சிறகடிக்க ஆசை: ரோகிணி பற்றி தெரிந்த உண்மை.. அடி வெளுத்து வாங்கிய விஜயா! வீட்டிற்கு வந்த அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 2ஆம் தேதிக்கான எபிசோடில் வீட்டை விட்டு வெளியே போன அண்ணாமலை மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அதே நேரத்தில் ரோகிணி செய்த செயலால் கோபமான விஜயா ரோகிணியை அடி வெளுத்து வாங்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை தன்னுடைய சொத்துக்களை பிரிப்பதற்கு முத்து சம்மதிக்கவில்லை என்பதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார். ஆனால் அண்ணாமலை மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் சாப்பிடவே மாட்டேன், குடித்துக்கொண்டு இருப்பேன் என்று அண்ணாமலை நண்பரிடம் முத்து சொல்லி இருக்கிறார். அதேபோல விஜயாவிற்கு மயக்க மாத்திரை கொடுக்க வேண்டும் என்று ரோகிணி பிளான் போட்டு வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை வீட்டிற்கு வராததால் விஜயாவிற்கு டென்ஷனாக இருக்க, தலைவலி வருகிறது. உடனே இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரோகிணி டீ போட்டுட்டு வரேன் என்று போகிறார். பிறகு அந்த டீயில் தன்னுடைய தோழி தந்த மாத்திரையை போட்டு கலக்குகிறார். அதைடியே விஜயாவும் குடித்து விடுகிறார்.
அதற்குப் பிறகு ரோகிணிக்கு அவருடைய தோழி மகேஸ்வரி போன் செய்து நான் கொடுத்தது தூக்க மாத்திரை இல்லை என்று வைட்டமின் டேப்லெட் என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்டால் நன்கு சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்றும் சொல்கிறார். அப்போது ரோகிணியை வெளியே வா என்று விஜயா கூப்பிடுகிறார். டீ நல்லாவே இல்லை என்று திட்டிவிட்டு மீனாவிடம் பூஜை அறையை சுத்தம் செய்து கோலம் போடுமாறு சொல்கிறார்.
பிறகு நான் என் புருஷன் வரும் வரைக்கும் இந்த பூஜை அறையை விட்டு வெளியே வரமாட்டேன். அங்கே பூஜை செய்து கொண்டுதான் இருப்பேன் என்று சொல்லி பூஜையில் உட்காருகிறார். பக்கத்தில் ரோகிணியையும் அமர வைக்கிறார். மந்திரம் சொல்லி பூஜை செய்கிறார் அப்போது ஒவ்வொரு முறையும் மந்திரம் சொல்லும் போது ரோகிணியின் தலையில் கொட்டுகிறார்.
அது போதாது என்று ரோகிணி கையில் சூடகம் ஏற்றி போட்டோவுக்கு காட்டுகிறார். இதனால் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ரோகிணி அழுது கொண்டிருக்கிறார். அப்போது அப்பா நாளைக்கு காலையில் வந்து விடுவார் என்று முத்து சொன்னதும் விஜயா பூஜையை நிறுத்துகிறார்.

மறுநாள் காலையில் அண்ணாமலை வருகிறாரா என்று வாசலையே எட்டி எட்டி பார்க்க விஜயா முத்துவிடம் என்னாச்சுடா இன்னும் வரல என்று கேட்கிறார். அதற்கு முத்து நான் பொய் சொன்னேன் என்று சொல்ல வரும்போது, அண்ணாமலை வீட்டிற்குள் வருகிறாய். அண்ணாமலையை பார்த்ததும் அவரை முத்துவும், விஜயாவும் மாறி மாறி கட்டி பிடித்துக் கொள்கின்றனர். இதற்கு இடையே விஜயா செய்த செயலை சொல்லி ரோகிணி மனோஜிடம் அழுது கொண்டிருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று நாளைக்கான எபிசோடில் பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications