்களை அங்கிருந்து அனுப்புகிறார்கள். பிறகு மனோஜிடம் டீலர் கிட்ட இருந்து வாங்குன காசு எங்க? எதுக்காக எனக்கு அனுப்பி விடல? நீங்க காசு அனுப்பி இருந்தா நான் பொருள் அனுப்பி இருப்பேன் என்று திட்டுகிறார்.

அதற்கு அண்ணாமலை நான் வீடு வாங்கி ஏமாந்த விஷயத்தை சொல்ல போகும்போது முத்து குறுக்கிட்டு வீடு வாங்குறேன் என்று மனோஜ் ஏமாந்த விஷயத்தை சொல்கிறார். அதோடு நாங்கள் சீக்கிரமா அந்த ஆளை கண்டுபிடிச்சுருவோம் என்று முத்து சொல்கிறார். அதற்கு சந்தோஷி இப்பதான் நீ பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கிற, இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு வீடு வாங்கணுமா?

இந்த நேரத்தில் வர வருமானத்தை எல்லாம் பிசினஸில் போடணும்‌. அப்பதான் பிசினஸ் பெருகும் என்று திட்டிவிட்டு இப்ப வேற ஒருத்தரா இருந்தா டீலர்ஷிப்பை கேன்சல் பண்ணி இருப்பேன். ஆனா முத்துக்காவும் உங்க அப்பாவுக்காக தான் உன்னை சும்மா விடுறேன் என்று வார்னிங் கொடுத்து விட்டு போகிறார்.

மறுபக்கத்தில் வீட்டில் எல்லோரும் சோகமாக உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போ முத்து வீட்டிற்கு வந்து மனோஜிடம் நீ கடையில் வேலை செய்யாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கன்னு கேட்டதும் விஜயா கடுப்பாகி நீ கடையில் அவ்வளவு பேரும் முன்னாடி வச்சு அவமானப்படுத்தினது போதாதுன்னு இங்க வந்து அசிங்கப்படுத்துறீயா?

உன்னால தான் சந்தோஷி கிட்ட மனோஜ் அசிங்கப்பட்டான் என்று மனோஜ்க்கு சப்போர்ட் பண்ணுகிறார். அதற்கு மனோஜ் சந்தோஷி சார் எப்படி திடீர்னு வருவாரு? இவன்தான் வர வச்சிரப்பான் என்று சொன்னதும் மீனா அவர அங்க வர வச்சு உங்களை அசிங்கப்படுத்தனும்னு கேவலமா யோசிக்க மாட்டாரு.

Siragadikka aasai serial vijay tv

அந்த மாதிரி நினைக்கிற ஆளும் நாங்க கிடையாது என்று சொன்னதும், ரோகிணி என்றைக்கும் வராத ஆளு திடீர்னு வந்து இருக்காரு என்று கேட்க, ஸ்ருதி அவர்தான் அப்பவே சொன்னாரே நான் ஒரு வேலையா வந்தேன்னு அப்புறம் எப்படி முத்து இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்லுறீங்க?

அது மட்டும் அல்லாமல் இப்போது டீலர்ஷிப்பை கேன்சல் பண்ணாம இருப்பதற்கு கூட முத்து தான் காரணம் என்று சொன்னதும் ரோகிணி அமைதியாக இருக்கிறார். பிறகு மீனாவிடம் விஜயா கோபமாக பேச அதற்கு விஜயா மீனா எல்லாத்துக்கும் காரணம் நாங்க தானு சொல்லுவீங்களா?

அடுத்து சென்னைக்கு புயல் வரப்போகுது அதுக்கு நாங்க தான் காரணமா? உங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டிய நேரம் எனக்கு... என்று சொல்லி திட்டி வட்டு அங்கிருந்து போகிறார். மீனா திட்டியதால் கோபமான விஜயா ரோகிணி இடம் சென்று எல்லாத்துக்கும் காரணம் நீதான்... நீ என்கிட்ட சொல்லாம பணத்தை செலவு செய்ததால் தான் இவங்ககிட்ட எல்லாம் நான் அவமானப்படுறேன்.

நீ எப்படியாவது 30 லட்சம் ரெடி பண்ணி கொடுக்க பாரு இனிமே என்கிட்ட ஏதாவது சொல்லாமல் மறைத்தால் அவ்வளவுதான் என்று திட்டிட்டு போகிறார். அடுத்ததாக மீனாவும் முத்துவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்து மீனாவிடம் இப்போ உனக்கு சப்போர்ட்டாக இன்னொரு ஆளு வந்துடுச்சு. இதுவரைக்கும் எங்க அம்மா உன்னை மட்டும் தான் திட்டிட்டு இருப்பாங்க.

இப்போ பார்லர் அம்மாவையும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. உன்கூட ஸ்ருதியையும் சேர்த்துக்கோ அப்போ உங்க பலம் அதிகரிச்சுரும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பேசுவதை ரோகிணி ஒரு வாசல் வழியாக கேட்கிறார். அதுபோல விஜயாவும் இன்னொரு வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+