சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 21, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோடில், அண்ணாமலையின் பிறந்த நாளை முத்துவும் மீனாவும் சர்ப்ரைஸாக கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் முத்து மீனா வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில், (Siragadikka Aasai serial update) அண்ணாமலையின் 60வது பிறந்தநாள் என்பதால், அவரின் நெருங்கிய நண்பரான பரசு காலையிலேயே கோவிலுக்கு போய்ட்டு அண்ணாமலை பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, பிரசாதத்துடன் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஹாலில் அண்ணாமலை மட்டும் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து, "இது உன் 60வது பிறந்தநாளாச்சே, நீ பெரிய அளவில செலிபிரேட் பண்ணிட்டு இருப்பேன்னு நினைச்சேன், ஆனா இங்க யாரையும் காணோம்" என்று கேட்கிறார்.
அண்ணாமலை பிறந்தநாள்
அந்த நேரத்தில் விஜயா அங்கு வருகிறார். பரசு அவரிடம் "இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?" என்று கேட்க, விஜயா சும்மா "இன்னைக்கு சனிக்கிழமை" என்று பதில் சொல்கிறார். அதன்பின் மனோஜிடம் கேட்க, அவரும் அதேபோல பதில் சொல்கிறார். ரவியும் அதேபோலவே கூறுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டிற்குள் வருகிறார். அவரும் அண்ணாமலையிடம் பேசாமல் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இதைப் பார்த்து "இவங்க எல்லாரும் மறந்தது ஓகே, ஆனா முத்துவும் மறந்துட்டானே" என்று பரசு கவலைப்படுகிறார்.

இதுதான் சர்ப்ரைஸ்
அதற்குப் பிறகு திடீரென்று வெளியிலிருந்து மேளம் சத்தத்துடன் முத்து வீட்டிற்குள் வருகிறார். அவருடன் மீனாவும் வருகிறார். அவர்கள் கையில் மாலை, தாம்பூலம், புதிய உடைகள் எல்லாம் கொண்டு வருகிறார்கள். அண்ணாமலையின் 60வது பிறந்தநாளுக்காகவே இந்த சர்ப்ரைஸை முத்துவும் மீனாவும் திட்டமிட்டு வைத்திருந்தது தெரிய வருகிறது. அதே சமயம் ஸ்ருதியும் அங்கு, கேக் கொண்டு வருகிறார். "உனக்கு எப்படி தெரியும்?" என்று விஜயா கேட்க, "மீனா நேற்றே சொல்லிட்டாங்க" என்று ஸ்ருதி கூறுகிறார்.
மகிழ்ச்சியில் சிறகடிக்க ஆசை குடும்பம்
பிறகு அனைவரும் சேர்ந்து கேக் வெட்ட முடிவு செய்கிறார்கள். கேக் வெட்டப் போகும் நேரத்தில் ரோகிணி அங்கு வருகிறார். "மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தேன்" என்று கூறுகிறார். ஆனால் விஜயா அவரை வீட்டின் வாசலிலேயே தடுத்து நிறுத்தி, "இது நல்ல நாள், பிரச்சனை பண்ணாம கிளம்பி போ" என்று அனுப்பிவிடுகிறார். கிளம்பும் முன், "அடுத்த பிறந்தநாளுக்கு நானும் உங்க கூட இருப்பேன் பாருங்க" என்று சவால் விட்டுச் செல்கிறார் ரோகிணி.

ரோகிணியின் சவால்
இதற்குப் பிறகு வீட்டில் கேக் வெட்டி அனைவரும் கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு முத்துவுடன் அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள். முத்து புதிதாக ஒரு வேன் வாங்கியிருப்பதால், அதற்கு பூஜை செய்யப் போகிறார்கள். அங்கே முத்துவின் குடும்பத்தாருடன் மீனாவின் குடும்பத்தாரும் சேர்கிறார்கள். பூஜை முடிந்தபின் அண்ணாமலை கையால் சாவியை வாங்கிக் கொண்டு முத்து வண்டியை ஓட்ட ஆரம்பிக்கிறார். அந்த வேனுக்கு "MM டிராவல்ஸ்" என்று பெயர் வைத்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை எபிசோடு
மறுபுறம் சீதா கோவிலை சுற்றி கும்பிட்டு கொண்டிருக்கும்போது, திடீரென்று தனது தாலி காணாமல் போனதை கவனிக்கிறார். அதனால் பதறி போகிறார். அந்த நேரத்தில் ஒரு முக்காடு போட்ட பெண், மீனாவை இடித்துவிட்டு வேகமாக கோவிலிலிருந்து வெளியே ஓடிச் செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சஸ்பென்ஸுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications