சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இன்றைய ஜூன் பத்தாம் தேதிக்கான எபிசோடில், சத்யா - ரேகா காதல் விவகாரம் எதிர்பாராத அளவுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், சிந்தாமணியின் சூழ்ச்சியால் சத்யா போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ரேகாவை காதலிக்கும் விஷயத்தை மறைத்து வைக்காமல், நேரடியாக அவரது அப்பாவிடம் சென்று சத்யா சொல்லி இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரேகாவின் தந்தை, இதுபற்றி யோசிக்க சிறிது அவகாசம் வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் அதன்பின்னர் நடந்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
இந்த விவகாரத்தை சிந்தாமணியிடம் சொன்ன ரேகாவின் தந்தைக்கு, சிந்தாமணி ஒரு அதிரடி திட்டத்தை தீட்டிக் கொடுக்கிறார். முதலில் ரேகாவை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வரவழைத்து வீட்டுக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்றும், பின்னர் சத்யா தங்கள் மகளை கடத்திச் சென்றதாக போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று பிளான் போட்டு கொடுக்கிறார்.
போலீசில் சிக்கிய சத்யா
சிந்தாமணியின் திட்டப்படியே ரேகாவை சென்னைக்கு வரவழைத்த அவரது அப்பா, வெளியே செல்ல முடியாதபடி வீட்டுக்குள் அடைத்து வைக்கிறார். அதோடு சத்யா தன் மகளை கடத்தியதாக போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார்.
கம்ப்ளைன்ட்டை ஏற்றுக்கொண்ட போலீசார் நேரடியாக சத்யாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்கின்றனர். மகனை காப்பாற்ற சந்திரா எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் கேட்க மறுக்கின்றனர். உடனே அவர் மீனாவுக்கு தகவல் தெரிவிக்க, விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல முடிவு செய்கிறார்.
கதறிய சீதா
போலீஸ் ஸ்டேஷனில் சத்யாவை லாக்-அப்பில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் போலீசார் அடிக்கின்றனர். வலியால் துடித்த சத்யா கதறிக் கொண்டிருக்க, அவரை பார்த்த சீதாவும் சந்திராவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் மன்றாடுகின்றனர்.
அப்போது அங்கு இருந்த அருணிடம், "சத்யா எந்த தவறும் செய்யவில்லை, அவரை விடச் சொல்லுங்கள்" என சீதா கெஞ்சுகிறார். ஆனால் அருணோ சிறிதளவும் இரக்கம் காட்டாமல், "இது நம்ம வீடு இல்லை... போலீஸ் ஸ்டேஷன். என் வேலையை செய்ய விடு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
முத்துவின் அதிரடி முடிவு
இதற்கிடையில் முத்துவும் மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். போலீசார் தங்கள் பேச்சைக் கேட்காததால், இந்த விஷயத்தை மிஸ்ராவிடம் தெரிவிக்க முடிவு செய்கிறார் முத்து.
அதே நேரத்தில், ரேகா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் மீனா தனியாக கிளம்புகிறார். நேரடியாக சிந்தாமணியின் கணவர் வீட்டுக்குச் சென்று விசாரிக்க முடிவு செய்கிறார்.
சிந்தாமணியின் ரகசிய திட்டம்
மீனா அங்கு செல்லும் நேரத்தில், சிந்தாமணியும் அந்த வீட்டுக்கு வருகிறார். ரேகா வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்றும், குறிப்பாக முத்துவும் மீனாவும் கண்டுபிடிக்கக் கூடாது என்றும் தனது கணவரிடம் எச்சரிக்கை விடுக்கிறார். இதனால் ரேகா எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது.
கண்டுபிடித்த மீனா
சிந்தாமணியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் மிகவும் சாதுர்யமாக பேச்சு கொடுக்கிறார் மீனா. பைனான்சியரிடம் பணம் வாங்கித் தருமாறு கேட்டுக்கொள்வது போல பேசி தகவல்களை கறக்கிறார். அப்போது அந்த வேலைக்கார பெண், "நான் சொன்னால் அவர் கேட்க மாட்டார். அவருடைய மகள் ரேகா சொன்னால் கேட்பார்" என கூறுகிறார். உடனே ரேகா எங்கே இருக்கிறார் என்று மீனா கேட்க, "இன்று காலையில்தான் வீட்டுக்கு வந்தார். வந்ததிலிருந்து அறையை விட்டு வெளியே வரவே இல்லை" என சொல்லிவிடுகிறார்.
இதன் மூலம் ரேகா சிந்தாமணியின் கணவர் வீட்டில்தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பது மீனாவுக்கு தெரிய வருகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
ரேகாவை மீனா காப்பாற்றுவாரா? பொய் புகாரில் சிக்கியுள்ள சத்யா போலீஸ் பிடியில் இருந்து வெளியே வருவாரா? சிந்தாமணியின் சூழ்ச்சி வெளிச்சத்துக்கு வருமா? என்கிற பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.
அடுத்தடுத்த எபிசோட்களில் சத்யாவை காப்பாற்ற முத்து - மீனா இணைந்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
சிறகடிக்க ஆசை: சத்யாவை வைத்து முத்து குடும்பத்திற்கு செக் வைத்த சிந்தாமணி.. கொடூர பிளான்.. ஆபத்தான ஆட்டம் -
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?













Click it and Unblock the Notifications