சிறகடிக்க ஆசை: முத்துவை விடுங்க.. சத்யாவிடம் சிட்டி சொன்ன வார்த்தை.. ரோகிணிக்கு ஆப்பு வந்தாச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே பத்தாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் முத்து மீது தப்பு இல்லை என்று எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் சிட்டி சத்தியாவிடம் முத்து விஷயத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து ரவி மீனா மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். அப்போது முத்து மீது தப்பில்லை என்பதால் போலீஸ் முத்துவை டீ குடிக்கிறீங்களா? காபி குடிக்கிறீங்களா? என்று நல்லபடியாக விசாரிக்கிறார். அதோடு இந்த மாதிரி பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாங்க. இப்படி தப்பான விஷயத்தில் மாட்டி இருக்காங்கனு தெரிஞ்சா இந்த புருஷனே வேண்டாம்னு விட்டுட்டு போயிருவாங்க.

ஆனா உன் பொண்டாட்டி தைரியமா எங்க விசாரிக்கணும் என்று தெரிந்து விசாரிச்சு உண்மையை வெளியே கொண்டு வந்து இருக்காங்க என்று பாராட்டுகிறார். அப்போது அங்கு சிட்டியை கூட்டிட்டு வருகின்றனர். சிட்டி எதுக்காக சார் என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்க என்று கேட்க, நீ வீடியோ எடுத்து தப்பா பரப்பிவிட்டது தான் அம்பலம் ஆகிட்டே ஏன் இன்னும் நடிக்கிற என்று திட்டிக் கொண்டு இருக்கிறார்.
பிறகு முத்துவிடம் இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடலாம் அவனிடம் நஷ்ட ஈடா ஒரு லட்சம் வாங்கி தரேன் என்று சொல்ல, அதற்கு முத்து வேண்டாம் சார் இவனே பாவ தொழில் செஞ்சு சம்பாதிக்கிறான். இவனோட பணம் எனக்கு எதற்கு? இவனை உள்ளே போட்டாதான் இவனை மாதிரி தப்பா வீடியோ எடுத்து பரப்புறவங்களுக்கு பயம் வரும் என்று சொல்ல போலீஸ் சிட்டி மீது எஃப் ஐ ஆர் போட சொல்லி அவரை ஜெயிலுக்குள் அடைக்கிறார்.
பிறகு சாவியை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது மீனா இவன் மட்டும் வெளியே இருந்து இருந்தா உங்க கையால நாலு அடி போட சொல்லி இருப்பேன் என்று சொன்னதும் போலீஸ் முன்னாடியே சிட்டியை போட்டு முத்து அடிக்க, போலீஸ் முத்துவை தடுத்து திட்டி அனுப்புகிறார்கள். பிறகு வெளியே வந்ததும் சத்யா அங்கு நிற்க மீனா நீ இந்த சிட்டி கூட எல்லாம் சேராதுன்னு சொன்னா கேட்டியா? இவனால தான் இவ்வளவு பிரச்சனை.
இவன் தான் இவரை கேவலப்படுத்தனும் என்று இப்படி பண்ணி இருக்கிறான். இனியாவது ஒழுங்கா இரு. இல்லன்னா இவர்கிட்ட சொல்லி இன்னொரு கையையும் உடைக்க சொல்லிடுவேன் என்று சொல்ல சத்யா கோபப்படுகிறார். முத்து வீட்டுக்கு போகலாம் என்று கூட்டிட்டு வருகிறார். மறுபக்கத்தில் அண்ணாமலை டிவியில் முத்து பேசிய வீடியோவை போட்டு காட்டி எல்லாரையும் பார்க்க சொல்ல, அதற்கு மனோஜ் இது முத்துவின் செட்அப் ஆக கூட இருக்கலாம் என்று சொல்ல, அதற்கு விஜயா இவன் பண்ணினாலும் பண்ணுவான் என்று சொல்கிறார்.
அதற்கு அண்ணாமலை இவர் இருவரையும் திட்டுகிறார். பிறகு விஜயாவை ஆரத்தி கரைக்க எடுத்துட்டு வர சொல்ல, விஜயா முதலில் முடியாது என்று சொன்னதும் அண்ணாமலை மிரட்டி எடுத்துட்டு வர சொல்கிறார். முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வரும்போது அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்கின்றனர். அப்போது மீனா ரோகினி இடம் நீங்க என் புருஷனை எனக்கு திருத்த தெரியலன்னு சொன்னீங்க.
எனக்கு அவர திருத்த தெரியல சரிதான். ஏன்னா அவர் அன்னைக்கு குடிக்கவே இல்லை என்று சொல்ல அதற்கு விஜயா ரோகினிக்கு சப்போர்ட்டாக மீனாவை திட்டுகிறார். மறுபக்கத்தில் சிட்டியை சத்தியா பார்க்க போக அதற்கு சிட்டி எனக்கு உன் மாமா மேல கோவமே இல்ல. உன்னை இவ்வளவு திட்டுறாரே அவர் குடிக்கிறார்ன்னு சொல்றதுக்காகத்தான் உனக்கு வீடியோ எடுத்து அனுப்ப நினைச்சேன்.
ஆனா என் பக்கத்துல இருந்த பன்னாடை அந்த வீடியோவை நெட்டில் போட்டு விட்டுட்டான். என்ன நீ நம்பனும் நான் வெளியில வர வரைக்கும் நீ தான் நம்மளோட கணக்கு வழக்கை எல்லாம் பார்க்கணும் என்று சொல்கிறார். அதே நேரத்தில் டிவியில் வீடியோவை பார்த்த ரோகிணி சிட்டியை பார்த்ததும் இது நாம கடன் வாங்கின சிட்டி தானே? இவனுக்கும் முத்துக்கும் என்ன பிரச்சனை என்று பயத்தில் இருக்கிறார்.
ஏற்கனவே ரோகிணி எதற்காக கடன் வாங்குகிறார் என்று குழப்பத்தில் சத்யா இருக்கிறார். இப்போ சிட்டி தன்னுடைய வேலைகளை சத்யாவை பார்க்க சொல்லி இருக்கும் நிலையில் இனி சத்யாவால் தான் ரோகிணிக்கு ஆப்பு வர இருக்கிறது என்று தெரிகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications