சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai Serial March 26, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 26 ஆம் தேதிக்கான எபிசோடில், வீட்டை விட்டு துரத்தி விடப்பட்ட மீனாவை விஜயாவே ஆர்த்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து இருக்கிறார். ஆனால் இதுவரைக்கும் நல்லவனாக இருந்த அருண் தனக்குள் இருக்கும் சைக்கோ தனத்தை காட்டி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் கதை
சிறகடிக்க ஆசை சீரியலில், சீதாவின் தாலி செயினை மீட்க முயற்சி செய்தபோது முத்துவும் மீனாவும் போலீசில் சிக்கி கைது ஆகும் நிலை வந்தது. அவர்கள் நடந்த விஷயத்தை பற்றி எவ்வளவு சொன்னாலும் போலீசார் கேட்காமல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அண்ணாமலை வந்து, "இவர்கள் திருடர்கள் இல்லை, தங்கள் குடும்ப பிரச்சனையால் தான் இப்படி மாறு வேடம் போட்டுச் சென்றிருக்கிறார்கள்" என்று நியாயம் சொல்லி அவர்களை அங்கிருந்து மீட்டுக் கொண்டு வருகிறார்.
அதற்குப் பிறகு, "எப்படியாவது அந்த செயினை திருடிச்சென்றவரை பிடிக்கணும்" என்று முடிவு செய்த முத்துவும் மீனாவும் நேராக அந்த திருட்டு கும்பல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்திற்கே செல்கிறார்கள். அங்கே சொர்ணம் என்ற பெண் திருட்டு நகைகளை விற்க வருகிறார். ஆனால் அங்கு யாரும் இல்லாததை பார்த்து அவளுக்கு கொஞ்சம் சந்தேகம் வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் நேற்றைய எபிசோடு
அந்த நேரத்தில், சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு இருந்த மீனா அவளை மிரட்டுகிறார். முத்து அவள் கையில் இருந்த பையை வாங்கி பார்த்ததும், அதில் சீதாவின் தாலி செயின் இருப்பது தெரிகிறது. உடனே அவளை பிடித்து, உண்மையை சொல்ல வைக்கிறார்கள். "நான் எல்லாத்தையும் சொல்லுறேன்" என்று சொன்னதும், முத்துவும் மீனாவும் அவளை நேராக விஜயா வீட்டிற்கு கூட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
அதிர்ச்சியில் விஜயா
அங்கே என்ன நடக்கிறது என்றால், மீனாவின் அம்மா, தங்கச்சி, தம்பி எல்லாரும் முன்னதாகவே வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதைக் கண்டு விஜயா ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்குள் முத்துவும் மீனாவும் அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு உள்ளே வருகிறார்கள். "நீங்க சொன்னீங்களே, அந்த சாமியார் போலியானவர் என்பதை நிரூபித்தா தான் வீட்டுக்குள் வரலாம் என்று... இப்போ அதுக்கான சான்று இதோ" என்று சொல்லி அந்த பெண்ணை எல்லாரின் முன்னும் நிறுத்துகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் (Siragadikka Aasai serial today episode), அந்த பெண் தான் போலி சாமியார், திருடி என்று முத்து நிரூபித்துவிடுகிறார். இதைக் கேட்டதும் விஜயாவுக்கு கோபம் தாங்கவே முடியவில்லை. "என்னை ஏமாத்திட்டியா? உன்னை நம்பி கையெடுத்து கும்பிட்டேனே!" என்று சொல்லி அவளை பிடித்து அடிக்க ஆரம்பிக்கிறார். "ரோகிணி சொல்லி நீ இப்படி நடிச்சு ஏமாத்துறியா?" என்று கோபத்தில் அடிவெளுக்கிறார்.
சவாலில் தோற்ற விஜயா
கொஞ்ச நேரத்தில் போலீசார் அங்கு வந்து, அந்த பெண்ணை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். இந்த விஷயம் முடிந்ததும், முத்து மீனாவை வெளியே நிற்கச் சொல்கிறான். பிறகு வீட்டுக்குள் இருந்து ஆரத்தி தட்டை எடுத்து வந்து அண்ணாமலையிடம் கொடுத்து, "இனி நீங்க தான் பேசணும்" என்று சொல்கிறார். அண்ணாமலை விஜயாவை அழைத்து, "நீ விட்ட சவாலில் முத்து ஜெயிச்சிட்டான்... நீ சொன்ன மாதிரி மீனாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடு" என்று சொல்லி ஆரத்தி தட்டை கொடுக்கிறார்.
விஜயாவுக்கு மனசுக்கு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் ஆரத்தி எடுத்து "வா மருமகளே" என்று மீனாவை வீட்டுக்குள் அழைக்கிறார். ஆனாலும் உள்ளுக்குள் கோபம் கொதித்துக்கொண்டே இருக்கிறது.
அருண் செய்த செயல்
இதே நேரத்தில் சீதாவுக்கு தாலி செயின் திரும்ப கிடைத்ததால், அவள் மீண்டும் வீட்டுக்கு செல்கிறாள். முன்பு "தாலி இல்லாமல் வீட்டுக்குள் வரக்கூடாது" என்று அடித்து துரத்திய அருண், இப்போது அவள் கழுத்தில் தாலியை பார்த்ததும் உடனே மனம் மாறி, "அது என்னோட அம்மா நகைதான்... அதனால தான் அப்படி நடந்துக்கிட்டேன்" என்று சமாளிக்க முயற்சிக்கிறான்.
அருணின் இந்த நடத்தை சீதாவுக்கு பிடிக்கவில்லை. அவன் சைக்கோ மாதிரி நடக்கிறான் என்று உணர்ந்த சீதா, "நீங்க ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரை பார்க்கணும்" என்று சொல்கிறாள். அதைக் கேட்ட அருண் கோபமாக "நான் பைத்தியமா?" என்று கேட்டு, மீண்டும் மீண்டும் பைத்தியம் மாதிரி பேச ஆரம்பிக்கிறான்.
கடைசியாக மனோஜ் தனது ஷோரூமில் இருக்கும்போது ஜீவா வந்து, "உங்களுக்காக நான் மேட்ரிமோனியில் பெண் பார்த்துட்டேன்... அவங்க பெயர் யமுனா... உங்களை பார்க்க இங்க வர்றாங்க" என்று சொல்லுகிறார். இதைக் கேட்ட மனோஜ் மிகவும் சந்தோஷமாகி, அவளை எதிர்பார்த்து காத்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் யமுனா அங்கே வருகிறாள். அவளை பார்த்ததும் மனோஜ் உற்சாகமாகி, இருவரும் பேச ஆரம்பிக்கிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications