சிறகடிக்க ஆசை: சுதாவால் மனோஜ்க்கு விழுந்த அடி.. ஸ்ருதி இப்படி பேசிட்டாங்க.. மீனா கேட்ட சரியான கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஸ்ருதியின் அம்மா சுதா செய்த சதியால் அண்ணாமலையின் குடும்பத்தில் முத்து மற்றும் மனோஜ்க்கு இடையே சண்டை வெடிக்கிறது. அதே நேரத்தில் ஸ்ருதியும் முத்து மீது கோபப்படுகிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை வீட்டுக்கு வந்த சுதா இந்த வீடு கட்டுவதற்கு என்னுடைய புருஷன் தானே உங்களுக்கு லோனுக்கு ஏற்பாடு செய்தார் என்று சொல்லி காமிக்க எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது மீனா லோன் வாங்குவதற்கு அவர் உதவி செய்திருந்தாலும் அந்த லோனை கஷ்டப்பட்டு எங்க மாமா தானே அடைச்சாரு என்று சொல்ல சுதா அதிர்ச்சியாகிறார்.

பிறகு மாடியில் ரூம் கட்டுவதற்காக 5 லட்சம் செக் கொண்டு வந்திருப்பதாக சுதா சொல்ல, உங்களுக்கு பெரிய மனசு சம்பந்தி என்று விஜயா பணத்தை வாங்க போகும்போது அண்ணாமலை அப்படியே உட்கார்ந்து இருப்பதை பார்த்து விஜயா பேச்சை மாற்றுகிறார். பிறகு முத்து வீட்டுக்கு வர சுதா செக் கொண்டு வந்திருக்கிற விஷயம் தெரிந்து இங்க எல்லாருக்கும் கை கால் நல்லா தான் இருக்கு.
அப்படி இருக்கும்போது நாங்க வீடு கட்ட நீங்க எதுக்கு பணம் தரணும் என்று கேட்க, ஸ்ருதி எங்க அம்மா நல்ல மனசோட தான் கொண்டு வந்தாங்க அதை எதற்கு வேண்டாம் என்று சொல்லுறீங்க என்று கேட்க, அதற்கு அண்ணாமலை பணத்தால் உறவு முடிஞ்சு போயிடும் என்று சொல்ல, விஜயா அப்போ என் அப்பா கொடுத்த இடத்தை எதுக்கு நீங்க வாங்கினீங்க என்று கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை உன் அப்பா என்னை கட்டாயப்படுத்தி என் பெயரில் எழுதி வச்சாரு. நான் வேணாம்னு சொல்லியும் கேட்கல, அதற்குப் பிறகு இந்த வீட்டை நான் கஷ்டப்பட்டு தானே கட்டுனேன் என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு மீனா உங்க அப்பா உங்களுக்கு கொடுத்த மாதிரி ஸ்ருதியோட அம்மா அதை ஸ்ருதிக்கு கொடுக்கட்டும். அதை யாரும் வேண்டான்னு சொல்ல போறது கிடையாது என்று சொல்ல, முத்து சரியான பாய்ண்ட்டை பிடிச்சுட்டா மீனா என்று பாராட்டுகிறார்.

அதை தொடர்ந்து உங்க அம்மா கொடுக்கிறதா இருந்தா உனக்கும் ரவிக்கும் கொடுக்கட்டும். அதை வச்சு நீங்க வீடு வாங்குங்க, வீடு கட்டுங்க என்ன வேணா பண்ணுங்க. ஆனா நம்ம வீடு கட்ட எதற்கு அவங்க பணம் கொடுக்கணும்? என்று சொல்ல விஜயா உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு ரவியும் ஸ்ருதியும் இந்த வீட்டை விட்டு போகணும் அதுதானே உன்னுடைய ஆசை என்று கேட்க, மனோஜ் அம்மா சொல்றதுதான் சரி.

எங்க எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டு நீ மட்டும் இந்த வீட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறியா சரியான சுயநலவாதியா இருக்கடா என்று பேச, ரோகிணியும் முத்து பேசறதை பார்த்தா அப்படித்தான் இருக்கிறது என்று சொல்ல, கோபமான முத்து யாரு சுயநலவாதி என்று மனோஜ் கன்னத்தில் பளார் பளார் என்று அறைகிறார். அண்ணாமலை நிறுத்துங்கடா நீங்க எதுக்கு அடிச்சிக்கிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார்.

அப்போது முத்து மனோஜ் பார்த்து நீ தூக்கிட்டு ஓடிப்போன 27 லட்சம் பணம் இருந்திருந்தால் அப்பா எதுக்கு இப்படி பணத்துக்காக கஷ்டப்படணும் என்று திட்டுகிறார். பிறகு ஸ்ருதியின் அம்மா கோபப்பட்டு வீட்டை விட்டு கிளம்புவது போல கிளம்பி வாசலில் நின்று இவர்கள் சண்டை போடுவதை பார்த்து சிரித்துக் கொண்டு போகிறார். அடுத்த கட்டத்தில் ரவியும் ஸ்ருதிக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது.
அப்போது ரவி நான் உன் வீட்டில் நடப்பதை பற்றி இந்த வீட்டில் ஏதாவது பேசுகிறேனா? ஆனா நீ மட்டும் எதற்கு இங்கு நடப்பதை உங்க அம்மா கிட்ட பேசுன, உங்க அம்மா ஏதாவது கொடுக்கறதா இருந்தா உனக்கு தானே கொடுக்கணும். எதுக்காக அவங்க எங்க வீட்டுக்கு செய்யணும்னு நினைக்கிறாங்க என்று கேட்க, அவங்க நல்ல மனசோட நான் இந்த வீட்டில் நல்லா இருக்கணும்னு செய்றாங்க, நான் மட்டும் இல்லாம இந்த வீட்ல இருக்குறவங்களும் நல்லா இருக்கணும்னு அவங்க நினைக்கிறாங்க.
ஆனால் உங்க அண்ணன் தான் அதை புரிஞ்சுக்கல என்று கோபப்படுகிறார். மறுபக்கத்தில் முத்து வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து செல்வத்திடம் புலம்பியபடியே சரக்கு அடிக்கிறார். பிறகு போதையில் வீட்டிற்கு வர அண்ணாமலை அதை பார்த்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications