சிறகடிக்க ஆசை: முத்து செல்போனை எடுத்தது ரோகிணி தான்! கண்டுபிடித்த மீனா.. கொந்தளித்த விஜயா
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜனவரி ஒன்பதாம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மீது முத்து மற்றும் மீனாவிற்கு சந்தேகம் வலுப்படுகிறது. தன்னுடைய செல்போனை திருடியது ரோகிணியாக தான் இருக்கும் என்று முத்து சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் கதிர் பற்றிய ரகசியத்தையும் முத்துவும் மீனாவும் கண்டுபிடிக்கிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் ரோகிணியிடம் சிட்டி கிட்ட கடன் வாங்கின விஷயத்தை பற்றி கேட்டதும் ரோகிணி கோபமாகி உனக்கு யார் சொன்னா என்று கேட்கிறார். அப்போது முத்து தான் சொன்னான் என்று சொன்னதும் அதற்கு ரோகிணி சிட்டி ரௌடின்னு நீ பார்த்தியா? இந்த வீட்ல எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற உன் தம்பி தான் ரவுடி.

ஆமா நான் கடன் வாங்குனேன். நீ வேலைக்கு போறதுக்கு முன்னாடி நம்மளோட பர்சனல் செலவு வந்தது, வீட்டுக்கு கொடுக்க வேண்டியது இருந்து அதற்காகத்தான் நான் கடன் வாங்கினேன். நான் வாங்கிய கடன் எல்லாம் உன்கிட்ட எழுதி கொடுத்துட்டா நீ கொடுத்துடுவியா? என்று ரோகிணி மடக்கியதும் மனோஜ் அமைதியாகி விடுகிறார்.
அடுத்ததாக முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து மீனாவிடம் நீ அந்த பார்லர் அம்மா கிட்ட கடன் வாங்குன விஷயத்தை பற்றி கேட்டியா? என்று கேட்க, அதற்கு மீனா நான் கடன் வாங்கின விஷயத்தை கேட்கும் போது விட அந்த வீடியோ வெளியிட்டது சிட்டி தானே என்று சொல்லும் போது அவங்க முகம் மாறி வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு.

அவங்களும் ஏதோ சொல்லி சமாளிச்சிட்டு போனாங்க. இந்த சிட்டி விஷயத்துல ஏதோ ஒரு மர்மம் இருக்கு என்று சொல்ல, அதற்கு முத்து சிட்டிக்கு நேரடியா என் போன் போய் இருக்காது. இடையில் இந்த பார்லர் அம்மா தான் ஏதோ செஞ்சிருக்கோம்னு எனக்கு தோணுது அது சீக்கிரமா கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார்.
அடுத்த நாள் காலையில் மீனாவும் முத்துவும் பூ கொடுக்குற வேலை இருக்கு என்று கிளம்பி அந்த நடிகர் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் பூவை கொடுத்ததும் எவ்வளவு காசு என்று அந்த நடிகர் கேட்கிறார். அதற்கு நான் வாரத்துக்கு ஒரு வாட்டி இல்ல, மாசத்துக்கு ஒரு தடவை வாங்கிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது இது யாரு என்று அந்த நபர் முத்துவை கேட்க இது என்னுடைய ஹஸ்பண்ட் என்று மீனா அறிமுகம் செய்கிறார்.

அப்போது முத்து நான் உங்களுடைய பெரிய ஃபேன் சார் என்று சொன்னதும், அவர் உட்காருங்கள் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது முத்து நான் உங்க நீங்க நடிக்கிற படம், சீரியல் எல்லாமே பார்த்திடுவேன். அன்னைக்கு ஒரு நாள் உங்களை ஈசிஆர் பக்கத்தில் பார்த்தேன் என்று முத்து சொல்ல, அதற்கு அவர் பீச் ஹவுஸ் சொல்றீங்களா என்று கேட்கிறார்.
அதற்கு முத்து ஆமா சார் என்று சொன்னதும் அங்க கதிர் என்கிற ஒரு ஆளு படம் எடுக்க போறதா சொன்னாரு. சரி வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று பார்த்தால் அவன் சரியான பிராடா இருப்பார் போல. அந்த வீட்டை வேற விக்கணும் யாராவது ஆள் தெரிஞ்சா சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தாரு. பாவம் யார் வாங்கி ஏமாந்தாங்களோ என்று சொல்ல, அதற்கு முத்து அது வேறு யாரும் இல்லை.. அது நாங்க தான்.
எங்க அண்ணன் காசு கம்மியா வீடு கிடைக்கிறது என்றதும் பணத்தை கொடுத்து ஏமாந்துட்டான். அவனை பத்தி ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க என்று சொல்ல, அதற்கு அந்த நடிகர் சரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் டெக்கரேஷன் செய்யும் சிந்தாமணி என்ற பெண் வருகிறார்.
அவரிடம் நீங்க மண்டபத்தில் இருக்கிற டெக்கரேஷன் ஃபுல்லா பார்த்துக்கோங்க. இவங்க வெளியேவும், கார் டெக்கரேஷன் மட்டும் கொடுக்கலான்னு இருக்கேன் என்று சொன்னதும் சிந்தாமணி டென்ஷன் ஆகிறார். அதெல்லாம் எப்படி சார் கொடுக்க முடியும் நான் பண்ணா எல்லாமே நான்தான் பண்ணுவேன் என்று சொல்ல, உங்களுக்கு விருப்பம் இருந்தா பண்ணுங்க இல்லன்னா விடுங்க என்று அந்த நடிகர் சொல்லிவிடுகிறார்.

அவர் போனதும் மீனா ஆர்டர் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார் என்று சந்தோஷமாக அங்கிருந்து வெளியே வருகிறார். அப்போது சிந்தாமணி மீனாவை நிற்க வைத்து முகத்தில் இவ்வளவு சந்தோஷமா..? எனக்கு தொழிலில் இதுவரைக்கும் எந்த போட்டியும் இல்லை என்று நினைத்தால் இப்போ நீங்க வந்து இருக்கீங்க என்று சொல்ல, நாங்க ஒன்றும் உங்க ஆர்டரை கெடுக்கல.
உங்களுக்கு வரது நீங்க செய்றீங்க, எங்களுக்கு வரத நாங்க செய்றோம் என்று சொல்ல, நீங்க எப்படி முன்னேறீங்கன்னு பார்ப்போம் என்று சிந்தாமணி சவால் விட அதற்கு நாங்கள் நல்ல ஆலமரம் மாதிரி வெயிட்டா முன்னேறுவோம் என்று முத்துவும் மீனாவும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்கள்.
அடுத்ததாக வீட்டில் விஜயா பசிக்கிறது இந்த மீனா சமைக்காம எங்க போனான்னு தெரியல என்று திட்டிக் கொண்டிருக்கும் போது மனோஜும், ரோகிணியும் வருகின்றனர். அப்போது அண்ணாமலை இப்ப எதுக்கு கத்திக்கிட்டு இருக்கா என்று கேட்க, எனக்கு ரொம்ப பசிக்குது மீனா சமைச்சு வைக்காம போயிட்டா என்று சொல்ல அதற்கு ரோகிணி நான் வேணா சமைக்கவா என்று கேட்க வேண்டாம் என்று விஜயா அலறுகிறார்.
அதற்கு அண்ணாமலை ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறா என்று கேட்க, நீங்க ரோகிணி சாப்பாட்டை சாப்பிட்டதில்லை அதனால் தான் இப்படி சொல்லுறீங்க என்று சொல்கிறார். அடுத்ததாக முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களிடம் விஜயா நீ இவ்ளோ நேரம் எங்க போயிட்ட, எனக்கு பசிக்குது என்று கத்த, அதற்கு மீனா நான் எல்லா சாப்பாடு செஞ்சு வச்சுட்டு தான் போயிருக்கிறேன்.
நீங்க எடுத்து போட்டு சாப்பிட வேண்டியதுதானே என்று கேட்கிறார். அதோடு கதிர் பற்றிய விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக முத்துவும் மீனாவும் செய்யும் ஒரு ரிஸ்க் வேலைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications