சிறகடிக்க ஆசை: பாட்டிக்காக முத்து கொடுத்த சர்ப்ரைஸ்.. வாயடைத்து போன மனோஜ்.. கடைசியில் தான் ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூலை எட்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பார்ட்டியின் பிறந்தநாளுக்காக வீட்டில் எல்லோரும் பிறந்த நாள் பரிசு கொடுத்திருந்த நிலையில் முத்து கொடுத்த பரிசை பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அதில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் கிப்ட் கொடுத்ததை தொடர்ந்து ஒவ்வொருத்தரும் தங்களுடைய கிப்ட் கொடுக்கின்றனர். ரவி என்னுடைய கிப்ட் கேக் தான் என்று தன்னுடைய கேக்கு பெயர் நாச்சியார் கேக் என்று சொல்ல ஸ்ருதி போனை கொடுத்ததும் அதற்கு பிறகு விஜயா பார்வதியை கூட்டிட்டு வந்து டிவியை எடுத்துக் கொடுக்க பார்வதி எந்த மருமகளும் மாமியாருக்கு இவ்வளவு பெரிய கிப்ட் கொடுத்திருக்க மாட்டாங்க என்று விஜய்யாவை பெருமையாக பேசுகிறார்.

அதற்கு பாட்டி விஜயா சொல்லிக் கொடுத்த மாதிரியே பார்வதி பேசிட்டா என்று பல்பு கொடுக்க, நான் ஏன் அத்தை அப்படி எல்லாம் சொல்ல போறேன் என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மனோஜ் எல்லோருக்கும் கிப்ட் கொடுத்துட்டோம் உங்க ஸ்பெஷல் கிப்ட் யாருக்கு என்று கேட்க, அதற்கு பாட்டி முத்து வரட்டும் என்று சொன்னதும் அவன் காலையில் தான் வருவான் என்று மனோஜ் நக்கலாக சொல்லிக் கொண்டிருக்கும்போது வாசலில் முத்து மாஸாக என்ட்ரி கொடுக்கிறார்.
அதோடு தொழிலதிபர் நீ சொல்றதெல்லாம் நடக்காதுடா என்று சொல்லிக்கொண்டு, வீட்டிற்குள் வந்த முத்துவை பிடித்து பாட்டி எங்கடா போன என்று கண்டிக்க மனோஜ் பாட்டிக்கு என்ன கிப்ட் வாங்கிட்டு வந்திருக்க என்று கேட்கிறார். அதற்கு முத்து நான் எதுவும் கிப்ட் வாங்கிட்டு வரல என்று சொன்னதும், மனோஜ் சந்தோஷமாக நான் சொன்ன மாதிரியே நடந்துருக்கு என்று சொல்ல, அதற்கு முத்து நான் கிப்ட் வாங்கிட்டு வரல ஆனா கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி நாச்சியார் பாட்டியின் சிறுவயது தோழிகள் இருவரை கூட்டிட்டு வருகிறார்.

அவர்கள் இருவரை பார்த்ததும் பாட்டி சந்தோஷத்தின் உச்சத்தில் போகிறார். பிறகு இருவரும் குடும்பத்தை பற்றி நாச்சியார் பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். நாச்சியார் பாட்டி தன்னுடைய மருமகள்கள், பேத்திமார்கள், பேரன்கள் என எல்லாவற்றையும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். அவர்களோடு சந்தோஷமாக பாட்டி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து முத்துவும் மீனாவும் ரசிக்கின்றனர்.
நான் 30 வருஷத்திற்கு முன்பு போன மாதிரி இருக்கு என்று பாட்டி சந்தோஷப்பட அதை பார்த்த மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு கேக் வெட்டி எல்லோரும் மாறி மாறி ஊட்டி கொண்டு இருக்கின்றனர். அதை பார்த்து மனோஜ் சோகமாக இருக்க ரோகிணி கண்டிப்பா ஸ்பெஷல் கிப்ட் அவங்களுக்கு கிடைக்காது. ஏன்னா மீனா பாட்டிக்காக எதுவுமே செய்யல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் மீனா முத்துவிடம் நானும் பாட்டிக்காக ஒன்று பண்ணி வைத்திருக்கிறேன் என்று வீடியோ எடுத்த விஷயத்தை சொல்ல, அப்படியா அதை எல்லாருக்கும் போட்டு காட்டுவோம் என்று டிவியில் ஓட விட பாட்டி தன்னுடைய 80 வருட வாழ்க்கை பயண அனுபவத்தை பேசுகிறார். அதை பார்த்து ரோகிணி பல்பு வாங்க அண்ணாமலை கண் கலங்குகிறார். விஜயாவும் மீனாவை முறைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications