சிறகடிக்க ஆசையில் சூப்பர்.. முத்துக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஜீவா.. உண்மை உடைபடுவது இப்படி தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து குடிக்காமலேயே சிட்டி செய்த சூழ்ச்சியால் எல்லோரும் முத்துவை குடிகாரன் என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் முத்துவின் காரை போலீஸ் ஸ்டேஷனில் பிடுங்கி வைத்து போயிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே வெளியான வீடியோவில் முத்து காரை கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன நிலையில் அங்கு போலீஸ் காரர்கள் உன்னுடைய லைசென்ஸை கேன்சல் செய்ய சொல்லி எல்லோரும் இணையத்தில் கமெண்ட் போட்டுட்டே இருக்காங்க. நீ என்னனா உன்னுடைய காரை கேட்டு வந்திருக்கியே என்று அவரை வெளியே அனுப்பி வைக்கின்றனர். இதனால் முத்துக்கு இனி யாரு ஹெல்ப் பண்ண போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கிறது.

ஏற்கனவே வீட்டில் முத்துவை யாருமே புரிந்து கொள்ளவில்லை. இதுவரைக்கும் முத்து பக்கத்தில் நியாயம் இருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த அண்ணாமலையும் முத்துவின் மீது கோபத்தை காட்டி இருக்கிறார். இதனால் என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான எபிசோடில் கூட மீனாவிடம் சிட்டி உன் புருஷன் 12:30 மணிக்கு சரக்கு அடிச்சா இப்படித்தான் நடக்கும் என்று தெரியாத என்று கேட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மீனாவிடம் பேசிய செல்வம் 12:30 மணிக்கு முத்து குடிக்கவே மாட்டான் என்று பேசியிருக்கிறார். ஆனால் இன்று முத்து குடியை மறக்க வைப்பதற்காக வாங்கி வைத்த பொடி கலக்கிய ஜூசை விஜயா குடித்து விட்டதால் மீனா அதற்கு மாற்று மருந்து என்ன கொடுக்கலாம் என்று கேட்பதற்காக அவசரத்தில் போய்க் கொண்டிருந்ததால் செல்வம் பேசியதை சரியாக கேட்கவில்லை.
இதனால் மீனாவும் முத்துவுக்காக ஹெல்ப் பண்ண மாட்டாரா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் செல்வமாக நடிக்கும் பழனியப்பன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்ளூ கொடுத்திருந்தார். அதாவது போன வாரத்தில் தொடங்கப்பட்ட பிரச்சனை இந்த வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் இந்த வாரத்தில் தொடங்கும் பிரச்சனை அடுத்த வாரத்தில் தான் முடிவுக்கு வரும் என்று கூறியிருந்தார்.
இதனால் போன வாரத்திலேயே முத்து மீது குடிகாரன் என்ற பழி விழுந்திருக்கும் நிலையில் இந்த வாரம் அது முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இப்போது கோமதி பிரியா வெளியிட்ட வீடியோவில் ஜீவாவும் கோமதி பிரியாவும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் முத்துவுக்காக சப்போர்ட் செய்து ஜீவா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறாரா? என்று கேள்விகள் எழுகிறது.
இதனால் முத்துவுக்கு ஜீவா தான் உதவி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முத்துவுக்கு ஜீவா ஹெல்ப் பண்ணியதும் முத்து தனக்கு கடவுளே இனி ஜீவா தான் என்று சொல்லி வீட்டிற்கு கூட்டிட்டு போகும் போது தான் மனோஜ் பற்றிய ரகசியங்கள் உடைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications