சிறகடிக்க ஆசை: குடும்பத்தின் முன்பு அசிங்கப்பட்ட மனோஜ்.. விஜயா இப்படி பேசிட்டாங்களே! சபாஷ் முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 15ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ஸ்ருதி ரவிக்கு தன்னுடைய டிரஸ்ஸை போட்டு விட்டதே மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்ததால் விஜயா கோபப்பட்டு ஸ்ருதியை திட்டி இருக்கிறார். அதே நேரத்தில் பிசினஸ் தொடங்குவதற்கு முன்பே மனோஜ் கணக்கில் கோட்டை விட்டு இருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஸ்ருதியின் நைட்டியை போட்டுக்கொண்டு ரவி கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு ரோகிணி வர ரவி ஒளிந்து கொள்கிறார். பிறகு விஜயா எனக்கு பசிக்கிறது என்று சொல்லி கிச்சனுக்கு வரும்போது அங்கு ரவி டீ போட்டுட்டு இருப்பதை பின்னாடி இருந்து பார்த்து ஏதோ ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு திருட வந்திருக்கு என்று கதவை பூட்டி வைத்து திருடி திருடி என்று கத்த வீட்டில் இருக்கும் எல்லோரும் வந்து விடுகின்றனர்.

Siragadikka aasai serial May 15th promo and episode full update

கிச்சன் கதவை பூட்டி எதனால் ரவி உள்ளே ஒளிந்து கொண்டு இருக்க முத்து ஏதோ திருட வந்த பொண்ணு என்று அவரைப் பிடித்து வெளியே கொண்டு வந்து பார்க்க அது ரவி என்பதை தெரிந்ததும் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இவர்கள் போட்ட சத்தத்தை கேட்டு ரவியின் உடையில் இருந்த ஸ்ருதியும் ரூமில் இருந்து வெளியே வர விஜயா இது என்ன கோலம் என்று கோபப்படுகிறார்.

அதற்கு ஸ்ருதி நானும் ரவியும் சும்மா விளையாடினோம் அவ்வளவு தான் என்று சொல்ல விஜயா அதற்கு கோபப்பட்டு எனக்கு இதெல்லாம் பிடிக்காது. நான் மூணு ஆம்பள சிங்கங்கள பெத்து வச்சிருக்கேன். பொம்பள புள்ள இல்லாதவங்க ஆம்பள பசங்களுக்கு பொண்ணுங்க டிரஸ் போட்டு அழகு பாப்பாங்க. நான் அப்படி ஒரு நாள் கூட பார்த்தது கிடையாது.

இப்போ இப்படி ஒரு கன்றாவி.. என்று திட்டி விட்டுப் போக, ஸ்ருதி அண்ணாமலை இடம் மாமா அத்தை இப்படி சொல்றாங்க என்று சொல்ல அதற்கு அண்ணாமலை நீங்க எது பண்றதாலும் உங்க ரூமுக்குள்ள பண்ணுங்க இப்படி வெளியே வந்து பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி போய் விடுகிறார். பிறகு மனோஜ் முத்து எல்லோரும் ரவியை கிண்டல் செய்து குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் மீனா வழக்கம் போல கடைக்கு கிளம்பி போக விஜயா வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு கடைக்கு போனா போதும் என்று கண்டிஷன் போட அதற்கு முத்து இந்த கண்டிஷன் எல்லாருக்கும் போட வேண்டியதுதானே என்று திட்டுகிறார். அதற்கு மீனா எனக்கு இதில் எந்த கஷ்டமும் இல்லை என்று சொல்லவும் விஜயா ரோகினிக்கு பிடிச்சதை கேட்டு சமைத்து கொடு என்று ஆர்டர் போடுகிறார்.

ரோகிணி எனக்கு வெஜிடபிள் பிரியாணி வேண்டும் என்று கேட்டதும் மீனா வெஜிடபிள் பிரியாணிக்கு வெஜிடபிள் இல்ல கடைக்கு போய் வாங்கணும் என்று சொன்னதும் முத்து அப்போ மனோஜிடம் காசு கொடுத்து அவரை போய் வாங்கிட்டு வர சொல்லுங்க என்று சொல்கின்றார். அதற்கு மனோஜ் நான் கடைக்கு போக மாட்டேன் என்று சொல்ல, முத்து இவன் இப்படி சின்ன சின்ன வியாபாரம் தெரியாமல் இருந்தால் இவன் எப்படி வியாபாரம் பார்க்க முடியும் என்று சொன்னதும் அண்ணாமலையும் அது சரிதான் நீயே போய் கடையில் காய்கறி வாங்கிட்டு வா என்று சொல்கிறார்.

வேற வழி இல்லாமல் மனோஜ் கிளம்பி போகிறார். பிறகு ரோகிணி சொன்ன சில காய்கறிகளை வாங்கிவிட்டு 490 என்று பில்லை கொடுக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதைப்பற்றி எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும்போது கடைக்காரர் வருகிறார். அவர் மிஷின் ஃபால்ட் ஆகிட்டு 190 தான் ஆச்சு இந்தாங்க மீதி என்று 300 ரூபாய் பணத்தை கொடுக்க அதற்கு முத்து வெஜிடபிள் பிரியாணிக்கே காய்கறி வாங்க தெரியலை.

இவன் எப்படி பிசினஸ் பண்ண போறானோ என்று நக்கல் அடிக்க மீனாவும் சிரித்ததும் ரோகிணி அவமானப்பட்டு நிற்கிறார். அடுத்ததாக அண்ணாமலை அது இருக்கட்டும் நாளைக்கு நிறைய சமைக்கணும் முத்து என்ன நாள் என்று உனக்கு தெரியுமா? என்று கேட்க கொஞ்ச நேரம் யோசித்த முத்து இவன் உங்க பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிய நாளா என்று சொல்ல மீனா என்னுடைய கல்யாண நாள் என்று முத்து சொல்வார் என்று ஆசையோடு எதிர்பார்த்து நிற்கிறார்.

ஆனால் முத்து அதை யோசித்துப் பார்த்தும் வேற ஒன்னும் இல்ல என்று சொன்னதும் மீனா கோபித்துக் கொண்டு ரூமுக்கு போக அண்ணாமலை உன்னோட கல்யாண நாள். அதை கூட மறந்திட்டியா? நீ போய் மீனாவை சமாதானப்படுத்து என்று அனுப்பி வைக்கிறார். ரூமுக்கு வந்த முத்துவிடம் மீனா கோபப்பட எனக்கு எடுத்ததும் அந்த ஓடுகாலி ஓடினது தான் ஞாபகம் வருது. நமக்கு பொண்ணு பார்த்து தட்டு மாற்றி நிச்சயதார்த்தம் நடந்து, முறையாக கல்யாணம் நடந்திருந்தால் ஞாபகம் இருக்கும் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+