சிறகடிக்க ஆசை: முத்துவை, ரோகிணி கொலை பண்ண பார்த்தா.. மொத்த உண்மைகளையும் உடைத்த வித்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஜனவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணி இதுவரைக்கும் செய்த எல்லா ஏமாற்றி வேலைகளையும் வித்யா குடும்பத்தினரிடம் வந்து சொல்லிவிட்டார். இதனால் அண்ணாமலை ரோகினி மற்றும் மனோஜ்க்கு டைவர்ஸ் செய்யணும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், பைனான்சியருக்கு ரோகிணி வீட்டை விட்டு துரத்தப்பட்ட விஷயம் தெரிந்ததும், நேராக விஜயாவின் வீட்டுக்கே வந்து மனோஜை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். இதைக் கேட்டு கொதித்த விஜயா, ஒரு நிமிஷமும் யோசிக்காமல் அவர் கொண்டு வந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார்.

"சொன்ன தேதிக்கு காசு வரணும்... இல்லனா என் வேலை என்னன்னு காட்டுவேன்" என மிரட்டிவிட்டு அந்த பைனான்சியர் கிளம்ப, போகும் வழியிலேயே இந்த விஷயத்தை சிந்தாமணியிடம் போன் போட்டு சொல்லி விடுகிறார்.
இதைக் கேட்ட சிந்தாமணி உடனே உஷாராகி, விஜயாவின் வீட்டை கைப்பற்ற திட்டம் போட ஆரம்பிக்கிறார். அப்போது ரோகிணியிடம், மனோஜ் போட்டோவை வீட்டில் எரிச்சிட்டாங்க, இனிமே நீ அந்த வீட்டுக்கே போக முடியாது போல எனச் சொல்லி, மனோஜ் வாங்கிய கடனுக்கு விஜயா பொறுப்பேற்றிருக்கிற விஷயத்தையும் போட்டுடைக்கிறார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.
அதே நேரத்தில் இன்னொரு பக்கம், சத்யாவுக்கு ஒரு பழைய நண்பர் மூலம் பெரிய உண்மை தெரிய வருகிறது. முத்துவின் கார் பிரேக் வயரை அறுத்தது சிட்டி தான், அதுக்கு உதவியது ரோகிணி தான் என்ற அதிர்ச்சி தகவலை சத்யா உடனே முத்து, மீனா இருவருக்கும் சொல்லிவிடுகிறார். இதனால் வீட்டுக்குள்ளேயே பதற்றம் உச்சத்துக்கு செல்கிறது.

இதற்கிடையில் விஜயா, கடன் உதவி கேட்டு சிந்தாமணியை சந்திக்கிறார். "அடமானம் வைக்கணும்" என்ற சிந்தாமணியின் வார்த்தைக்கு, "என் பெயரில் வீடு தான் இருக்கு" என விஜயா சொல்ல, அதுவே போதும் என்கிறார் சிந்தாமணி. அதே சமயம், மனோஜ் - ரோகிணி டைவர்ஸுக்காக வக்கீல் அட்ரஸையும் பார்வதி விஜயாவிடம் கொடுத்து அனுப்புகிறார்.
உச்சகட்டமாக, முத்து வீட்டில் எல்லாரும் கூடியிருக்கும் போது, வித்யா தான் வெடிகுண்டை போடுகிறார். "முத்துவின் விபத்து மட்டும் இல்ல... இதுவரை மனோஜின் கடையிலிருந்து பணம் திருடியது, பார்வதி வீட்டிலிருந்து பணத்தை எடுத்தது, அந்த பழியை மீனா மேல போட்டது... எல்லாமே ரோகிணிதான்!" என்று ஒரே மூச்சில் ரோகிணியின் அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் பட்டியலிட்டு உடைத்துவிடுகிறார்.

இதைக் கேட்டு விஜயாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. "அவளை போலீஸ்ல பிடிச்சு கொடுக்கணும்" என அவர் கொதிக்க, அண்ணாமலை, "முதல்ல மனோஜ் - ரோகிணி டைவர்ஸ் விஷயத்தை முடிக்கலாம்" என்று சமாதானம் பேசுகிறார். அதன்படி விஜயா, மனோஜை அழைத்துக் கொண்டு வக்கீலை சந்திக்க கிளம்புகிறார்.
அடுத்ததாக வக்கீல் ஆபீஸில் மனோஜ் விஜயாவும் போகின்றனர் அவர்கள் இருவரை பார்த்ததும் வக்கீல் பொதுவா பசங்க தான் கல்யாணம் பண்ணிட்டு ஏமாத்தி மீண்டும் கல்யாணம் பண்ணுவாங்க ஆனா நீங்க ஒரு பொண்ணு கிட்ட ஏமாந்து இருக்கீங்க என்று கலாய்ப்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார் விஜயாவும் மனோஜும் வேறு வழியில்லாமல் அந்த வக்கீலிடம் அமர்ந்திருக்கின்றனர் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications