சிறகடிக்க ஆசை: மயக்கம் போட்ட மீனா.. டாக்டர் சொன்ன விஷயம்! மனம் மாறிய முத்து, ரோகிணி செய்த குழப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026, ஜனவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் மீனாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட, அவரை ஸ்ருதி ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி முத்து மற்றும் மீனாவின் வாழ்க்கையை சீரழிக்க புது பிளான் போடுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் தூக்கத்திலேயே எல்லோரும் தன்னை அசிங்கப்படுத்துவது போல கனவு காண்கிறார். அதனால் எல்லாரும் என்னை அசிங்கப்படுத்தாதீங்க, கிண்டல் செய்யாதீங்க என்று கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா வந்து என்னாச்சுடா? எதற்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

அதற்கு மனோஜ் எல்லாரும் என்னை அசிங்கப்படுத்துறாங்கம்மா நான் என்ன தப்புமா பண்ணினேன் என்று அழுது கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா அவரை சமாதானம் செய்கிறார். அவள் பண்ணுன தப்புக்கு நீ என்னடா பண்ணுவ? நீ ஏன்டா அழுகுற? உனக்காக நான் இருக்கிறேன், கவலைப்படாத என்று ஆறுதல் சொல்கிறார்.
மறுபக்கத்தில் முத்து தன் மீது கோபத்தை இருப்பதால் அவர் பேசிய விஷயங்களை நினைத்துக் கொண்டு மீனா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது கார் ஒன்றில் தவறி விழப் போகிறார். அந்த கார் டிரைவர் உடனே பிரேக் போட்டு நிறுத்தி விட அப்போது அந்த பக்கமாக வந்து ஸ்ருதி மற்றும் ரவி ஓடி வந்து மீனாவை பிடித்துக் கொள்கின்றனர்.
காரில் இருந்தது செல்வம் என்பதால் செல்வம் என்னாச்சுப்பா ஏன் இப்படி ரோட்டில் கவனம் இல்லாமல் நடந்து போற என்று விசாரிக்கிறார். அப்போது மீனா மயங்கி விழுந்து விடுகிறார். பிறகு ரவியும் ஸ்ருதியும் ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போகின்றனர். அங்கு இவர் சரியாக சாப்பிடவில்லை என்று டாக்டர் சொல்கிறார். பிறகு மீனாவை அவருடைய அம்மா வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகின்றனர்.
இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் நீங்க சாப்பிடாதது தான் அதனால சாப்பிடுங்க என்று சொல்ல அதற்கு மீனா மறுக்கிறார். அப்போது முத்து வந்து திட்டுகிறார். ஆனாலும் மீனா சாப்பிட முடியாது நான் தப்பு பண்ணிட்டேன் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கொள்கிறேன் என்று அழுது கொண்டிருக்கிறார். உடனே ஸ்ருதி அண்ணாமலைக்கு போன் போட்டு அவரை வரவழைக்கிறார். அப்போது சீதாவும் வந்து தன்னுடைய அக்காவை சாப்பிட சொல்லி கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் சிந்தாமணி வீட்டில் இருக்கும் ரோகிணியிடம் சிந்தாமணி இனி நீ இந்த வீட்டில் இருக்க வேண்டாம் எனக்கு இன்னொரு வீடு இருக்கு அங்க போய் இருந்துக்கோ, இந்த வீட்டில் இருந்தால் மாஸ்டருக்கு விஷயம் தெரிஞ்சா அவங்க என்னை திட்டுவாங்க அதனால நீ வேற வீட்டில் இருக்கிறது தான் நல்லது என்று சொன்னதும் சரி என்று சொல்கிறார்.
பிறகு ரோகிணி, எனக்கு இனி எதிரி அந்த முத்துவும் மீனாவும் தான் அவங்களை பழி வாங்குவேன். அதோட என் புருஷன் கூட நான் எப்படியாவது சேர்ந்து வாழணும், அதற்கு மாமியார் ஒத்துக்கலைன்னா அவங்க கிட்ட இருந்து என் புருஷனை பிரிச்சு கூட்டிட்டு வருவேன் என்று சொல்ல, அதற்கு சிந்தாமணி நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன் என்று சொல்கிறார்.
பிறகு ரோகிணி போனதும் சிந்தாமணியின் ஆள் வந்து எதுக்காக இந்த பொண்ணுக்கு இவ்வளவு சலுகை கொடுக்குறீங்க என்று கேட்க, இவளை வச்சு தான் அந்த குடும்பத்தை உடைக்கணும். அந்த வீட்டை எழுதி வாங்கணும், அந்த வீடு பழமையானது... ரெண்டு கிரவுண்ட் இருக்கும் அதனால அதை நாம கைப்பற்றனும் அதற்காக அந்த மனோஜ்க்கு நிறைய பணம் கொடுத்து அவனுக்கு வட்டிக்கு மேல வட்டி போட்டு அந்த வீட்டை என் பேருக்கு எழுதி வாங்கணும் என்று சிந்தாமணி சொல்கிறார்.
siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரை நள்ளிரவில் அரெஸ்ட் செய்த போலீஸ்.. பின்னணி காரணம் இதுதானா?
அதோடு மீனாவின் வாழ்க்கையையும் நான் கெடுக்கனும் என்று சிந்தாமணி வில்லியாக தன்னுடைய பிளானை சொல்கிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை மீனாவின் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்ததும் மீனா அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். பிறகு அண்ணாமலை எனக்கு மீனா மீது கோபம் இல்ல, கொஞ்சம் வருத்தம் தான் இருந்தது அதற்காக சாப்பிடாமல் இருக்க கூடாது என்று அட்வைஸ் சொல்லிவிட்டு போகிறார். அவர் போனதும் முத்து மீனாவை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. பின்னுக்கு போன எதிர்நீச்சல், மாஸ் காட்டும் அழகே அழகு சீரியல் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications