முத்துவுக்காக கோபப்படும் மீனா! ஸ்ருதி அம்மாக்கு விழுந்த அடி.. ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்று ரோகிணி ஒரு பக்கமும், ஸ்ருதி குடும்பத்தினர் ஒரு பக்கமும் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று முழுக்க முத்து எந்த பிரச்சனையும் செய்யவில்லை. அதே நேரத்தில் முத்துவுக்காக மீனா சண்டை போடுகிறார்.
அதுபோல ரோகிணியிடம் நகைகளை கேட்டு விஜயா பிரச்சனை செய்ய அதற்கு வித்தியா அதிரடியான பதிலை சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஸ்ருதி, விஜயா மற்றும் தன்னுடைய அம்மா கொடுத்த இரண்டு பேருடைய மாலையும் வாங்கி போட்டு பிரச்சனையை தீர்த்து வைக்கிறார். ஆனால் அது தெரியாத முத்து கண்டிப்பா இப்ப ஒரு புயலே வீசும் என்று அண்ணாமலையே கூப்பிட்டு ஸ்ருதி வெளியே வரும்போது என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்க அங்கே ஸ்ருதி இரண்டு மாலையும் போட்டுக்கொண்டு வெளியே வருவதை பார்த்து முத்து அதிர்ச்சி அடைகிறார்.
என்ன இந்த பொண்ணு இப்படி பண்ணிடுச்சு என்று கேட்க அதற்கு மீனா அண்ணாமலை எல்லோரும் ஸ்ருதி பாராட்டுகின்றனர். அப்போது விஜயா, "பெரிய வீட்டு பொண்ணுக்கு தான் இந்த மாதிரி குணமெல்லாம் இருக்கும்" என்று பேச, அதற்கு அண்ணாமலை "இதையெல்லாம் மீனாகிட்டயும் இருக்கு... நல்ல குணம் வருவது பணக்காரங்க ஏழைங்க என்று இல்ல, வளர்ப்பும்.. வளர்கிற சூழ்நிலையும் தான் காரணம்" என்று சொல்கிறார்.

அடுத்ததாக வாசுதேவனும் அவருடைய மனைவியும் சேர்ந்து இரண்டு பேரை ரெடி பண்ணி முத்துவை கோபப்பட வைக்க அனுப்புகின்றனர். முதலில் ஒருவர் வந்து முத்து பக்கத்தில் நின்று போன் பேசுவது போலே ஷூ காலால் முத்து காலில் வேகமாக அழுத்தி மிதிக்க வலி தாங்க முடியாமல் முத்து தவிக்கிறார். ஆனால் முத்து சண்டை போடுவார் என்று எதிர்பார்த்தால் "சாமியே சரணம் ஐயப்பா... உங்கள் காலை கொஞ்சம் எடுங்கப்பா" என்று சமாதானம் பேசுகிறார்.
முத்து காலை அந்த நபர் மிதித்ததை பார்த்ததும் மீனா அவரிடம் சண்டைக்கு போக முத்து மீனாவையும் அமைதியாக இருக்க சொல்லி பிரச்சனை இல்லாமல் தீர்த்து விடுகிறார். பிறகு ஸ்ருதியின் அம்மா அந்த ஆட்களிடம் கோபப்பட்டு திட்டி, அதற்கு அந்த நபர் சுதா காலில் மிதிக்க, வலி தாங்க முடியாமல் சுதா கத்தி கண்டபடி திட்டுகிறார்.

அதற்கு அந்த நபர் உங்களை லேசா தான் மிதித்தேன் ஆனால் அவனை இதைவிட மோசமா மிதிச்சேன். அப்பவும் அவன் கோபப்படவில்லை. எனக்கு தெரிஞ்சு அவனை கோபப்பட வைக்கிறது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் ரோகிணி ஏற்பாடு செய்த ஆள் இன்னும் வரலையே என்று பேசிக் கொண்டிருக்கும்போது விஜயா அங்கு வந்து உங்க அப்பா இன்னும் வரலையா?
நான் எல்லாரிடமும் அவர் வந்துட்டு இருக்காருன்னு சொல்லிட்டு இருக்கேன். இந்த முறை ஏமாற்ற கூடாது என்று திட்டிவிட்டு கழுத்தில் இவ்வளவுதான் நாங்க போட்டு இருக்க... ஸ்ருதி கழுத்தில் நகை போடவே இடம் இல்ல... அந்த அளவிற்கு நகை போட்டு இருக்கா என்று சொல்லி தன்னுடைய கழுத்தில் இருந்த நகைகளை ரோகிணிக்கு போட்டு உங்க அப்பா எப்படியும் கிலோ கணக்குல நகை கொண்டு வருவாளா என்று கேட்கிறார்.

அதற்கு வித்யா அவர் என்ன கோயம்பேடு மார்க்கெட்டிலா வேலை பார்க்கிறார்? கிலோ கணக்குல கொண்டுவர.. அவர் வெளிநாட்டிலிருந்து கிலோ கணக்கில் கொண்டு வந்தால் செக்கிங்கில் பிடிச்சுருவாங்க என்று சொல்ல சரி கொஞ்சமாவது கொண்டு வருவார்ல்ல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்ததாக ரோகிணி ஏற்பாடு செய்த நபர் மண்டபத்திற்கு வந்தது முக்கிய விஷயம் முத்துவை காட்டி இவனை தான் நீ குடிக்க வைக்கணும் மத்ததை நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்கிறார். அதுபோல மறுபக்கம் ஸ்ருதி அம்மா இன்னொரு நபரிடம் முத்துவை வம்பு இழுக்க அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications