சிறகடிக்க ஆசை: பாட்டி கொடுத்த டாஸ்க்.. ஜீவா பண விஷயத்தை உளறிய மனோஜ்.. ரோகிணிக்கு அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் அண்ணாமலை மற்றும் விஜயாவை பேச வைப்பதற்காக முத்து பாட்டியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருக்கிறார். அதே நேரத்தில் பணம் பற்றி மனோஜ் உளறி இருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாட்டி மனோஜ் பணத்தை கொடுக்க சொல்ல மனோஜ் அதிர்ச்சியில் நிற்கும்போது விஜயா வேறு வழி இன்றி பணத்தை கொடுத்துடுடா என்று சொன்னதும் மனோஜ் சரி என்று சொல்கிறார். பாட்டி அதோடு நிறுத்தாமல் மனோஜ் கொடுப்பான்னு எனக்கு நம்பிக்கை இல்லை அவன் கிட்ட இருந்து மாசா மாசம் நீதான் பணத்தை வாங்கி கொடுக்க வேண்டும் அது உன்னுடைய பொறுப்பு என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் பிறகு சரி என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial

அடுத்ததாக ரூமுக்கு வந்த மனோஜ் ரோகிணியிடம் எதுக்கு பணத்தை கொடுக்கிறேனு ஒத்துக்கிட்ட என்று கேட்க, வேற வழி இல்லை என்று ரோகிணி கோபப்படுகிறார். பிறகு விஜயா ரூமுக்குள் வந்ததும் மனோஜ் எதுக்குமா பணம் கொடுக்க சொன்னீங்க என்று கேட்க, அதற்கு விஜயா நீதான பணத்தை எடுத்தா அப்போ நீ தான் கொடுக்கணும் என்று கோபப்படுகிறார். அதோடு ரோகிணியிடம் நீ தான் உங்க அப்பாவிடம் எப்படியாவது பேசி பணத்துக்கு ரெடி பண்ணனும்.

இந்த பணத்தை கொடுத்தாதான் நான் இந்த வீட்டில் நிம்மதியா இருக்க முடியும். அந்த பூ கட்டுறவ முன்னாடி நான் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை ஆகிப்போச்சு என்று கோபப்பட ரோகிணி அப்பாவிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு நீங்க இப்ப மன்னிப்பு கேட்டதால மாமா உங்களிடம் பேசுகிறாரே என்று சொல்ல, ஆமாம் அதுவும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது என்று மீண்டும் விஜயா ரோகிணியிடம் பணம் விஷயம் பற்றி பேச மனோஜ் அங்கிள் ஜெயில்ல இருக்காரே அவர் எப்படி பணம் கொடுக்க முடியும் என்று சொல்ல கடை திறப்பதற்கு பணத்தை அனுப்ப தெரிஞ்சவருக்கு இப்போ பணத்தை அனுப்ப தெரியாதா என்று விஜயா பதிலடி கொடுக்கிறார்.

Siragadikka aasai serial

அதோடு உன்னை பெத்ததுக்கு நான்தான் கஷ்டப்படுறேன் ஆனா உன்னை கட்டி கிட்டத்துக்காக ரோகிணியும் கஷ்டப்படட்டுமா? என்று திட்ட எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் என்று மனோஜ் சொன்னதும் விஜயாவும் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றனர். அதற்கு மனோஜ் ஆமா நீங்க என்னை பெத்ததோட நிறுத்தி இருக்கலாம். அந்த முத்துவை எதற்காக பெத்தீங்க என்று கேட்க, உன்னை பெத்தது தான் தப்பு என்று விஜயா திட்டி விட்டு வெளியே வருகிறார்.

பிறகு மனோஜ் ஜீவா கொடுத்த பணத்தில் ஒன்பது லட்சம் பணம் இருக்கு அதை கொடுத்துவிடுவோமா? என்று கேட்க, ரோகிணி அந்தப் பணத்தை எடுக்க கூடாது. அது பிசினஸ்க்கு வேண்டும் என்று திட்டுகிறார். அடுத்ததாக மீனா சமைக்க போகும் போது விஜயா சீக்கிரம் சமை என்று சொல்ல பாட்டி வீட்டுல இருக்கிற எல்லா பெண்களும் அவங்க அவங்க புருஷனோடு சேர்ந்து சமைச்சு கொடுக்கணும் என்று டாஸ்க் கொடுக்க மனோஜ் எனக்கு தோசை சுட வராது என்று சொல்ல, முத்து அவனுக்கு நகை பணம் தான் சுட வரும் என்று கலாய்க்கிறார்.

பிறகு முதலில் அண்ணாமலை மற்றும் விஜயா தோசை சுட எல்லோரும் வேடிக்கை பார்க்க அண்ணாமலை எனக்கு இரண்டு போதும் உனக்கு என்று கேட்க விஜயா எனக்கு நாலு வேணும் என்று சொல்கிறார். அடுத்து மனோஜ் ரோகிணி தோசை சுடுகின்றனர். மனோஜ் தோசை சுட தெரியாம தோசையை கொத்து பரோட்டா போடுகிறார். இவர்களை தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி தோசை சுடுகின்றனர் பிறகு ரவி கிச்சன் பக்கம் நீ வரவே வராது என்று ஸ்ருதியை துரத்தி விடுகிறார்.

Siragadikka aasai serial

அதற்கு பிறகு முத்து மீனா ஜோடியாக தோசை போட்டு முடிக்க பாட்டி எல்லாரையும் மாறி மாறி ஊட்டி விடணும் என்று அடுத்த டாஸ்கை செல்ல எல்லோரும் அதுபோல செய்ய விஜயா அண்ணாமலையை பார்க்க, அவர் அவங்க தான் இளஞ்சோடிகள் நாம கிடையாது சாப்பிடு என்று பல்பு கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த ஸ்ருதி பாட்டியிடம் பாட்டி நீங்க இவ்ளோ ரொமான்டிக்கா இருக்கீங்க லவ் மேரேஜா? என்று கேட்க அடி போடி அம்மா என்று பாட்டி வெட்கப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+