சிறகடிக்க ஆசை: டான்ஸ் கிளாஸ் தொடங்கிய விஜயாவிற்கு கிடைத்த அதிர்ச்சி.. குழப்பத்தில் குடும்பத்தினர்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் வீட்டில் எல்லோரும் வேலை செய்கிறார்கள் என விஜயாவும் தனக்கு தெரிந்த டான்ஸ் மூலம் கிளாஸ் ஒன்றை தொடங்குகிறார். அதனால் வீட்டில் பல கலகலப்பான காட்சிகள் நடந்தது அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ரூமை பூட்டி கொண்டு இருப்பதால் மொத்த குடும்பமும் என்னாச்சோ ஏதாச்சோ என்று வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரூமிற்குள் சலங்கை சத்தம் கேட்க அதைக் கேட்டு முத்து பதறிப் போய் இருக்கிறார். உள்ளே என்ன ஆச்சுன்னு தெரியலையே சலங்கை சத்தம் எல்லாம் கேட்கிறது என்று பேசிக் கொண்டிருக்கும்போது விஜயா பரத நாட்டிய உடையில் வெளிய வர மொத்த குடும்பமும் அதை அதிசயமாக பார்க்கின்றனர்.

பிறகு விஜயா தான் டான்ஸ் கிளாஸ் தொடங்க போவதாகவும் 40 பேருக்கு கிளாஸ் எடுத்தால் கூட மாதம் 80 ஆயிரம் சம்பளம் வரும். இந்த வீட்டில் இனி நானும் வேலை பார்க்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க ரோகிணி தான் இதற்கு ஐடியா தந்தது என்றும் ரோகிணியை கட்டிப்பிடித்து பாராட்டுகிறார். விஜயாவின் மாற்றத்தை பார்த்து ஸ்ருதி விஜயாவை கட்டிபிடித்து பாராட்டுகிறார்.
அப்போது முத்து மட்டும் அதிர்ச்சியோடு உறைந்து இருக்கிறார். மீனா என்னாச்சு என்று முத்துவை தட்டிக் கேட்க எனக்கு நடப்பதை பார்த்தால் கனவா? நினைவா? என்று இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உங்க அம்மாவுக்கு சின்ன வயசுலையே பரதநாட்டியம் தெரியுமா? இப்போ கிளாஸ் வைப்பதற்கு பார்வதி ஆன்ட்டி அவங்க வீட்ல இடம் தரன்னு சொல்லி இருக்காங்க இன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த கட்டத்தில் பார்வதி வீட்டில் டான்ஸ் கிளாஸ் திறப்பு விழா நடத்தப்படுகிறது. அப்போது ஒரு முக்கியமான விஐபி வரப்போறாங்க அவங்க தான் இங்கே விளக்கு ஏற்றி வைக்கப் போறாங்க என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கும்போது யார் அவங்க என்று எல்லோரும் ஆர்வத்தோடு இருக்க ஸ்ருதியின் அம்மா வருகிறார். வழக்கம் போல அவரை மட்டும் ஓடி சென்று விஜயா வரவேற்க கூடவே ஆரத்தி எடுத்துட்டு வர சொல்லி ஸ்ருதி மற்றும் மீனாவை விரட்டி விடுகிறார்.

அதைத் தொடர்ந்து விளக்கு ஏற்றுகின்றனர். அப்போது விஜயா ஸ்ருதி அம்மாவை தொடர்ந்து ஸ்ருதியை விளக்கு ஏற்ற வைக்கிறார். அதைப் பார்த்து ரோகினி அப்போ நான் தான் கடைசியில் விளக்கு ஏற்றனுமா என்று மனோஜிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரோகிணியும் கூப்பிட்டு விளக்கேற்ற வைக்கிறார். கடைசி திரியில் எனக்காக வீடு தந்த பார்வதி தான் ஏற்றனும் என்று சொல்ல அண்ணாமலையும் முத்துவும் மீனா விளக்கேற்ற வேண்டாமா என்று கோபப்படுகின்றனர்.
அதற்கு விஜயா இங்கே ஐந்து முகம் தான் இருக்கிறது. அதனால் ஏற்றியது போதும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனா இந்த விளக்கு ஏற்றுவதற்கு முன்பு நான் தானே எண்ணெய் ஊற்றி திரி போட்டேன் அப்போ முதலில் என்னுடைய பங்கு தான் அதில் அதிகமாக இருக்கு என்று சொல்ல முத்து சூப்பர் மீனா அப்போ உனக்கு தான் இதில் முதல் மரியாதை இருக்கா என்று சொல்ல அதைக் கேட்டு ரோகிணி விஜயாவும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதைத்தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ஒரு நபர் வந்து விஜயா மற்றும் பார்வதியிடம் டான்ஸ் கிளாஸ் பற்றி விசாரிக்க விஜயா நீங்க உங்க வீட்டு குழந்தையை இங்கே சேர்க்க போறீங்களா? அதனால தான் விசாரிக்கிறீர்களா? என்று கேட்க இல்ல, நான் கரண்ட் ரீடிங் எடுக்க வந்திருக்கோம். நீங்க வீட்டுக்கு என்று சொல்லி கரண்ட் எடுத்து இருக்கீங்க. ஆனா இங்கே டான்ஸ் கிளாஸ் வச்சிருக்கீங்க என்று சொல்ல விஜயாவும் பார்வதியும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications