விஜயாவால் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. முத்து கொடுத்த அதிர்ச்சி.. ரோகிணி முடிவு என்ன?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எபிசோடில் சுவாரஸ்யமான சில காட்சிகள் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து இனி என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் கனடா போவதற்காக பணம் கேட்ட மனோஜை விஜயா வெளுத்து வாங்கி விட்டிருக்கிறார். அதே நேரத்தில் மனோஜ் கோவில் வாசலில் பிச்சை எடுப்பது போன்ற வீடியோ இப்போது வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடு, திரைப்படத்திற்கு இணையாக இருந்தது. அதிலும் ஸ்ருதியிடம் பிரச்சனை செய்த பிஜுவை முத்து கன்னத்தில் பளார் பளார் என்று அடித்து இனி ஸ்ருதி பக்கம் உன்ன பார்த்தேன் அவ்வளவுதான் என்று மிரட்டி இருக்கிறார். அப்போதும் பிஜு, ஸ்ருதிக்கு சப்போர்ட் பண்ண நீ யாரு என்று கேட்க, அதற்கு அடிச்சே பதில் கொடுத்த முத்துவை பார்த்து ஸ்ருதியே பயந்து போய் இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து இனி அடுத்த வாரத்தில் ஸ்ருதி மீண்டும் மனம் மாறி வீட்டிற்கு வரும் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்ருதி மீண்டும் வீட்டிற்கு வருவதற்கு காரணம் முத்து மற்றும் மீனாதான் என்று வீட்டிற்கு தெரியவரும் நிலையில் விஜயா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே மீனாவால்தான் ஸ்ருதி வீட்டை விட்டுப் போய் விட்டார் என்று விஜயா திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இனி முத்து செய்த உதவியால் மீண்டும் ஸ்ருதி வீட்டிற்கு வர இருக்கிறார்.
அதுபோல இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஒரு சாமியாரை போய் பார்க்க போயிருக்கிறார். அதற்குப் பிறகு நாளைக்கு என்று வெளியேற வீடியோவில் அவர் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் சாமியார் மனோஜை பிச்சை எடுப்பது போன்று பரிகாரம் ஏதாவது செய்ய சொல்லி இருக்கிறாரா? அல்லது பணம் சம்பாதிப்பதற்கு வேலைக்கு போகாமல் பிச்சை எடுக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறாரா? என்ற குழப்பம் தான் இருக்கிறது.

ஆனாலும் மனோஜ் பிச்சை எடுக்கும் அதே கோவிலுக்கு மீனாவும் வந்திருக்கும் நிலையில் மனோஜை பார்த்து சந்தேகப்பட்டு மீனாவும் மனோஜை நோக்கி வருகிறார். இதனால் மனோஜ் பிச்சை எடுப்பதை பற்றி மீனா வீட்டில் சொல்லிக் கொடுத்தால் ரோகிணி என்ன முடிவெடுப்பார் என்ற கேள்விகளும் வருகிறது. இதையே ஷாக்காக வைத்து ரோகினி அடுத்ததாக மனோஜை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு போய் விடுவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி போவது வாய்ப்பு குறைவு தான். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதுபோல ஏற்கனவே ஸ்ருதி வீட்டுக்குள் வருவதற்கு முன்பு இதே பிஜுவால் அவருக்கு பிரச்சனை வரும்போது மீனா அவரை அப்போது காப்பாற்றினார். பிறகு இப்போது முத்து அவரை காப்பாற்றி இருக்கிறார்.

அதுவும் முத்து முகத்தை பார்க்காமலேயே ஸ்ருதி இடம் பேசியதை கேட்டு ஸ்ருதி முத்துவின் மனதை புரிந்து கொள்வாரா? அல்லது தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மட்டும்தான் வீட்டிற்கு வரப் போகிறாரா? என்றும் யோசிக்க வைக்கிறது. எப்படியோ ஒரு வழியா ஸ்ருதி பிரச்சனை இப்போதைக்கு முடிந்திருந்தாலும் அடுத்ததாக மனோஜால் புது பிரச்சனை வெடிக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications