Siragadikka aasai serial: கவரிங் நகையால் அவமானப்படும் முத்து.. மீனா கேட்ட கேள்வி.. மாட்டிகொண்ட விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் தங்க நகைகளுக்கு பதிலாக மனோஜ் வாங்கி கொடுத்த நகைகளை தெரியாமல் நகை கடைக்கு கொண்டு போகும் முத்துவும் மீனாவும் அங்கு அசிங்கப்படுகின்றனர்.
ஏற்கனவே நேற்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோடு நடந்ததில் மனோஜ் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு 4 லட்சம் ஏமாந்ததால் அதை சொல்லி விஜயாவிடம் கதறி அழ விஜயா மீனா கழட்டி கொடுத்த நகைகளை மனோஜிடம் கொடுத்து இந்த நகைகளை அடகு வைத்து பணத்துக்கு ரெடி பண்ணு என்று கொடுக்கிறார். ஆனால் மனோஜ் அந்த நகைகளை விற்று விடுகிறார். அதே நேரத்தில் முத்து மற்றும் மீனா இருவரும் முத்துவின் பாட்டிக்கு ஒரு நகை வாங்க வேண்டும் என்று சொல்லி மீனா கழட்டி கொடுத்த நகைகளை அண்ணாமலையிடம் திரும்ப கேட்கின்றனர்.

இப்படியான நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா மனோஜிடம் நான் வேணும்னா என்னுடைய நகைகளை கழட்டி தரேன் அதை வச்சு அந்த நகையை அப்படியே வாங்கிட்டு வந்துரு என்று சொல்ல மனோஜ் நகைக்கடைக்காரருக்கு போன் போட்டு தான் கொடுத்த நகை வேண்டும் என்று கேட்க அவர் அந்த நகையை உருக்கி கட்டியாக மாற்றியாச்சு. அதை வேணும்னா வாங்கிக்கோங்க என்று சொல்ல, அதை மனோஜ் விஜயாவிடம் சொன்னதும் விஜயா மனோஜை போட்டு அடிக்கிறார்.
இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் என்னுடைய நிலைமை என்ன ஆகும்? என்னை யாரும் மதிக்க மாட்டாங்க என்று விஜயா அழுது கொண்டிருக்கிறார். அதோடு அந்த நகையை ஒழுங்கா கூட நான் பார்க்கலயே என்று புலம்பி கொண்டிருக்கும்போது மனோஜ் நான் அந்த நகைகளை போட்டோ எடுத்து வச்சிருக்கேன் என்று சொல்லி அது போலவே கவரிங் நகை வாங்கி வீட்டில் வைத்து விடலாம் என்று பிளான் போடுகின்றனர்.
மறுபக்கத்தில் முத்து வீட்டில் எல்லாரோடும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தன்னுடைய சாப்பாட்டில் கிடந்த முடி யாருடையது என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்க, ஸ்ருதி அது என்னுடைய முடி கிடையாது என்று சொல்கிறார். மீனா என்னுடைய முடிதான் என்று சொல்லி சாப்பாட்டில் முடி கிடந்தால் உறவு நீடிக்கும் என்று சொல்ல, அதற்கு முத்து இல்ல வீட்டில் பிரச்சனை வரும்னு சொல்லுவாங்களே என்று சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு அந்த முடியை வைத்து முத்து எப்படி பிரச்சனை வரப்போகுதுன்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது விஜயாவும் மனோஜும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அண்ணாமலை மீனா கொடுத்த நகைகளை கேட்க அதற்கு மனோஜ் மற்றும் ரோகினி மீனா செஞ்சு கொடுத்த சபதத்தை மறந்துட்டாங்களா? நான் என் புருஷன் வாங்கி கொடுத்த நகையை மட்டும் தான் போடுவேன் என்று மீனா சொன்னாங்க, இப்போ எதுக்காக நகை கேட்கிறாங்க என்று கேட்க,
அதற்கு அண்ணாமலை அது நான் அவளுக்கு வாங்கி கொடுத்த நகை கொடு என்று சொன்னால் கொடு ஏன் அந்த நகை உன்னிடம் இல்லையா? என்று கேட்க விஜயா திருதிருவென முழிக்கிறார். அப்போது முத்து அந்த நகை இருக்கா இல்ல அந்த நகை திருட்டு போயிட்டா? ஏற்கனவே நம்ம வீட்டுல நிறைய திருடு போகும். 27 லட்சத்தை தூக்கிட்டு போனவன் இந்த நகைகளையும் தூக்கிட்டானா என்று கேட்க மனோஜ் அம்மா அந்த நகையை எடுத்து கொடுங்க என்று சொன்னதும் விஜயா நகைகளை எடுத்துக் கொண்டு கொடுக்கிறார்.

அப்போது இது கவரிங் நகை என்பது தெரிய வந்துடக்கூடாது என்று சாமி கும்பிட்டு விட்டு நகைகளை கொடுக்கிறார். நகைகளை வாங்கிய முத்துவும் மீனாவும் நகைக்கடைக்கு போய் அங்கு ரெட்ட வட சங்கிலி ஒன்று வாங்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறகு அந்த நகையை வாங்குவதற்கு எங்களிடம் பழைய நகை இருக்கிறது என்று சொல்லி நகையை கொடுக்க அதை சோதித்து பார்த்தவருக்கு அது கவரிங் நகை என்று தெரிய வருகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications